மிக மிக காஸ்ட்லியான காரை வாங்கிய யுட்யூபர்! சீக்கிரமே வேலைய விட்டுட்டு யுட்யூப் சேனல ஆரம்பிச்சுட வேண்டியதுதான்

யுட்யூப்-இல் வரும் வருமானத்தை ஒரு சிலர் முன்னணி தொழிலதிபர்களுக்கு இணையான ஆடம்பர வாழ்க்கையைக் கொண்டிருக்கின்றனர் என்று சொன்னால் நம்மில் ஒரு சிலர் நம்பமாட்டார்கள். ஆனால், அதை நம்பிதான் ஆக வேண்டும். இதற்கு சான்றாக இந்தியாவைச் சேர்ந்த யுட்யூபர்கள் பலர் இருக்கின்றனர். அவர்களில் ஒருவரே பிரபல யுட்யூபர் மற்றும் நடிகர் புவன் பம் ஆவார்.

யுட்யூபில் வரும் வருமானத்தை வைத்து இவர் மிகப் பெரிய ஆடம்பர வாழ்க்கையை வாழ்ந்துக் கொண்டிருக்கின்றார். இதை உறுதிப்படுத்தும் விதமாக அவர் தற்போது மிக மிக விலை உயர்ந்த சொகுசு கார் ஒன்றை வாங்கி இருக்கின்றார். அவர் லேண்ட் ரோவர் டிஃபெண்டர் எஸ்யூவி (Land Rover Defender SUV) ரக ஆடம்பர காரையே வாங்கி இருக்கின்றார்.

Bhuvan bam land rover defender

இந்த காரின் ஆரம்ப விலையே ரூ. 97 லட்சம் ஆகும். இதன் அதிகபட்ச விலை ரூ. 1.38 கோடி ஆகும். இரண்டும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது. இத்தகைய மிக மிக விலையுயர்ந்த காரையே யுட்யூபர் புவன் பம் வாங்கி இருக்கின்றார்.

இது சக யுட்யூபர்களையும், இந்திய சொகுசு கார் விரும்பிகளையும் மிகப் பெரிய ஆச்சரியத்தில் மூழ்க செய்யும் வகையில் அமைந்திருக்கின்றது. இந்தியாவில் லேண்ட் ரோவர் டிஃபெண்டர் ஒட்டுமொத்தமாக மூன்று விதமான தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கிறது. டிஃபெண்டர் 130 (Defender 130), டிஃபெண்டர் 110 (Defender 110) மற்றும் டிஃபெண்டர் 90 (Defender 90) ஆகியவையே அவை ஆகும்.

Land rover defender

இதில் ஓர் வெர்ஷனே அவ்வப்போது நமது மாநில முதலமைச்சர் முக ஸ்டாலினின் கான்வாயின்போது பயன்படுத்தப்பட்டு வருகின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது. இதே கார் மாடலை இன்னும் சில அரசியல் பிரமுகர்களும் பயன்படுத்தி வருகின்றனர். இதுதவிர, திரைத் துறையைச் சேர்ந்து முக்கிய பிரபலங்கள் மற்றும் இந்தியாவின் முன்னணி தொழிலதிபர்களும் இந்த காரை பயன்படுத்தி வருகின்றனர்.

இத்தகைய பிரபலமான கார் மாடலையே யுட்யூபர் தற்போது வாங்கி இருக்கின்றார். ஒட்டுமொத்தமாக மூன்று விதமான எஞ்சின் தேர்வுகள் இந்த கார் மாடலில் வழங்கப்படுகின்றது. அந்தவகையில், 2.0 லிட்டர் பெட்ரோல், 3.0 லிட்டர் டீசல், 5.0 லிட்டர் பெட்ரோல் வி8 மற்றும் 2.0 லிட்டர் பிளக் இன் ஹைபிரிட் சிஸ்டம் ஆகிய மோட்டார் ஆப்ஷன்களே இந்த காரில் வழங்கப்படுகின்றன.

டிஃபெண்டர் 90 கார் மாடலில் 5 மற்றும் 6 இருக்கைகள் தேர்வுகளும், டிஃபெண்டர் 110 மாடலில் 5, 6 மற்றும் 7 இருக்கைகள் தேர்வுகளும் வழங்கப்படுகின்றன. டிஃபெண்டர் 130 மாடலில் 8 பேர் வரை பயணிக்க முடியும். இத்தகைய அதிக எண்ணிக்கை வசதிக் கொண்டதே இந்த தேர்வாகும்.

அனைத்து விதமான சாலைகளையும் சமாளிக்கம் திறன் கொண்டதே டிஃபெண்டர். இதற்கேற்ப சஸ்பென்ஷன் செட்-அப் மற்றும் பிரேக்கிங் சிஸ்டமே இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றது. இதுதவிர, நவீன கால அம்சங்களாக இந்த காரில் 12.3 அங்கு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல், ஹெட்ஸ்-அப் திரை உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கின்றன.

இதுதவிர, 10 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், பிவி ப்ரோ யுஐ, ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல், 360 டிகிரி பார்வை திறன் கொண்ட கேமிரா, மெர்டியன் சவுண்ட் சிஸ்டம் உள்ளிட்டவையே இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றன. இதுபோன்று இன்னும் பல சிறப்பு வசதிகளைத் தாங்கிய லேண்ட் ரோவர் டிஃபெண்டர் ஆகும். இதனால்தான் இந்திய தொழிலதிபர்கள் மத்தியில் இந்த கார் மாடலுக்கு மிக சிறப்பான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் சொகுசு கார்களுக்கு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனம்கூட சென்ற நிதியாண்டில் மாபெரும் விற்பனை வளர்ச்சியைப் பதிவு செய்தது. இதற்கு இதுபோன்று யுட்யூபர்கள், திரைப் பிரபலங்கள் மற்றும் தொழிலதிபர்களிடம் நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு கிடைத்துக் கொண்டிருக்கும் அதீத வரவேற்பே காரணமாக உள்ளது.

More from DriveSpark

Article Published On: Sunday, April 14, 2024, 5:30 [IST]
English summary
Youtuber bhuvan bam bought the most expensive car defender
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+