தண்டவாளத்தில் சிலிண்டரை வைத்து ரயில் மீது மோத விட்ட இன்ஜினியர்... காரணத்தை கேட்டு திடுக்கிட்ட போலீஸ்

தண்டவாளத்தில் சிலிண்டரை வைத்து ரயில் மீது மோத விட்ட இன்ஜினியர் சிக்கியுள்ளார். அவர் சொன்ன காரணத்தை கேட்டு போலீசார் அதிர்ச்சியில் உறைந்து விட்டனர்.

தண்டவாளத்தில் சிலிண்டரை வைத்து ரயில் மீது மோத விட்ட இன்ஜினியர்... காரணத்தை கேட்டு திடுக்கிட்ட போலீஸ்

ஆந்திர பிரதேச மாநிலம் சித்தூர் அருகே உள்ள செல்லூர் பகுதியை சேர்ந்தவர் கொங்காரா ராமிரெட்டி. இவர் பி.டெக் பட்டதாரி ஆவார். இவரது வீட்டிற்கு அருகே ரயில்வே தண்டவாளம் செல்கிறது. இந்த பகுதி சித்தூர் ரயில்வே ஜங்ஷன் எல்லைக்குள் வருகிறது. இந்த பகுதியை கடக்கும் லோகோமோட்டிவ் டிரைவர்கள், தண்டவாளத்தில் ஏதேனும் ஒரு பொருள் அவ்வப்போது இருப்பதாக புகார் தெரிவித்து வந்தனர்.

தண்டவாளத்தில் சிலிண்டரை வைத்து ரயில் மீது மோத விட்ட இன்ஜினியர்... காரணத்தை கேட்டு திடுக்கிட்ட போலீஸ்

எனவே இது தொடர்பாக ரயில்வே பாதுகாப்பு படை உடனடியாக விசாரணை நடத்த தொடங்கியது. ஆனால் லோகோமோட்டிவ் டிரைவர்களின் புகார் தொடர்பாக எவ்விதமான தடயமும் ரயில்வே பாதுகாப்பு படைக்கு சிக்கவில்லை. இப்படிப்பட்ட சூழலில், பேஸ்புக் மற்றும் வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் சமீபத்தில் வீடியோ ஒன்று வைரலாக பரவ தொடங்கியது.

தண்டவாளத்தில் சிலிண்டரை வைத்து ரயில் மீது மோத விட்ட இன்ஜினியர்... காரணத்தை கேட்டு திடுக்கிட்ட போலீஸ்

இந்த வீடியோ கொங்காரா ராமிரெட்டியின் வீட்டிற்கு அருகே செல்லும் தண்டவாளத்தில் எடுக்கப்பட்டிருந்தது. ரயில் வரும் நேரத்தில், தண்டவாளத்தின் ஒரு பகுதியில் மோட்டார்சைக்கிளையும், மறு பகுதியில் எல்பிஜி கேஸ் சிலிண்டரையும் வைத்து இந்த வீடியோ பதிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால் ரயில் நெருங்கி வந்த உடனேயே தண்டவாளத்தில் இருந்து மோட்டார்சைக்கிள் எடுக்கப்பட்டு விட்டது.

தண்டவாளத்தில் சிலிண்டரை வைத்து ரயில் மீது மோத விட்ட இன்ஜினியர்... காரணத்தை கேட்டு திடுக்கிட்ட போலீஸ்

எனினும் சிலிண்டரின் மீது ரயில் மோதியது. இதனால் சிலிண்டர் தூக்கி வீசப்பட்டது. மிகவும் வைரலாக பரவ தொடங்கிய இந்த வீடியோ, ரயில்வே பாதுகாப்பு படையின் கவனத்திற்கும் உடனடியாக சென்றது. எனவே இது தொடர்பான விசாரணையை ரயில்வே பாதுகாப்பு படை மீண்டும் முடுக்கி விட்டது. இந்த வீடியோவில் இருந்த பைக்கின் பதிவு எண்ணை வைத்து விசாரணை நடத்தப்பட்டது.

