ரயில்களில் இது ரோல்ஸ் ராய்ஸ் கார்போல.. அரண்மனை மாதிரியான ஜப்பான் ரயிலில் பயணித்த தமிழர்..

இந்தியாவின் ஃபேமஸ் யுட்யூபர்களில் இர்பான்-ம் ஒருவர். இவர் சமீபத்தில் ஜப்பானில் பயன்பாட்டில் இருக்கும் ஸ்பேஸியா எக்ஸ் (SPACIA X) ரயிலில் பயணித்து, அதுகுறித்த ஓர் வீடியோவை அவர் அவருடைய யுட்யூப் சேனலில் வெளியிட்டு உள்ளார். இந்த வீடியோ வாயிலாக ஸ்பேஸியா எக்ஸ் ரயில் எத்தகைய அதிக ஆடம்பர அம்சங்கள் நிறைந்த ரயில் என்பது தெரிய வந்திருக்கின்றது. ஸ்பேஸியா எக்ஸ் ரயிலை, ரயில்களின் ரோல்ஸ் ராய்ஸ் என கூறலாம், அந்த அளவிற்கு லக்சூரியானதாக அதன் உட்பக்கம் உள்ளது. இத்தகைய ரயிலிலேயே ஓர் குட்டி டிராவலை போட்டிருக்கின்றார் இர்ஃபான்.

உலகத்தில் பயன்பாட்டில் இருக்கும் மிகுந்த லக்சூரியான ரயில்களில் ஒன்றாக ஸ்பேஸியா எக்ஸ் பார்க்கப்படுகின்றது. இந்த ரயிலில் அதிக ஆடம்பரமான டிராவல் அனுபவம் மட்டுமல்ல அதிக பொழுதுபோக்கான டிராவல் அனுபவமும் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது. மேலும், ஒவ்வொரு முறையும் இந்த ரயில் அதன் பயணத்தை முடித்த உடனேயே அதை பணியாளர்கள் சுத்தம் செய்துவிடுவார்கள். இதுவும், இர்ஃபான் வெளியிட்டு இருக்கும் வீடியோ வாயிலாக உறுதியாகி இருக்கின்றது.

Youtuber irfan uses japan s spacia x metro train

இதுமட்டுமில்லைங்க இந்த ரயிலில் பயணிக்கும்போது விருப்பப்பட்ட உணவையும் வாங்கி உண்ண முடியும். இதற்கேற்ப ஓர் மினி உணவகம் இந்த ரயிலில் செயல்பட்டு வருகின்றது. காஃபி, டீ மற்றும் பல ட்ரிங்க்ஸை ரயிலிலேயே வாங்கிக் கொள்ள முடியும். இதுபோன்று இன்னும் பல மனம் கவரும் வசதிகளைத் தாங்கியிருக்கின்ற காரணத்தினாலேயே இந்த ரயிலில் சிலர் பயணித்து வருவாதகக் கூறப்படுகின்றது.

அதாவது, இந்த ரயிலில் பயணிக்க வேண்டும் என்பதற்காகவே டிக்கெட்டு எடுத்து சிலர் பயணித்து வருகின்றனர். ஸ்டாண்டர்டு கிளாஸ் (2+2 இருக்கைகளுடன் இருக்கும்), பிரீமியம் கிளால் (2+1 இருக்கைகளுடன் இருக்கும்), லக்சூரி கிளாஸ் உள்ளிட்டவையே இந்த ரயிலில் உள்ளன. இதுமட்டுமில்லைங்க, பிரைவேட் கம்பார்ட்மென்ட்-ம் இந்த ரயிலில் உள்ளது. ஓர் தனி அறையில் இருப்பதை போல அதில் பயணிக்கலாம்.

இவை அனைத்தையும் தாண்டி காக்பிட் சூட் எனும் கிளாஸும் இந்த ரயிலில் உள்ளது. ஒரு கோச்சையே தனியுரிமைக் கொள்ளும் வகையில் அது இருக்கும். இதுதவிர, வீல் சேர்கள் நிற்பதற்கும் என்றும் தனி இடம் ஒதுக்கப்பட்டு இருக்கும். மிக முக்கியமாக இந்த ரயலில் உள்ள கழிவறைகளும் வேற லெவலில் இருக்கும். குறிப்பாக மாற்றுத் திறனாளிக்கு என்றும் தனி கழிவறைகள் இந்த ரயிலில் வழங்கப்பட்டு இருக்கின்றன.

இதன் டிக்கெட் 2400 யென் முதல் 11,800 யென் வரை என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது. காக்பிட் சூட் கட்டணம் பற்றிய விபரம் வெளியிடப்படவில்லை. 18 ஆயிரம் யென்-க்கும் அதிகமாக இருக்கும் என கூறப்படுகின்றது. மொத்த டிராவல் டைம் 2 மணி நேரம் என கூறப்படுகின்றது. இந்த இரண்டு மணி நேரமும் மிகவும் சூப்பரானதாக இருக்குமாம். இப்போதைய நிலவரப்படி, ஸ்பேஸியா எக்ஸ் குறிப்பிட்ட சில ரூட்டுகளில் மட்டுமே இயக்கப்படுகின்றது.

Irfan uses japan s spacia x metro train

அந்தவகையில், ஜப்பானின் அசகுஸா, டோக்யோ ஸ்கைட்ரீ ஆகிய பகுதிகளில் மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றது. லக்சூரியான டிராவலை விரும்பும் ரயில் பயணிகளுக்கான ஓர் ரயிலாகவே ஸ்பேஸியா எக்ஸ் காட்சியளிக்கின்றது. இந்தியாவின் பிரபலமான ரயில்கள் அனைத்திற்கும் டஃப் கொடுக்கக் கூடிய ஓர் ரயிலாகவும் இது காட்சியளிக்கின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஸ்பேஸியா எக்ஸ் ரயிலை ஒவ்வொரு பயணத்திற்கு பின்னரும் சுத்தம் செய்வது பயணிகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அமைந்திருக்கின்றது. குறிப்பாக, இந்தியன் ரயில்வேஸில் வழங்கப்படும் ரயில் பயணிகளுக்கு வழங்கப்படும் போர்வைகள் மாதம் ஒருமுறை மட்டுமே சுத்தம் செய்யப்படுவதாக அதிர்ச்சியான தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்ற சூழலில், பயணிகளுக்காக ஒவ்வொரு பயணத்திற்கு பின்னரும் இருக்கைகள் உள்ளிட்டவை ஸ்பேஸியா எக்ஸ்-இல் சுத்தம் செய்யப்படுவது அனைவரையும் கவரக் கூடியதாக உள்ளது.

More from DriveSpark

Article Published On: Sunday, November 24, 2024, 11:00 [IST]
English summary
Youtuber irfan uses japans luxurious spacia x metro train
மேலும்... #auto news
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+