விலையுயர்ந்த பிஎம்டபிள்யூ காரை விற்று இந்த காரை வாங்கியுள்ளார் என்றால்... பிரபல யூடியூபரின் புதிய கார்!!

மஹிந்திரா, டாடா போன்ற உள்நாட்டு நிறுவனங்களின் கார்களுக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால், பல விஐபிகளும் இந்த நிறுவனங்களின் கார்களை ஆர்வமாக வாங்குவதை பார்க்க முடிகிறது. இந்த வரிசையில், இந்தியாவை சேர்ந்த பிரபல யூடியூப்பர் ஒருவர் மார்க்கெட்டில் பிரபலமாக விளங்கும் மஹிந்திரா எக்ஸ்யூவி700 (Mahindra XUV700) காரை வாங்கியுள்ளார். யார் இந்த யூடியூப் பிரபலம் என்பதையும், அவர் புதியதாக வாங்கியுள்ள மஹிந்திரா எக்ஸ்யூவி700 காரை பற்றியும் இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

இந்தியாவின் முன்னணி கார் உற்பத்தி நிறுவனங்களுள் ஒன்றாக விளங்கும் மஹிந்திராவில் இருந்து சமீப ஆண்டுகளில் அறிமுகம் செய்யப்பட்ட தரமான கார்களுள் ஒன்று எக்ஸ்யூவி700 ஆகும். 2021ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்ட எக்ஸ்யூவி700 ஆனது அதற்கு முன் விற்பனையில் இருந்த மஹிந்திரா எக்ஸ்யூவி500 காருக்கு பதிலாக விற்பனைக்கு கொண்டுவரப்பட்டது.

geeky ranjit buys mahindra xuv700

இந்தியாவில் ஏற்கனவே, எஸ்யூவி கார்களுக்கு நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்து வருவதால், அதனை பயன்படுத்திக் கொள்ளும் முயற்சியாக மஹிந்திரா களமிறக்கிய எக்ஸ்யூவி700 காருக்கும் குறிப்பிடத்தக்க அளவில் புக்கிங் கிடைக்கிறது. மஹிந்திராவில் இருந்து அதிக எண்ணிக்கையில் விற்பனையாகும் 2வது காராக எக்ஸ்யூவி700 விளங்குகிறது. முதலிடத்தில் ஸ்கார்பியோ உள்ளது.

அவ்வாறு, மஹிந்திரா எக்ஸ்யூவி700 காரை வாங்கும் வாடிக்கையாளர்களுள் ஒருவராக இணைந்துள்ளார் பிரபல இந்திய யூடியூப்பர் ரஞ்சித். தொழிற்நுட்பம் சார்ந்த விஷயங்கள் அடங்கிய வீடியோக்களை அவ்வப்போது யூடியூப்பில் பதிவிடும் இவர் கீகி ரஞ்சித் என அழைக்கப்படுகிறார். டெக்னாலஜி விஷயங்களில் மிகுந்த அறிவாற்றல் கொண்டவர்களை ஆங்கிலத்தில் கீகி என அழைப்பது வழக்கம்.

geeky ranjit buys mahindra xuv700

கீகி ரஞ்சித் முன்னதாக பி.எம்.டபிள்யூ கார் ஒன்றை பயன்படுத்தி வந்தார். தற்போது அதற்கு பதிலாக மஹிந்திரா எக்ஸ்யூவி700 காரை வாங்கியுள்ளார். இதுகுறித்து ரஞ்சித் தனது எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்துக் கொண்டுள்ள படங்களில் அடர் நீல நிறத்திலான அவரது மஹிந்திரா எக்ஸ்யூவி700 காரை காணலாம். ரிப்பன் ஒட்டப்பட்ட நிலையில் ஷோரூமில் இருக்கும்போதும், வீட்டிற்கு கொண்டுவரப்பட்ட பின்பும் தனது காரை போட்டோ எடுத்து ரஞ்சித் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துக் கொண்டுள்ளார்.

இதுகுறித்த அவரது எக்ஸ் பதிவில், "குடும்பத்தில் புதியதாக சேர்க்கப்பட்டுள்ள மஹிந்திரா எக்ஸ்யூவி700 போன்ற பெரிய கார் எங்களுக்கு தேவைப்பட்டது. இது எனது பிஎம்டபிள்யூ காரை மாற்ற போகிறது. நகரத்தில் எனது முதன்மையான தினசரி காராக டாடா நெக்ஸான் இவி மேக்ஸ் தொடர்ந்து பயன்படுத்தப்படும். இதில் ஒரு முடிவெடுக்க எனக்கு உதவிய சுந்தர் தீப் அவர்களுக்கு நன்றி" என குறிப்பிடப்பட்டுள்ளது.

geeky ranjit buys mahindra xuv700

பிஎம்டபிள்யூ காருக்கு பதிலாக விலை குறைவான மஹிந்திரா காரை வாங்கியிருப்பதற்கு காரணமாக கீகி ரஞ்சித் தெரிவித்து இருப்பது என்னவென்றால், அவர் வசிக்கும் பகுதியில் சாலை சிறந்த தரத்தில் இல்லையாம். இதனால், காரின் அடிப்பகுதி சேதமடைய கூடாது என்பதற்காக, எக்ஸ்யூவி700 போன்ற அதிக கிரவுண்ட் கிளியரென்ஸை கொண்ட காரை வாங்கியுள்ளார்.

அதுமட்டுமின்றி, தனக்கு வயதாகுவதால் நிமிர்ந்த சிட்டிங் பொசிஷன் இருக்கையை கொண்ட காரை வாங்க விரும்பியதாகவும், தனது குடும்பத்தினருக்கும் விசாலமான கேபினை கொண்ட காரை வழங்க விரும்பியதாகவும் காரை வாங்கிய பின் யூடியூபர் கீகி ரஞ்சித் தெரிவித்துள்ளார். இவர் வாங்கியிருப்பது எக்ஸ்யூவி700 காரின் ஏ.எக்ஸ்7 எல் வேரியண்ட் ஆகும். இது ஓர் டாப்-எண்ட் வேரியண்ட் ஆகும். அதாவது, எக்ஸ்யூவி700 காருக்கென மஹிந்திரா நிறுவனம் வழங்கும் அனைத்து அம்சங்களையும் இந்த காரில் காணலாம்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: கீகி ரஞ்சித் தொழிற்நுட்பங்கள் சார்ந்த அறிவியலில் எந்த அளவிற்கு நிபுணத்துவம் வாய்ந்தவராக உள்ளார் என்பதை இந்த ஒரு விஷயம் மூலமாக அறிய முடிகிறது. இந்த மஹிந்திரா காரை வாங்குவதற்கு முன்னர் ரஞ்சித்திடம் பெட்ரோல் என்ஜினை கொண்ட பிஎம்டபிள்யூ 3-சீரிஸ் என்கிற லக்சரி செடான் கார் இருந்தது.

More from DriveSpark

Article Published On: Friday, July 19, 2024, 17:46 [IST]
English summary
Youtuber geeky ranjit buys mahindra xuv700 replaced his bmw 3 series
மேலும்... #off beat #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X