நடக்கும் களேபரத்திற்கு மத்தியில் புது ஸ்கூட்டர் வாங்கிய இர்ஃபான்! இதை ஏன் வாங்குனாரு தெரியுமா?

பிரபல யூட்யூபர் இர்பான் சமீபத்தில் புதிதாக டிவிஎஸ் நிறுவனத்தின் ஜுபிடர் என்ற ஸ்கூட்டரை வாங்கி உள்ளார். இது குறித்து அவர் தனது யூடியூப் சேனலில் வீடியோ ஒன்றையும் பதிவிட்டுள்ளார். இந்த ஸ்கூட்டரை அவர் ஏன் வாங்கினார்? இதில் அப்படி என்ன விசேஷமான அம்சங்கள் இருக்கிறது? அவருக்கு இது எந்த வகையில் உபயோகப்பட போகிறது என்ற விரிவான விபரங்களை அவர் இந்த வீடியோவில் பேசியுள்ளார். இது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இது குறித்த விரிவான விவரங்களை காணலாம் வாருங்கள்.

யூட்யூபில் வீடியோ வெளியிட்டு பிரபலமானவர் இர்ஃபான். இவர் ஒவ்வொரு கடையாக சென்று உணவு சாப்பிடும் வீடியோவை வெளியிட்டு தமிழக முழுவதும் டிரெண்டானவர். இன்று தமிழகத்தில் இவரை தெரியாத ஆட்களே இல்லை என்று சொல்லிவிடலாம். அந்த அளவிற்கு பிரபலமான இவர் சமீபத்தில் புதிதாக ஸ்கூட்டர் ஒன்றை வாங்கி உள்ளார்.

youtuber irfan buys tvs jupiter 125

இவரிடம் ஏற்கனவே பல்வேறு விதமான சொகுசு கார்கள் இருந்த போதும், இவர் தனது சிட்டி பயன்பாட்டிற்காக ஸ்கூட்டரை வாங்கப் போவதாக கடந்த ஒரு மாதத்திற்கு முன்பே சொல்லியிருந்தார். அதற்காக அவர் மூன்று நிறுவனங்களின் ஸ்கூட்டர்களை டெஸ்டர் டிரைவ் செய்து பார்த்தார். அந்த வீடியோவையும் அவர் வெளியிட்டு இருந்தார். அதன்படி சுஸூகி நிறுவனத்தின் ஆக்சஸ், டிவிஎஸ் நிறுவனத்தின் ஜுபிடர் மற்றும் ஹோண்டா நிறுவனத்தின் ஆக்டிவா ஆகிய ஸ்கூட்டர்களை டெஸ்ட் டிரைவ் செய்தார்.

இந்நிலையில் இவர் மூன்று வாகனங்களையும் டெஸ்ட் டிரைவ் செய்த பிறகு டிவிஎஸ் நிறுவனத்தின் ஜுபிடர் 125 என்ற ஸ்கூட்டரை வாங்க முடிவு செய்துள்ளார். இதற்காக அந்த ஸ்கூட்டரை விற்பனை செய்யும் ஷோரூம் சென்று அந்த ஸ்கூட்டரையும் புக் செய்துள்ளார். இவர் தனது காரின் நம்பரை ஸ்கூட்டருக்கும் வாங்க வேண்டும் என கேட்டதால் சற்று கால தாமதமாக இவருக்கு ஸ்கூட்டர் டெலிவரி செய்யப்பட்டுள்ளது.

youtuber irfan buys tvs jupiter 125

இவர் மூன்று ஸ்கூட்டர்களை டெஸ்ட் டிரைவ் செய்த இந்த ஸ்கூட்டரை தேர்வு செய்வதற்கு முக்கியமான காரணம் ஒன்றை குறிப்பிட்டுள்ளார். டிவிஎஸ் ஜூபிடர் 125 ஸ்கூட்டரில் சீட்டுக்கு அடியில் இருக்கும் ஸ்டோரேஜ் வசதி மிகப்பெரிய அளவில் இருக்கிறது. தற்போது அந்த ஸ்கூட்டரில் 33லிட்டர் அளவிலான ஸ்டேரேஜ் வசதி இருக்கிறது. இவர் யூடியூபர் என்பதால் கேமரா, மைக் உள்ளிட்ட பொருட்களை எடுத்துச் செல்ல அதிக இடம் இருப்பதால் இதை தேர்வு செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

