முதல் மனைவிக்கு நடிகரின் 'காஸ்ட்லீ' பரிசு... 2வது மனைவி உடன் ஷோரூமுக்கு வந்ததுதான் ஹைலைட்டே!

யூடியூப் (Youtube) மூலமாக இன்றைய மாடர்ன் உலகில் வாழ்க்கையை மாற்றிக் கொண்டவர்கள் ஏராளம். ஏனெனில், யூடியூப், இன்ஸ்டாகிராம் (Instagram) போன்ற சமூக வலைத்தளங்களின் மூலமாக கணிசமான வருவாய் கிடைத்து வருகிறது. பணத்தை விட முக்கியமாக, யூடியூப்பில் வீடியோக்களை பதிவிட்டே சினிமாவில் நுழைந்தவர்கள் கூட ஏகப்பட்ட பேர் இருக்கின்றனர். அத்தகையவர்கள் ஒருவர், தனது மனைவிக்கு விலையுயர்ந்த யமஹா ஸ்கூட்டர் (Yamaha Scooter)-ஐ பரிசளித்து கவனத்தை ஈர்த்துள்ளார். யார் அவர் என்பதை பற்றியும், அவர் தனது மனைவிக்கு வாங்கி கொடுத்துள்ள யமஹா ஸ்கூட்டரை பற்றியும் தான் இனி இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.

இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் 2-வீலர்களை விற்பனை செய்யக்கூடிய நிறுவனங்களுள் ஒன்றாக விளங்கும் யமஹாவில் இருந்து ஆர்15, எம்டி-15 போன்ற பைக்குகளுக்கும், ஃபேஸினோ, ரே இசட்.ஆர் போன்ற ஸ்கூட்டர்களுக்கும் தான் விற்பனை செய்யப்படுகின்றன என நம்மில் நிறைய பேர் நினைத்துக் கொண்டிருக்கின்றனர்.

youtuber gifts scooter to wife

ஆனால், ஏரோக்ஸ் 155 (Aerox 155) போன்ற மேக்ஸி-ஸ்கூட்டரும் யமஹாவில் இருந்து விற்பனை செய்யப்படுகிறது. இந்த தொகுப்பில் நாம் பார்க்க போகும் யூடியூபர் தனது மனைவிக்கு என்ன மாதிரியான ஸ்கூட்டரை பரிசாக வழங்கியுள்ளார் என்பதை இந்நேரம் யூகித்து இருப்பீர்கள் என நினைக்கிறேன். ஆம்... யமஹா ஏரோக்ஸ் 155 தான்.

இந்த ஸ்கூட்டரை பற்றி பார்ப்பதற்குமுன், இதனை வாங்கியுள்ள யூடியூபரை பற்றி பார்த்துவிடுவோம். இவரது பெயர், பஷீர் பாஷி (Basheer Bashi). கேரளாவின் எர்ணாகுளத்தை சேர்ந்தவரான பஷீர் பாஷிக்கு சிறு வயதில் இருந்தே சினிமா துறைக்குள் நுழைய வேண்டும் என்கிற ஆசை இருந்துள்ளது. இதன் வெளிப்பாடாக மாடலிங்கில் ஈடுப்பட்டவர், பின்னர் இணையத்தின் வளர்ச்சியை பயன்படுத்தி யூடியூப்பர் ஆக உருவெடுத்தார்.

youtuber gifts scooter to wife

பஷீரின் வீடியோக்கள் கணிசமான பார்வையாளர்களை பெற்றதை அடுத்து, சிலர் இவரை தங்களது குறும்படங்களில் நடிக்க வைத்தனர். அதன் மூலம் கிடைத்த பிரபலத்தில் 2018ஆம் ஆண்டில் மலையாள பிக்பாஸ் (Bigg Boss) வீட்டிற்குள் நுழைந்தார். அதன்பின், டிவி நிகழ்ச்சிகள், மலையாள திரைப்படங்கள் என பஷீர் பாஷியின் சினிமா வாழ்க்கை சென்றுக் கொண்டிருக்கிறது.

இந்த நிலையில், பஷீர் பாஷி தனது முதல் மனைவி சுஹானா-வுக்கு யமஹா ஏரோக்ஸ் 155 ஸ்கூட்டரை பரிசளித்துள்ளார். ஆம்... பஷீர் பாஷிக்கு இரு மனைவிகள் உள்ளனர். முதல் மனைவி சுஹானாவின் சம்பந்தத்துடன் மஷூரா என்பவரை பஷீர் பாஷி 2வது திருமணம் செய்துக் கொண்டார்.

youtuber gifts scooter to wife

யமஹா ஏரோக்ஸ் 155 ஸ்கூட்டரை பற்றி சொல்ல வேண்டுமென்றால், ஸ்டாண்டர்ட் மற்றும் எஸ் என 2 விதமான வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படும் இந்த மேக்ஸி-ஸ்கூட்டரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் தற்சமயம் ரூ.1.50 லட்சம் & ரூ.1.54 லட்சமாக உள்ளன. பிரபலமான யமஹா ஆர்15 பைக்கில் பொருத்தப்படும் அதே 155சிசி லிக்யுடு-கூல்டு என்ஜின் தான் சிறிது மாற்றம் செய்யப்பட்டு இந்த ஸ்கூட்டரில் பொருத்தப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: நிறைய அம்சங்களில் ஆர்15 மற்றும் எம்டி15 பைக்குகளை ஒத்துக் காணப்படுவதினாலேயே யமஹா ஏரோக்ஸ் 155 ஸ்கூட்டரை வாங்க நிறைய பேர் விரும்புகின்றனர். ஆனால், அதன் சற்று அதிகப்படியான விலையினால் சிலரால் வாங்க முடியாமல் போகும் நிலையில், நடிகர் பஷீர் பாஷி தனது மனைவிக்காக இந்த ஸ்கூட்டரை வாங்கிக் கொடுத்திருப்பது இணையத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது.

More from DriveSpark

Article Published On: Monday, February 10, 2025, 23:13 [IST]
English summary
Youtuber basheer bashi gifts yamaha aerox 155 to his first wife suhana
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X