தண்டவாளத்தில் சிலிண்டரை வைத்து ரயில் மீது மோத விட்ட இன்ஜினியர்... காரணத்தை கேட்டு திடுக்கிட்ட போலீஸ்

இதில், இந்த பைக் கொங்காரா ராமிரெட்டியின் பெயரில் பதிவு செய்யப்பட்டிருந்ததை ரயில்வே பாதுகாப்பு படை கண்டறிந்தது. எனவே கொங்காரா ராமிரெட்டியை பிடித்து ரயில்வே பாதுகாப்பு படையினர் விசாரணை நடத்தினர். இதில், பல்வேறு அதிர்ச்சிகரமான தகவல்களை கொங்காரா ராமிரெட்டி வெளியிட்டுள்ளார்.

தண்டவாளத்தில் சிலிண்டரை வைத்து ரயில் மீது மோத விட்ட இன்ஜினியர்... காரணத்தை கேட்டு திடுக்கிட்ட போலீஸ்

கொங்காரா ராமிரெட்டி யூ-டியூப் சேனல் ஒன்றை நடத்தி வந்துள்ளார். இதில், ரயில்வே தண்டவாளங்களில் அபாயகரமான ஸ்டண்ட்களை செய்து வீடியோக்கள் பதிவேற்றப்பட்டு வந்துள்ளன. அதாவது ரயில்வே தண்டவாளத்தில் ஏதேனும் ஒரு பொருளை கொங்காரா ராமிரெட்டி வைத்து விடுவார். இதன்பின் அந்த பொருளின் மீது ரயில் மோதுவதை வீடியோவாக எடுத்து யூ-டியூப்பில் வெளியிடுவார்.

தண்டவாளத்தில் சிலிண்டரை வைத்து ரயில் மீது மோத விட்ட இன்ஜினியர்... காரணத்தை கேட்டு திடுக்கிட்ட போலீஸ்

கொங்காரா ராமிரெட்டி இதுவரை 47 வீடியோக்களை யூ-டியூப்பில் பதிவேற்றியுள்ளார். இதில், 43 வீடியோக்கள் மிகவும் அபாயகரமானவையாக இருந்துள்ளன. காய்கறிகள், பழங்கள், சிக்கன் துண்டுகள், பொம்மைகள், பட்டாசுகள், சைக்கிள் செயின்கள் உள்ளிட்ட பொருட்களை ரயில்வே தண்டவாளங்களில் வைத்து அவர் வீடியோக்களை எடுத்துள்ளார். ஆனால் அந்த வீடியோக்கள் பெரிய அளவில் வைரல் ஆகவில்லை.

தண்டவாளத்தில் சிலிண்டரை வைத்து ரயில் மீது மோத விட்ட இன்ஜினியர்... காரணத்தை கேட்டு திடுக்கிட்ட போலீஸ்

தற்போதைய கால கட்டத்தில் வீடியோக்கள் மூலம் அதிகப்படியான வருவாய் ஈட்ட முடிகிறது. எனவே அதிக பார்வையாளர்களை ஈர்க்க வேண்டும் என்பதற்காகவும், வீடியோ வைரல் ஆக வேண்டும் என்பதற்காகவும் ஒரு சிலர் இணையத்தில் எந்த அளவிற்கு வேண்டுமானாலும் செல்ல தயாராக இருக்கின்றனர். இதன் விளைவுதான் கொங்காரா ராமிரெட்டி வெளியிட்ட பைக், சிலிண்டர் வீடியோ.

தண்டவாளத்தில் சிலிண்டரை வைத்து ரயில் மீது மோத விட்ட இன்ஜினியர்... காரணத்தை கேட்டு திடுக்கிட்ட போலீஸ்

வீடியோ வைரல் ஆகி அதிக பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதற்காகதான் கொங்காரா ராமிரெட்டி இந்த வீடியோவை எடுத்துள்ளார். அவர் நினைத்தபடியே வீடியோ வைரல் ஆகி விட்டது என்பதோ உண்மைதான். ஆனால் அதன் விளைவாக கொங்காரா ராமிரெட்டி தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். ஆம், விசாரணைக்கு பின் அவர் உடனடியாக கைது செய்யப்பட்டு விட்டார்.

