யூடியூப் மூலம் நல்ல வருமானம் போல! செகண்ட்-ஹேண்டில் வாங்காமல் புதுசாவே காரை வாங்கி இருக்கலாமே

பி.எம்.டபிள்யூ (BMW) கார்களுக்கு உலகம் முழுவதுமே வரவேற்பு உள்ளதை பற்றி நான் கூற வேண்டியது இருக்காது என நினைக்கிறேன். இந்தியாவில் மெர்சிடிஸ் நிறுவனத்துக்கு அதிக எண்ணிக்கையில் சொகுசு கார்களை விற்பனை செய்யக்கூடிய நிறுவனமாக பிஎம்டபிள்யூ விளங்குகிறது. இத்தகைய பிரபலமான நிறுவனத்தின் கார்களை இந்தியாவில் பலரும் ஆர்வத்துடன் வாங்கி வருகின்றனர். அந்த வரிசையில், பிரபலமான யூடியூபர் (Youtuber) ஒருவர் பிஎம்டபிள்யூ எக்ஸ்1 (X1) காரை செகண்ட்-ஹேண்டில் வாங்கியுள்ளார். யார் அவர் என்பதை பற்றியும், அவர் வாங்கியுள்ள பிஎம்டபிள்யூ காரை பற்றியும் தான் இனி இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.

இணையத்தின் வளர்ச்சியினால் பலருக்கு யூடியூப் மற்றும் இன்ஸ்டாகிராமில் பதிவுகளையும், வீடியோக்களையும் பதிவிடுவது 2வது தொழிலாக மாறியுள்ளது. அந்த வகையில், யூடியூப்பராக மாறியவர் தான், அஜய் சங்கர் (Ajay Shankar) ஆவார். ஆரம்பத்தில் எல்லாரையும் போல் தனது அன்றாட வாழ்வில் நடக்கும் சுவாரஸ்யமான நிகழ்வுகளை பதிவுகளாக இணையத்தில் அஜய் சங்கர் பதிவிட்டு வந்தார்.

youtuber buys second-hand bmw car

அதன்பின், தனது சுய தொழில் தொடர்பான பதிவுகளை பதிவிட ஆரம்பித்தார். அத்தகைய பதிவுகள் பார்வையாளர்களை வெகுவாக ஈர்த்தன. ஏனெனில், அஜய் சங்கர் பார்த்து வருவது வீடுகளுக்கு உள்ளே மேற்கொள்ளப்படும் அலங்கரிப்பு வேலைகள் ஆகும். வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கேற்ப வீட்டின் உட்புறத்தை டிசைன் செய்து, அதனை ஆட்களை வைத்து முடித்துக் கொடுப்பதுதான் அஜய் சங்கரின் தொழில் ஆகும்.

அப்போது அவர் கஸ்டமர்களின் வீடுகளில் எடுக்கப்படும் படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் பார்வையாளர்களை கவர்ந்ததை அடுத்து, அவை அஜய் சங்கரின் தொழிலுக்கு விளம்பரமாக அமைந்தன. இதனாலேயே தனது தொழில் தொடர்பான பதிவுகளை பதிவிடுவதற்காகவே அஜய் சங்கர் தனியாக இன்ஸ்டாகிராம் கணக்கை ஆரம்பித்தார். தொழிலில் இவரது வளர்ச்சிக்கு இணையத்தையும் ஒரு காரணமாகவே சொல்ல வேண்டும்.

youtuber buys second-hand bmw car

இந்த நிலையில், அஜய் சங்கரின் 'டி.ஆர் இண்டீரியர்' என்கிற இன்ஸ்டாகிராம் பதிவில், பிஎம்டபிள்யூ எக்ஸ்1 காரை அவர் ஷோரூமில் மனைவி மற்றும் மகள் உடன் குடும்பமாக டெலிவிரி பெறும் வீடியோ மற்றும் படங்கள் இடம்பெற்றுள்ளன. அஜய் சங்கர் வாங்கியிருப்பது வெள்ளை நிறத்திலான செகண்ட்-ஹேண்ட் பிஎம்டபிள்யூ எக்ஸ்1 கார் ஆகும். அதாவது, புத்தம் புதிய கார் கிடையாது.

இது பிராண்ட்-நியூ எக்ஸ்1 கார் கிடையாது என்பதை பார்த்தாலே தெரியும். ஏனெனில், இப்போது விற்பனையில் உள்ள எக்ஸ்1 கார் ஆனது முற்றிலும் மாடர்ன் தரத்திலானது ஆகும். பிஎம்டபிள்யூ எக்ஸ்1 காரின் எக்ஸ்-ஷோரூம் விலை தற்சமயம் பெட்ரோல் என்ஜின் உடன் ரூ.49.90 லட்சம் மற்றும் டீசல் என்ஜின் உடன் ரூ.52.90 லட்சம் ஆகும்.

youtuber buys second-hand bmw car

பிளாக் சாப்பையர் மெட்டாலிக், எம் போர்டிமா ப்ளூ மெட்டாலிக், ஸ்டோர்ம் பே மெட்டாலிக், ஸ்பேஸ் சில்வர் மெட்டாலிக் மற்றும் அல்பைன் வெள்ளை என 5 விதமான கலர் ஆப்ஷன்களில் விற்பனை செய்யப்படும் பிஎம்டபிள்யூ எக்ஸ்1 காருக்கு இந்தியாவில் விற்பனையில் ஆடி க்யூ3 (Audi Q3) கார் போட்டியாக உள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் விற்பனை செய்யப்படும் விலை குறைவான பிஎம்டபிள்யூ கார்களுள் ஒன்று எக்ஸ்1 எனலாம். இத்தகைய காரை தான் செகண்ட்-ஹேண்டில் யூடியூப்பர் அஜய் சங்கர் வாங்கியுள்ளார். இவ்வாறு, விலையுயர்ந்த கார்களை செகண்ட்-ஹேண்டில் வாங்கும் பழக்கம் மக்களிடையே மெதுவாக அதிகரித்து வருகிறது.

More from DriveSpark

Article Published On: Monday, February 17, 2025, 23:34 [IST]
English summary
Youtuber ajay shankar buys second hand bmw x1 car
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X