டிவிஎஸ் நிறுவனம் இந்த ஜூபிடர்125 ஸ்கூட்டரை வடிவமைக்கும் போது இதை முக்கிய அம்சமாக வழங்கியது. இதுவரை வேறு எந்த ஸ்கூட்டரிலும் இல்லாத அளவுக்கு அதிக ஸ்டோரேஜ் வசதி வழங்கப்பட்டுள்ளதால் பலர் இதை வாங்குகிறார்கள். ஸ்கூட்டர் பயன்படுத்தும் பலருக்கு இரண்டு ஹெல்மெட்டுகளை வைக்க இடம் இல்லை என்பது மிகப்பெரிய குறையாக இருந்தது. ஸ்கூட்டர் வடிவமைப்பாளர்களுக்கு சீட்டுக்கு அடியில் தான் பெட்ரோல் டேங்க்கை கொண்டு வர வேண்டும் என்பதால் அதுவும் பிரச்சனையாக இருந்தது.

டிவிஎஸ் நிறுவனம் ஜுபிடர் 125 ஸ்கூட்டரில் பெட்ரோல் டேங்க் சீட்டுக்கு அடியில் இருந்து மாற்றி முன்பக்கத்தில் வைத்து விட்டது. அதனால் சீட்டு அடியில் அதிக இடம் கிடைத்தது. அதை ஸ்டோரேஜ் வசதியாக வடிவமைத்தது. இதன் காரணமாகவே இந்த ஸ்கூட்டரின் விற்பனை அதிகரித்தது ஸ்டோரேஜ் மிக முக்கிய அம்சமாக பார்க்கும் வாடிக்கையாளர்கள் இந்த ஸ்கூட்டரை தேர்வு செய்கிறார்கள்.

இது போக இர்ஃபான் வாங்கிய டிவிஎஸ் ஜூபிடர் 125 ஸ்கூட்டர் டாப் வேரியண்ட் ஸ்கூட்டராக இருக்கிறது. இதில் கிக்கர் கிடையாது மற்றும் ஸ்மார்ட் எக்ஸ் கனெக்ட் வசதி இருக்கிறது. இதனால் இதன் முன் பக்கம் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர் பெரியதாக நல்ல லுக்குடன் வழங்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் உங்கள் செல்போனை நினைத்துக் கொள்ள முடியும், ப்ளூடூத் கனெக்டிவிட்டி ஆப்ஷனும் இதில் வழங்கப்பட்டுள்ளது. இதில் நேவிகேஷன் வாய்ஸ் அசிஸ்ட் சோசியல் மீடியா மற்றும் கால் அலர்ட் ரியல் டைம் ஸ்போர்ட்ஸ் வெதர் மற்றும் நியூஸ் அப்டேட்கள் உள்ளிட்ட அம்சங்கள் இடம் பெற்றுள்ளது.

இந்த ஸ்கூட்டரின் விலையைப் பொறுத்தவரை இர்ஃபான் டாப் வேரியண்ட் ஸ்கூட்டரை வாங்கியதால் இது ரூ98,799 என்ற எக்ஸ் ஷோரூம் விலையில் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இவர் இந்த ஸ்கூட்டரை பதிவு செய்துள்ளார். அப்படி பார்க்கும்போது இந்த ஸ்கூட்டருக்கு ரூ1,04,670 என்ற ஆன்-ரோடு விலையில் விற்பனையாகி வருகிறது. சிட்டி பயன்பாட்டிற்காக இவர் இந்த ஸ்கூட்டரை வாங்கியதாக தெரிவித்துள்ளார்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இன்று வாகனம் வாங்க விரும்பும் பலர் தங்கள் தேவைகளை உணர்ந்து வாகனம் வாங்காமல் தங்கள் கையில் இருக்கும் பணத்திற்கு ஏற்ற வாகனத்தை வாங்க விரும்புகிறார்கள். இது முற்றிலும் தவறானது. இர்ஃபான் அவருக்கு அதிக ஸ்டோரேஜ் வசதி தேவை என்பதால் இந்த வாகனத்தை தேர்ந்தெடுத்துள்ளார். அதேபோல நீங்களும் உங்கள் தேவையை அறிந்து உங்கள் வாகனத்தை தேர்ந்தெடுப்பது தான் சிறந்தது.

More from DriveSpark

Article Published On: Tuesday, August 6, 2024, 7:00 [IST]
English summary
Youtuber irfan buys tvs jupiter 125 scooter know full details
மேலும்... #off beat #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+