தண்டவாளத்தில் சிலிண்டரை வைத்து ரயில் மீது மோத விட்ட இன்ஜினியர்... காரணத்தை கேட்டு திடுக்கிட்ட போலீஸ்

ரயில்வே சட்டம் 1989ன் செக்ஸன் 153 மற்றும் 143 ஆகியவற்றின் கீழ் கொங்காரா ராமிரெட்டி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கொங்காரா ராமிரெட்டி வெளியிட்ட வீடியோக்கள் தற்போது அந்த சேனலில் இருந்து நீக்கப்பட்டு விட்டன. விரைவாக புகழ்பெற வேண்டும் என்பதற்காக இது போன்ற முட்டாள்தனமான செயல்களில் இளைஞர்கள் ஈடுபடக்கூடாது என ரயில்வே பாதுகாப்பு படை எச்சரித்துள்ளது.

தண்டவாளத்தில் சிலிண்டரை வைத்து ரயில் மீது மோத விட்ட இன்ஜினியர்... காரணத்தை கேட்டு திடுக்கிட்ட போலீஸ்

ஏனெனில் இது போன்ற செயல்கள் ரயில் பயணிகளின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக விளங்குகின்றன. கொங்காரா ராமிரெட்டி வெளியிட்ட வீடியோவில் இருந்தது ஹோண்டா சிபி ஷைன் பைக் ஆகும். ரயில் மோதுவதற்கு முன்பாக அந்த மோட்டார்சைக்கிள் அப்புறப்படுத்தப்பட்டு விட்டது. ஆனால் எல்பிஜி சிலிண்டரின் மீது ரயில் மோதியுள்ளது.

தண்டவாளத்தில் சிலிண்டரை வைத்து ரயில் மீது மோத விட்ட இன்ஜினியர்... காரணத்தை கேட்டு திடுக்கிட்ட போலீஸ்

ரயில் மோதிய சிலிண்டரில் கேஸ் இருந்ததா? இல்லையா? என்பது உறுதியாக தெரியவில்லை. ஆனால் நல்ல வேளையாக இதன் தாக்கம் பெரிய அளவில் இல்லை. இல்லாவிட்டால் சிலிண்டர் வெடித்திருக்கலாம். இது தொடர்பான வீடியோவை நீங்கள் கீழே காணலாம்.

பொதுவாக ரயில்வே தண்டவாள பாதுகாப்பு என்பது மிகவும் கடுமையாக இருக்க வேண்டும். ஆனால் நமது நாட்டில் அவ்வாறு இருப்பதில்லை. சில சமயம் ரயில்கள் வரும் நேரத்தில் வாகனங்கள் தண்டவாளங்களில் சிக்கி கொள்ளும் சம்பவங்களும் கூட நடக்கின்றன. எனினும் அதிர்ஷ்டவசமாக ரயில் மோதுவதில் இருந்து அவை தப்பி விடுகின்றன.

தண்டவாளத்தில் சிலிண்டரை வைத்து ரயில் மீது மோத விட்ட இன்ஜினியர்... காரணத்தை கேட்டு திடுக்கிட்ட போலீஸ்

அத்துடன் நேரத்தை மிச்சம் பிடிக்க வேண்டும் என்பதற்காக ஒரு சிலர் தவறான நேரத்தில் தண்டவாளங்களை கடக்கின்றனர். இதன் காரணமாகவும் சில சமயங்களில் விபத்துக்கள் நடைபெறுகின்றன. இது போன்ற செயல்களை செய்வதும், ரயில் வரும் நேரத்தில் தண்டவாளங்களில் ஏதேனும் பொருட்களை வைப்பதும் மிகவும் அபாயகரமானது.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Youth Puts Bike, Gas Cylinder On Rail Track For Youtube Views Gets Arrested. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X