4 கோடி ரூபாய் காருக்கு பெட்ரோல் போட வந்தது அவரா! இனி அந்த பங்க் வாசல்லயே நிறைய பேர் படுத்து கெடக்க போறாங்க!

யூடியூப் (YouTube) போன்ற தளங்கள் நாளுக்கு நாள் மிகவும் பிரம்மாண்டமான வளர்ச்சியை சந்தித்து வருகின்றன. யூடியூப் தளத்தில் வைரல் வீடியோக்களை (Viral Videos) உருவாக்க வேண்டும் என்பதற்காக, வித்தியாசமான காரியங்களை பலர் செய்து கொண்டுள்ளனர். இந்த வரிசையில் ஜெய் ஸ்ரீ ராம் (Jai Shree Ram) என ஹிந்தியில் எழுதப்பட்ட லம்போர்கினி (Lamborghini) காரின் வீடியோ ஒன்று, தற்போது வைரல் ஆகி வருகிறது.

ஹிந்தி மொழி பேசும் மக்கள் மத்தியில், ஐ யம் நிதின் என்ற யூடியூப் சேனல் மிகவும் பிரபலம். இந்த யூடியூப் சேனலில்தான், ஜெய் ஸ்ரீ ராம் என எழுதப்பட்ட லம்போர்கினி காரின் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. அனேகமாக ஜெய் ஸ்ரீ ராம் என எழுதப்பட்ட உலகின் முதல் லம்போர்கினி கார் இதுவாகதான் இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Lamborghini Huracan With Jai Shree Ram

ஜெய் ஸ்ரீ ராம் என எழுதப்பட்டிருப்பது, லம்போர்கினி ஹூராகேன் (Lamborghini Huracan) கார் ஆகும். இது இந்த சேனலை நடத்தி வரும் யூடியூபருக்கு சொந்தமானது என தெரிகிறது. முந்தைய வீடியோ ஒன்றில் தனது பார்வையாளர்களுக்கு வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றும் நோக்கத்திலேயே, லம்போர்கினி ஹூராகேன் காரில், அவர் ஜெய் ஸ்ரீ ராம் என எழுதியுள்ளார்.

20 லட்சம் லைக்குகள் மற்றும் 1 லட்சம் கமெண்ட்கள் கிடைத்தால், தனது லம்போர்கினி ஹூராகேன் காரின் முன் பகுதியில் உள்ள பானெட்டில், ஜெய் ஸ்ரீ ராம் என ப்ரிண்ட் செய்வதாக இந்த யூடியூபர் தனது பார்வையாளர்களுக்கு வாக்குறுதி அளித்திருந்தார். அவர் கேட்டதை விட அதிக லைக்குகள் மற்றும் கமெண்ட்களை பார்வையாளர்கள் வாரி வழங்கி விட்டனர்.

Lamborghini With Jai Shree Ram

எனவே தான் செய்த சத்தியத்தை காப்பாற்றுவதற்காக, லம்போர்கினி ஹூராகேன் காரின் முன் பகுதி பானெட்டில், ஜெய் ஸ்ரீ ராம் என அவர் ஹிந்தியில் ப்ரிண்ட் செய்துள்ளார். இந்த வீடியோவில், யூடியூபர் தனது லம்போர்கினி ஹூராகேன் காரை ஸ்டிக்கர் கடைக்கு எடுத்து செல்வதை நம்மால் காண முடிகிறது. அப்போது காரின் கண்ட்ரோல்களை எல்லாம் அவர் பார்வையாளர்களுக்கு விளக்குகிறார்.

அத்துடன் பங்க் ஒன்றில், பெட்ரோலும் (Petrol) நிரப்புகிறார். அப்போது தனது லம்போர்கினி ஹூராகேன் காருடன் செல்ஃபி எடுத்து கொள்ள, பெட்ரோல் பங்க் ஊழியர்களுக்கு அவர் அனுமதியையும் வழங்கினார். இந்த வீடியோ தற்போது யூடியூப் தளத்தில் பார்வையாளர்கள் பலரின் கவனத்தையும் வெகுவாக ஈர்த்துள்ளது.

இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் லம்போர்கினி ஹூராகேன் காரின் ஆரம்ப விலையே (Price) சுமார் 3.80 கோடி ரூபாய் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தோராயமான ஆன் ரோடு விலையாகும். இவ்வளவு விலை உயர்ந்த ஒரு காரில், ஜெய் ஸ்ரீ ராம் என எழுதப்பட்டிருப்பது உண்மையிலேயே கவனம் ஈர்க்க கூடிய ஒரு விஷயம்தான் என்பதில் சந்தேகமில்லை.

லம்போர்கினி போன்ற நிறுவனங்களின் கார்களை இந்திய சாலைகளில் பார்ப்பது என்பது இன்றளவும் அபூர்வமான ஒரு விஷயமாகதான் உள்ளது. நிலைமை இப்படி இருக்கும்போது, ஜெய் ஸ்ரீ ராம் என எழுதப்பட்ட இந்த லம்போர்கினி ஹூராகேன் காரை மக்கள் பலரும் மிகவும் ஆச்சரியத்துடன் பார்த்து வருகின்றனர்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவை பொறுத்தவரையில், லம்போர்கினி ஹூராகேன், லம்போர்கினி அவென்டெடார் (Lamborghini Aventador) மற்றும் லம்போர்கினி உருஸ் (Lamborghini Urus) போன்ற செயல்திறன் மிக்க விலை உயர்ந்த கார்கள் எல்லாம், பெரும்பாலும் திரையுலகினர் மற்றும் தொழில் அதிபர்கள் போன்றவர்களிடம் மட்டும்தான் இருக்கும்.

ஆனால் யூடியூபர் ஒருவர், லம்போர்கினி ஹூராகேன் காரை சொந்தமாக வைத்திருப்பது எங்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. இந்தியாவில் உண்மையிலேயே லம்போர்கினி போன்ற நிறுவனங்களின் கார் விற்பனை அதிகரித்து கொண்டு வருகிறது. எனவே எதிர்காலத்தில் இந்தியாவில் லம்போர்கினி போன்ற நிறுவனங்களின் கார்களை பார்ப்பது சாதாரணமான ஒரு விஷயமாக மாறலாம்.

Article Published On: Wednesday, August 16, 2023, 14:57 [IST]
English summary
Youtuber arrives at petrol bunk in lamborghini huracan viral video
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+