ரூ1.27 கோடி காரை செகண்ட் ஹேண்டில் வாங்கிய டிடிஎஃப் வாசன் நண்பர்! அப்படி இந்த கார்ல என்ன இருக்குது தெரியுமா?
பிரபல யூடியூபரான டிடிஎஃப் வாசனை நண்பர் அஜீஸ் தற்போது சொந்தமாக மெர்சிடிஸ் நிறுவனத்தின் எஸ்எல்கே என்ற காரை செகண்ட் ஹேண்டில், வாங்கி இருக்கிறார். இது குறித்த வீடியோவை அவர் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். இந்த கார் பார்க்க ஸ்டைலாக இருக்கிறது. சினிமாக்களில் ஹீரோக்கள் பயன்படுத்தும் கார் போல இந்த கார் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த காரின் விலை என்ன இதில் இருக்கும் சிறப்பு அம்சங்கள் என்ன என்ற விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
பைக் ரைடிங் மூலம் யூடியூபில் வீடியோ வெளியிட்டு பிரபலமானவர் டிடிஎஃப் வாசன். இவர் பல்வேறு விதமான சர்ச்சைகளில் சிக்கியதால் இவர் தமிழகம் முழுவதும் அறியப்பட்டவராக இருக்கிறார். இவரது யூடியூப் வீடியோக்களை தொடர்ந்து பார்க்கும் நபர்களுக்கு அஜிஸ் குறித்து நிச்சயம் தெரிந்திருக்கும். அஜிஸ் மற்றும் டிடிஎஃப் வாசன் சேர்ந்து தான் அடிக்கடி பைக் ரைடிங் செய்வார்கள்.

இந்நிலையில் டிடிஎஃப் வாசன் பைக் மற்றும் கார் ரைடிங் செய்வதில் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்ட நிலையில், அஜீஸ் தனியாக அவ்வப்போது வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் அஜீஸ் மற்றும் டிடிஎஃப் வாசன் ஆகிய இருவரும் இணைந்து வாகனங்களுக்கான உதிரி பாகங்களை விற்கும் கடை ஒன்றை நடத்தி வருகிறார்கள். இந்நிலையில் அஜீஸ் சொந்தமாக ஒரு கார் வாங்கி உள்ளதாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை செய்துள்ளார்.
இந்த வீடியோவில் அவர் மெர்சிடிஸ் நிறுவனத்தின் எஸ்எல்கே என்ற காரில் அமர்ந்து வீடியோ போட்டுள்ளார். இந்த கார் இரண்டு சீட்டர் கொண்ட கன்வெர்டபிள் ரக காராகவும், இந்த காரை மெர்சிடிஸ் நிறுவனம் தற்போது தயாரிப்பில் இருந்து நிறுத்திவிட்டது. கடந்த 2020ம் ஆண்டு இந்த கார் முற்றிலுமாக நிறுத்தப்பட்டு விட்டது. இதனால் அஜீஸ் இந்த காரை செகண்ட் ஹேண்டில் வாங்கி இருக்கலாம் என தெரிகிறது.

இந்த கார் கடைசியாக விற்பனையில் இருந்தபோது இரண்டு விதமான வேரியண்ட்களில் விற்பனையாகி வந்தது. அதன்படி 350 என்ற வேரியன்ட் ரூ79.60 லட்சம் என்ற விலையிலும் 55 ஏஎம்ஜி என்ற வேரியண்ட் ரூ1.27 கோடி என்ற நிலையிலும் விற்பனையாகி வந்தது. இதில் ஒரு வேரியண்ட் காரை தான் இவர் வாங்கி இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 2 பேரின் காருக்கும் இன்ஜின் திறன் தான் வேறுபாடாக இருக்கிறது.
எஸ்எல்கே 3498 சிசி இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதுவே 55 ஏஎம்ஜி வேரியண்டை பொறுத்தவரை 5461 சிசி இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இரண்டு இன்ஜின் ஆப்ஷனும் ஆட்டோமேட்டிக் கியருடன் தான் இணைக்கப்பட்டுள்ளது. இந்த கார் 10 விதமான கலர் ஆப்ஷன்களில் விற்பனையாகி வந்தது. இதில் கருப்பு நிற காரை தான் அஜீஸ் வாங்கி உள்ளார்.

இந்தக் காரின் மைலேஜ் என்பது ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 11.11கிமீ மைலேஜ் தான் வழங்குகிறது. இந்த கார் ஒரு ரியர் வீல் டிரைவ் காராகும். இதில் 350 வேரியண்ட் கார் 306பிஎச்பி பவரையும் 370என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதுவே 55 ஏஎம்ஜி வேரியண்ட் கார் 421 பிஎச்பி பவரையும், 540என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த கார் கன்வெர்டபிள் அம்சம் கொண்ட கார் தான். அதாவது இந்த காரின் மேற்கூரையை ஒரு பட்டனை அழுத்தினால் மடித்து பின்னால் வைத்துக் கொள்ளலாம். இந்த காரில் இரண்டு பேர் மட்டுமே பயணம் செய்ய முடியும். இந்த காரின் ஸ்டைல் மற்றும் வடிவமைப்பை பொறுத்து மார்க்கெட்டில் இந்த கார் பெண்களுக்கான கார் என்ற பேச்சு இருந்து வந்தது. ஆனால் மெர்சிடீஸ் நிறுவனம் இதை ஒரு ஸ்போர்ட்ஸ் காராகவே உருவாக்கியது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: யூடியூபர் அஜீஸ் இந்த காரை வாங்கியது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. இவர் இந்த காரை சாலையில் ஓட்டி செல்லும்போது சட்ட விதிமுறைகளை மீறாமல் சட்டப்படி வாகனத்தை ஓட்ட வேண்டும் . இவர் போன்ற யூடியூபர்கள் அடிக்கடி யூடியூப் வீடியோக்களை சட்டம் விதிமுறைகளை மீறி வாகனம் ஓட்டுவதால் பல இளைஞர்கள் தவறான பாதைக்கு வழி நடத்தப்படுகிறார்கள்.


Click it and Unblock the Notifications









