2.4 கோடி ரூபாய் மெர்சிடிஸ் காரை 5 நிமிடத்தில் எரித்து சாம்பலாக்கிய இளைஞர்! நம்பவே முடியாத காரணம்

ஜெர்மன் நாட்டு கார் தயாரிப்பு நிறுவனமான மெர்சிடிஸ்-பென்ஸ் மீதான தனது எதிர்ப்பை வெளிக்காட்டும் விதமாக யுடியூப்பில் சேனல் நடத்தும் ஒருவர் தனது மெர்சிடிஸ்-ஏஎம்ஜி ஜிடி 63எஸ் காரை எரித்து வீடியோ வெளியிட்டு அதிர்ச்சியாக்கியுள்ளார். இதுகுறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

2.4 கோடி ரூபாய் மெர்சிடிஸ் காரை 5 நிமிடத்தில் எரித்து சாம்பலாக்கிய இளைஞர்! நம்பவே முடியாத காரணம்

மைக்கேல் லிட்வின், யூடியூப்பில் கிட்டத்தட்ட 5 மில்லியன் சந்தாதாரர்களைக் கொண்டவர். அவரது நாட்டில் பிரபலமானவர் என்றுகூட சொல்லலாம். இவரிடம் இருந்த மெர்சிடிஸ் கார் அடிக்கடி பழுதாகி உள்ளது.

2.4 கோடி ரூபாய் மெர்சிடிஸ் காரை 5 நிமிடத்தில் எரித்து சாம்பலாக்கிய இளைஞர்! நம்பவே முடியாத காரணம்

இதனை இவர் காரை வாங்கிய டீலர்ஷிப் மையத்தின் கவனத்த்திற்கு எடுத்து சென்ற போதிலும் சரியான தீர்வு கிடைக்கவில்லை. இதனை தொடர்ந்து அந்த டீலர்ஷிப் உடன் லிட்வினுக்கு கசப்பமான அனுபவம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பென்ஸ் கார்களின் மீது இவர் விரக்தியடைந்ததாக தெரிகிறது.

2.4 கோடி ரூபாய் மெர்சிடிஸ் காரை 5 நிமிடத்தில் எரித்து சாம்பலாக்கிய இளைஞர்! நம்பவே முடியாத காரணம்

இவரது விரக்திக்கு அவரது மெர்சிடிஸ் காரே இரையாகி உள்ளது. காரின் ஏற்பட்ட பிரச்சனையை தீர்க்க முடியவில்லை என்பதற்காக அந்த காரையே எரிப்பது சிலரால் நம்ப முடியாமல் கூட போகலாம். எங்களாளும் இந்த சம்பவத்தை நம்ப முடியவில்லை. ஏனெனில் அவர் எரித்த மெர்சிடிஸ்-ஏஎம்ஜி ஜிடி 63எஸ் காரின் தற்போதைய விலை இந்திய ரூபாயில் கிட்டத்தட்ட 77 லட்சம் ஆகும்.

இந்த சம்பவத்தை லிட்வின் வீடியோவாக பதிவு செய்து தனது யுடியூப் சேனலில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோவில் காரை ஆள் நடமாட்டமே இல்லாத பகுதிக்கு ஓட்டி வரும் லிட்வின் பிறகு பெட்ரோலை காரின் வெளிப்பக்கம் மற்றும் உட்பக்கம் என இரு பக்கங்கள் முழுவதும் ஊற்றுகிறார்.

2.4 கோடி ரூபாய் மெர்சிடிஸ் காரை 5 நிமிடத்தில் எரித்து சாம்பலாக்கிய இளைஞர்! நம்பவே முடியாத காரணம்

தனது பாதுகாப்பிற்காக காரில் இருந்து சற்று தூரம் வரையில் பெட்ரோலை ஊற்றி வருகிறார். பிறகு சிறிய மன வருத்தங்களுடன் நெருப்பை வைக்கிறார். இறுதியில் கார் முழுவதும் எரிந்து துளியளவு கூட பயன்படுத்த முடியாதாகிறது. இந்த வீடியோவை பார்ப்பவர்களுக்கு விளம்பரத்திற்காக காரை கொளுத்துவது போல் தெரியும், சிறிது விளம்பரத்திற்காகதான் என்றாலும், மெர்சிடிஸ் நிறுவனத்தின் மீதான லிட்வினின் கோபம் அவரது முகத்தில் தெளிவாக தெரிகிறது.

2.4 கோடி ரூபாய் மெர்சிடிஸ் காரை 5 நிமிடத்தில் எரித்து சாம்பலாக்கிய இளைஞர்! நம்பவே முடியாத காரணம்

இந்த வீடியோவினை இதுவரை மட்டும் 10 மில்லியனுக்கு அதிகமானோர் பார்த்துள்ளனர். இதன் மூலம் கிடைக்கும் பணத்தில் லிட்வின் புதிய கார் ஒன்றையே வாங்கலாம். இவர் எரித்து சாம்பலாக்கிய மெர்சிடிஸ்-ஏஎம்ஜி காரில் 4.0 லிட்டர் வி8 பை-டர்போ என்ஜின் பொருத்தப்படுகிறது.

2.4 கோடி ரூபாய் மெர்சிடிஸ் காரை 5 நிமிடத்தில் எரித்து சாம்பலாக்கிய இளைஞர்! நம்பவே முடியாத காரணம்

அதிகப்பட்சமாக 639 பிஎச்பி மற்றும் 900 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் உடன் கார் 0-வில் இருந்து 100 kmph என்ற வேகத்தை வெறும் 3.2 வினாடிகளில் அடைந்துவிடும். ரூ.77 லட்சம் என்பது லிட்வினின் நாட்டில் இந்த பென்ஸ் காரின் விலையாகும்.

2.4 கோடி ரூபாய் மெர்சிடிஸ் காரை 5 நிமிடத்தில் எரித்து சாம்பலாக்கிய இளைஞர்! நம்பவே முடியாத காரணம்

நமது இந்திய சந்தையில் மெர்சிடிஸ்-பென்ஸ் ஜிடி 63 எஸ் 4மேட்டிக்+ 4-கதவு கூபே காரின் எக்ஸ்ஷோரூம் விலை ரூ.2.4 கோடியாக உள்ளது. இந்தியாவில் மெர்சிடிஸ் கார்களில் விலையுயர்ந்தவைகளுள் ஒன்றாக விளங்கும் இந்த கார் அடிக்கடி பழுது ஏற்பட்டத்தினால்தான் உரிமையாளர் அதனை எரிக்கும் முடிவிற்கு வந்துள்ளார் என்ற ஒரு விஷயம் மட்டும்தான் நமது மனதை அமைதிப்படுத்துகிறது.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
YouTuber Burns His Mercedes-AMG GT 63 S In A Protest Against German Carmaker
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X