கப்பல் போன்ற சொகுசு காரை வாங்கிய டிரைவர் மகன்! எப்படி சாம்பாதிச்சார்னு தெரிஞ்சதும் வாயை பிளக்கும் மக்கள்!

இந்திய இளைஞர்கள் பலர் வறுமையின் பிடியில் சிக்கி தவித்து வருகின்றனர். பொருளாதார ரீதியிலான தடைகள், அவர்களின் கனவுகளை சீர்குலைக்கின்றன. ஆனால் கிடைக்கும் வாய்ப்பில் திறமையை நிரூபித்து முன்னேறியவர்களும் இங்கு ஏராளமானோர் இருக்கின்றனர். அவர்களில் ஒருவர்தான் ஹர்ஷ் ராஜ்புத் (Harsh Rajput). இவர் பீஹார் மாநிலத்தை சேர்ந்தவர்.

ஹர்ஷ் ராஜ்புத்தின் தந்தை, பீஹார் மாநில காவல் துறையில் ஹோம் கார்டு-ஆக பணியாற்றி வருகிறார். அத்துடன் காவல் துறை அதிகாரிகளுக்கு கார் டிரைவர் வேலையையும் அவர் செய்து கொண்டுள்ளார். ஒரு சமயத்தில், லோன் கட்டாத காரணத்தால், அவர்களது வீடு ஏலத்திற்கு வருவதாக இருந்தது. ஆனால் அதனை தடுத்தி நிறுத்தி, வீட்டை காப்பாற்றியவர் ஹர்ஷ் ராஜ்புத். அத்துடன் மிகவும் விலை உயர்ந்த கார் ஒன்றையும் ஹர்ஷ் ராஜ்புத் வாங்கியுள்ளார்.

கப்பல் போன்ற சொகுசு காரை வாங்கிய டிரைவர் மகன்! எப்படி சாம்பாதிச்சார்னு தெரிஞ்சதும் வாயை பிளக்கும் மக்கள்!

விலை உயர்ந்த ஆடி கார்!

ஹர்ஷ் ராஜ்புத் சமீபத்தில் வாங்கியிருப்பது, ஆடி ஏ4 (Audi A4) கார் ஆகும். பிரீமியம், பிரீமியம் ப்ளஸ் மற்றும் டெக்னாலஜி என ஆடி ஏ4 கார் மொத்தம் 3 வேரியண்ட்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த 3 வேரியண்ட்களிலும் ஒரே இன்ஜின்தான் வழங்கப்பட்டுள்ளது. அது 2.0 லிட்டர் TFSI டர்போசார்ஜ்டு பெட்ரோல் இன்ஜின் ஆகும். இந்த இன்ஜின் அதிகபட்சமாக 187 பிஹெச்பி பவரையும், 320 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. இந்த இன்ஜினுடன், 7 ஸ்பீடு ட்யூயல் க்ளட்ச் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷனை ஆடி நிறுவனம் வழங்கியுள்ளது.

இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் ஆடி ஏ4 காரின் பேஸ் வேரியண்ட்டின் விலை 43.12 லட்ச ரூபாயாக உள்ளது. அதே நேரத்தில் இந்த காரின் டாப் வேரியண்ட்டின் விலை 50.99 லட்ச ரூபாயாக இருக்கிறது. இவை எக்ஸ் ஷோரூம் விலையாகும். எனவே ஆன் ரோடு விலை இன்னும் கூடுதலாக வரும். கடனில் மூழ்குவதில் இருந்து வீட்டை காப்பாற்றியதுடன், இவ்வளவு விலை உயர்ந்த ஒரு காரை ஹர்ஷ் ராஜ்புத் எப்படி வாங்கினார்? என்ற சந்தேகம் இந்நேரம் உங்களுக்கு வந்திருக்கும்.

யூடியூப்!

அவரின் இந்த பிரம்மாண்டமான வளர்ச்சிக்கு பின்னால் இருப்பது யூடியூப் (YouTube). திறமையுள்ள அனைவருக்கும் யூடியூப் தற்போது ஒரு வரப்பிரசாதமாக மாறியுள்ளது. திறமையை வெளிக்காட்டி, பணம் சம்பாதிப்பதற்கான கதவுகளை யூடியூப் திறந்து விட்டுள்ளது. குழந்தைகள், இளைஞர்கள், பெண்கள், முதியவர்கள் என அனைத்து தரப்பினரும் வாழ்க்கையில் முன்னேறி கொள்வதற்கு யூடியூப் ஒரு நல்ல வாய்ப்பு. எனவே யூடியூபிற்கு வீடியோக்களை (Videos) உருவாக்குவதையே பலர் தங்கள் முழு நேர வேலையாக மாற்றி கொண்டுள்ளனர்.

ஒரு ஸ்மார்ட் போன், வாழ்க்கையில் சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் மற்றும் திறமை ஆகியவை மட்டும் இருந்தால் போதும். யூடியூப்பில் பணம் கொட்டும். யூடியூப் மூலமாக முன்னேறியவர்கள் ஏராளமானோர் இங்கு இருக்கின்றனர். அவர்களில் ஒருவர்தான், ஹர்ஷ் ராஜ்புத். யூடிப்பில் இவர் காமெடி வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். இவரது யூடியூப் சேனலை சுமார் 33 லட்சம் பேர் பின்தொடர்கின்றனர். இதன் மூலம் கிடைத்த வருமானத்தில்தான், ஹர்ஷ் ராஜ்புத் புதிய ஆடி காரை வாங்கியுள்ளார்.

மாசத்துக்கு இவ்ளோ சம்பாதிக்கறாரா!

யூடியூப் மூலம் இவர் ஒரு மாதத்திற்கு 8 லட்ச ரூபாய் சம்பாதிப்பதாக கூறப்படுகிறது. எனவே ஆடி கார் எல்லாம் இவருக்கு தற்போது சாதாரணமான ஒரு விஷயமாகி விட்டது. வரும் காலத்தில் இன்னும் பல்வேறு சொகுசு கார்களை ஹர்ஷ் ராஜ்புத் வாங்குவதற்கு நாம் நமது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்வோம். அவர் தற்போது வாங்கியுள்ள ஆடி ஏ4 காரானது, சொகுசு செடான் (Luxury Sedan) ரகத்தை சேர்ந்தது ஆகும். எனவே சௌகரியமான பயணத்தை இந்த கார் வழங்கும்.

B&O பிரீமியம் சவுண்ட் சிஸ்டம் மற்றும் தட்டையான அடிப்பாகம் கொண்ட ஸ்டியரிங் வீல் என ஏராளமான வசதிகள் ஆடி ஏ4 காரில் வழங்கப்பட்டுள்ளன. சொந்தமாக ஒரு மாருதி காரை கூட வாங்க முடியாமல் நம்மில் பலரும் தடுமாறி கொண்டிருக்கும் நிலையில், ஹர்ஷ் ராஜ்புத் யூடியூப் மூலம் சம்பாதித்த பணத்தில் மிகவும் விலை உயர்ந்த ஆடி நிறுவனத்தின் சொகுசு காரை வாங்கியிருப்பது உண்மையிலேயே சாதாரணமான விஷயம் அல்ல.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Youtuber buys audi a4 luxury sedan
Story first published: Thursday, January 19, 2023, 14:53 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X