பைக் விலையில் குட்டி எலெக்ட்ரிக் கார்! அவரே வாங்கீட்டாரா! இனி ஆளாளுக்கு ஒன்னு வாங்கி ஓட்ட போறாங்க பாருங்க!
கேரள மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ள யூடியூபர்களில் (YouTuber) ஒருவர் எபின் ஜோஸ் (Ebbin Jose). இவர் புட் ரிவியூ (Food Review) மற்றும் டிராவல் (Travel) சேனலை நடத்தி வருகிறார். இவர் தற்போது புத்தம் புதிய கார் ஒன்றை வாங்கியுள்ளார். அது எம்ஜி கோமெட் இவி (MG Comet EV) ஆகும்.
இது இந்தியாவில் மிகவும் பிரபலமாக உள்ள எலெக்ட்ரிக் கார் (Electric Car) என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் எம்ஜி கோமெட் இவி எலெக்ட்ரிக் காரின் ஆரம்ப விலை வெறும் 6.99 லட்ச ரூபாய் மட்டுமே. அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 8.58 லட்ச ரூபாயாக மட்டுமே இருக்கிறது.

இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும். இதன் மூலம் இந்தியாவில் கிடைக்க கூடிய விலை குறைவான எலெக்ட்ரிக் கார்களில் ஒன்றாக எம்ஜி கோமெட் திகழ்கிறது. இந்த எலெக்ட்ரிக் காரில் பொருத்தப்பட்டிருப்பது 17.3 kWh பேட்டரி ஆகும். இந்த பேட்டரியை ஒரு முறை முழுமையாக நிரப்பினால், 230 கிலோ மீட்டர்கள் பயணம் செய்ய முடியும்.
இது நகர பயன்பாடுகளுக்கு ஏற்ற டிரைவிங் ரேஞ்ச் (Driving Range) என்பதில் சந்தேகமில்லை. உண்மையில் எம்ஜி கோமெட் இவி எலெக்ட்ரிக் கார் நகர பயன்பாடுகளுக்கு ஏற்ற வகையில்தான் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் தோற்றமே அதை நமக்கு உணர்த்தும். போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலைகளில் எளிதாக ஓட்டக்கூடிய வகையில், எம்ஜி கோமெட் இவி எலெக்ட்ரிக் காரை சிறியதாக டிசைன் செய்துள்ளனர்.

விலை குறைவானதாக இருந்தாலும் கூட, எம்ஜி கோமெட் இவி எலெக்ட்ரிக் காரில், அதிநவீன வசதிகளுக்கு சற்றும் பஞ்சமில்லை. இந்த காரின் உள்ளே 10.25 இன்ச் அளவில் 2 திரைகள் வழங்கப்பட்டுள்ளன. இதில் ஒன்று டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டத்திற்கானது. மற்றொன்று டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டருக்கானது.
இதுதவிர வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே, கீலெஸ் எண்ட்ரி, 55க்கும் மேற்பட்ட கனெக்டட் கார் தொழில்நுட்ப அம்சங்கள், ஏர்பேக்குகள், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா மற்றும் சென்சார்கள் உள்ளிட்ட வசதிகளும், எம்ஜி கோமெட் இவி எலெக்ட்ரிக் காரில் கொடுக்கப்பட்டுள்ளன.
இந்திய சந்தையில் டாடா டியாகோ இவி (Tata Tiago EV) மற்றும் சிட்ரோன் இசி3 (Citroen eC3) ஆகிய எலெக்ட்ரிக் கார்களுடன், எம்ஜி கோமெட் இவி எலெக்ட்ரிக் கார் போட்டியிட்டு வருகிறது. கொச்சி நகர சாலைகளில் பயன்படுத்துவதற்காக எம்ஜி கோமெட் இவி எலெக்ட்ரிக் காரை வாங்கியுள்ளதாக எபின் ஜோஸ் தெரிவித்துள்ளார்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: மிகவும் குறைவான விலையில் ஒரு எலெக்ட்ரிக் காரை வாங்க வேண்டும் என நினைப்பவர்களுக்கு எம்ஜி கோமெட் இவி நல்ல ஆப்ஷனாக இருக்கும். போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகர சாலைகளில் ஓட்டுவதற்கு ஏற்றது என்பது எம்ஜி கோமெட் இவி எலெக்ட்ரிக் காரின் முக்கியமான சிறப்பம்சங்களில் ஒன்றாகும்.


Click it and Unblock the Notifications








