காப்பாற்ற ஒன்று கூடிய கை! இதையுமா வீடியோவா போட்டு காசு பார்ப்பீங்க!! காரை மறந்திட வேண்டியதுதான்
பிரபலமான யூடியூபர் (Youtuber) ஒருவர் 10 அடி பள்ளத்தில் காருடன் விழுந்தும் அதிர்ஷ்டவசமாக உயிர்பிழைத்துள்ளார். கார் பலத்த சேதமடைந்த நிலையில், அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்தியாவில் சாலை விபத்துகள் நாளுக்கு நாள் சாதாரணமாகி வருகின்றன. பேப்பரை திறந்தாலே அன்றைய தினத்தில் குறைந்தது ஒரு விபத்து குறித்த செய்தியை ஆவது பார்க்க முடிகிறது. அந்த வகையில் அமைந்துள்ள இந்த யூடியூபரின் கார் விபத்தில் சிக்கியிருப்பது ஹூண்டாய் எலைட் ஐ20 (Hyundai Elite i20) என்கிற சற்று விலைமிக்க கார் ஆகும். இந்த ஹூண்டாய் காரை பற்றி பின்னர் பார்க்கலாம்.
முதலில்... என்ன நடந்தது? யார் இந்த யூடியூபர்? என்பதை பார்ப்போம். ஹர்ஷ் பஹ்வா (Harsh Pahwa) வட இந்தியாவில் பஞ்சாப் மாகாணத்தை சேர்ந்த யூடியூபர். கிட்டத்தட்ட 4 லட்சம் சப்ஸ்கிரைபர்களை வைத்துள்ளார் என்றால் ஓரளவிற்கு பிரபலமான யூடியூபர் என்றுதான் சொல்ல வேண்டும். என்ன மாதிரியான வீடியோக்களை பதிவிடுவார்? என கேட்டால், எல்லா விதமான வீடியோக்களையும் பதிவிடுவார்.

அதாவது, தன் அன்றாட வாழ்க்கையின் சுவாரஸ்யமான சம்பவங்களை வீடியோவாக காட்சிப்படுத்தி யூடியூபில் பதிவிடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். இதுமாதிரியான யூடியூபர்கள் நிறைய பேர் இருந்தாலும், அதற்கு மத்தியில் ஹர்ஷ் பஹ்வா பிரபலமாகி இருப்பதற்கு காரணம், அவரது நகைச்சுவை உணர்வாகும். பெரும்பாலான யூடியூபர்களை போலவே இவரும் விலையுயர்ந்த கார் & பைக்குகளை அவ்வப்போது தனது வீடியோக்களில் காட்டி பார்வையாளர்களை மயக்குபவர்.
இத்தகைய யூடியூபரான ஹர்ஷ் பஹ்வா சமீபத்தில் விபத்தில் சிக்கியுள்ளார். இதில் காமெடி என்னவென்றால், இந்த விபத்தையும் அவர் வீடியோவாக காட்சிப்படுத்தி யூடியூப்பில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவுக்கும் 72 ஆயிரம் பார்வையாளர்கள் வேறு. ஆனால், இவ்வாறு அதனை வீடியோவாக காட்சிப்படுத்தி பதிவிட்டதால்தான் நமக்கு இந்த விஷயம் தெரியவந்துள்ளது. இந்த வீடியோவில் விபத்து நடந்த போது எடுக்கப்பட்ட காட்சிகள் எதுவும் இடம்பெறவில்லை. விபத்தில் சிக்கிய பிறகு காரின் கதி என்ன என்பதை தான் காட்டியுள்ளனர்.

நமக்கு கிடைத்துள்ள தகவலின்படி, இந்த விபத்து டெல்லியில் ஒரு நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு ஹர்ஷ் பஹ்வா திரும்பி வரும்போது நடந்துள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் பாகிஸ்தான் எல்லையை ஒட்டி அமைந்துள்ள ஜலாலாபாத் என்கிற நகரத்தில் இந்த விபத்து நடந்துள்ளது. சம்பவத்தின்போது ஹர்ஷ் பஹ்வா அவரது நண்பருடன் இருந்துள்ளார். டிரைவரின் கண்ட்ரோலை இழந்த கார் தடுப்புகளை தாண்டி சாலையின் ஓரத்தில் இருந்த 10 அடி பள்ளத்தில் கவிழ்ந்துள்ளது.
ஹர்ஷ் பஹ்வாவுக்கும், அவரது நண்பரும் பலத்த காயமென அங்கிருந்துவரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பள்ளத்தில் விழுந்ததில் ஹூண்டாய் எலைட் ஐ20 காரின் மேற்கூரை நசுங்கியுள்ளது. அவற்றை மீண்டும் சரி செய்த பின்னரே அருகில் இருந்தவர்கள் விபத்தில் சிக்கியவர்களை மீட்க முடிந்துள்ளது. இந்த விபத்தில் ஹூண்டாய் எலைட் ஐ20 கார் பலத்த சேதங்களை சந்தித்துள்ளது. இதற்கு அப்புறம் இந்த காரை பயன்படுத்த முடியுமா என்பதே சந்தேகம் தான்.

எலைட் ஐ20 காரின் விற்பனை 2020இல் நிறுத்தப்பட்டது. ஆனால், வழக்கமான ஐ20 கார் விற்பனையில் உள்ளது. ஐ20 காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் தற்சமயம் ரூ.7 லட்சத்தில் இருந்து ரூ.11.21 லட்சம் வரையில் உள்ளன. ஆன்-ரோடு விலை இன்னும் 1 இலட்சம் வரையில் அதிகமாக வரலாம். எரா, மேக்னா, ஸ்போர்ட்ஸ் மற்றும் அஸ்டா என 4 விதமான வேரியண்ட்களில் ஹூண்டாய் ஐ20 விற்பனை செய்யப்படுகிறது.
இந்தியாவில் தற்போதைக்கு 1.2 லிட்டர், 4-சிலிண்டர், நேச்சுரலி-அஸ்பிரேட்டட் பெட்ரோல் என்ஜின் உடன் மட்டுமே ஐ20 கிடைக்கிறது. அதிகப்பட்சமாக 82 பிஎச்பி மற்றும் 115 என்.எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் உடன் 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது இண்டெலிஜண்ட் வேரியபிள் கியர்பாக்ஸை பெறலாம். விற்பனையில் இந்த ஹூண்டாய் ஹேட்ச்பேக் காருக்கு டாடா அல்ட்ராஸ் போட்டியாக உள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: பஞ்சாபி யூடியூபர் ஹர்ஷ் பஹ்வா பைக் & கார்களில் ஆர்வமிக்கவராக இருப்பதால், அவ்வப்போது பயணங்களை மேற்கொள்வதை வாடிக்கையாக கொண்டவர். இந்த சம்பவத்தின்போது காரை ஹர்ஷ் பஹ்வா தான் ஓட்டினாரா என்பது உறுதியாக தெரியவில்லை. விபத்து காயங்களுடன், ஏறக்குறைய ரூ.10 லட்சம் மதிப்பிலான ஹூண்டாய் கார் பயன்படுத்த முடியாத அளவுக்கு சேதாரமாகி உள்ளது.


Click it and Unblock the Notifications









