அய்யோ அம்மானு கதறி இப்ப என்ன பயன்!.. 2 லட்சம் அமெரிக்க டாலர்கள் மதிப்புள்ள காரு போச்சா!..

யுட்யூப் (YouTube) வாயிலாக கோடிகளில் வருமானம் பார்த்து வரும் நபர்களில் கிக் ஸ்ட்ரீமர் ஜேக் டொஹர்தி-யும் ஒருவர் ஆவார். இவரிடத்தில் எண்ணற்ற சொகுசு மற்றும் ஆடம்பர கார்கள் பயன்பாட்டில் இருப்பதாகக் கூறப்படுகின்றன. அந்தவகையில், அவரிடத்தில் மெக்லாரன் நிறுவனத்தின் அரிய வகை கார் மாடல் ஒன்றும் பயன்பாட்டில் இருக்கின்றது. அந்த காரின் மதிப்பு சுமார் 2 லட்சம் அமெரிக்க டாலர்கள் என கூறப்படுகின்றது. அதாவது, இந்திய ரூபாய் மதிப்பில் அதன் விலை தோராயமாக 16 கோடியே 67 லட்சம் ஆகும்.

இத்தகைய விலை உயர்ந்த அரிய வகை காரே தற்போது விபத்தில் சிக்கி முழுமையாக உருக்குலைந்து போயிருக்கின்றது. விபத்திற்கு அதீத வேகமே காரணம் என கூறப்படுகின்றது. இதுதவிர, அவர் காரை ஓட்டிக் கொண்டிருந்தபோது வேறொரு நபருடன் செல்போனில் குறுஞ்செய்தில் உரையாடிக் கொண்டிருந்ததாகவும் கூறப்படுகின்றது.

YouTuber crashes mclaren during livestream

இந்த செயலே தற்போது 2 லட்சம் அமெரிக்க டாலர்கள் மதிப்புக் கொண்ட காரை உருகுலைய செய்திருக்கின்றது. அதிக வேகத்தில் காரை இயக்கிக் கொண்டு, அதேவேளையில் செல்போனையும் பயன்படுத்தி வந்ததன் விளைவாக கவன சிதறல் ஏற்பட்டு கார் விபத்திற்குள் சிக்கி உள்ளது. இதுமட்டுமில்லைங்க, விபத்து நடந்த நேரத்தில் அவர் அந்த காட்சிகளை நேரலையாக தன்னுடைய யுட்யூப் சேனலில் அவர் காண்பித்திருக்கின்றார்.

எனவே இந்த நிகழ்வு பெருத்த சர்ச்சையையும், அதிர்வலையையும் ஏற்படுத்தி இருக்கின்றது. இந்த வீடியோவானது தற்போது யுட்யூப் சேனலில் மட்டுமல்லாது எக்ஸ் போன்ற பிற தளங்களிலும் வெளியிடப்பட்டு உள்ளது. இந்த கொடூர விபத்து சம்பவமானது மியாமியிலேயே அரங்கேறி இருக்கின்றது. மேலும் விபத்து நடைபெற்ற அந்த நேரத்தில் அங்கு மழை பொழிந்ததாகவும் கூறப்படுகின்றது.

Mclaren 570s crashed during livestream

அதேநேரத்தில் இந்த மிக மோசமான விபத்து சம்பவத்தால் யாருக்கும் எந்த விதமான ஆபத்தும் ஏற்படவில்லை என்பது தெரிய வந்திருக்கின்றது. தொடர்ந்து இந்த விபத்தின்போது ஜேக் டோஹர்தி உடன் அவருடைய கேமிரா மேன் மைக்கேலும் இருந்ததாகக் கூறப்படுகின்றது. இருவருக்கும் மிகப் பெரிய ஆபத்தின்றி மீட்கப்பட்டு இருக்கின்றனர்.

அதேவேளையில், கேமிரா மேனுக்கு கையில் எலும்பு முறிவு ஏற்பட்டிருப்பதைப் போல தெரிகின்றது. கார் விபத்தில் சிக்கிய நேரத்தில் இருவராலும் வெளியே வர முடியாமல் தவித்து இருக்கின்றனர். அந்தவேளையில், அவ்வழியாக வந்த மற்ற வாகன ஓட்டிகளே இருவரையும் நொறுங்கிக் கிடந்த காருக்குள் இருந்து மீட்டெடுத்திருக்கின்றனர்.

இந்த நிகழ்வைத் தொடர்ந்து யுட்யூபரின் யுட்யூப் கணக்கு முடக்கப்பட்டு இருக்கின்றது. அப்பளம் போல் நொறுங்கிக் கிடப்பது மெக்லாரன் பிராண்டின் விலை உயர்ந்த கார் மாடல்களில் ஒன்றான 570எஸ் (570S) மாடல் ஆகும். இந்த காரை தன்னுடைய தேவைக்கு ஏற்ப அவர் கூடுதலாக மாடிஃபை செய்திருப்பதனாலேயே அதன் மதிப்பு மிகப் பெரிய அளவில் உயர்ந்திருக்கின்றது.

உலக சந்தையில் இந்த கார் மாடல் 570எஸ் மற்றும் 570எஸ் ஸ்பைடர் என்கிற இரண்டு விதமான தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இரண்டிலும் 562 எச்பி ஆற்றலை உருவாக்கும் திறன் கொண்ட ட்வின் டர்போ வி8 மோட்டாரே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இது மணிக்கு 333 கிமீ வேகத்தில் இயங்கும்.

அதேநேரத்தில் வெறும் 3.2 செகண்டுகளில் இந்த கார் மணிக்கு 96 கிமீட்டருக்கும் அதிகமான வேகத்தை எட்டிவிடும். இத்தகைய சூப்பர் ஃபாஸ்ட் வேகத்தில் செல்லும் திறன் கொண்ட காரையே 21 வயதே ஆன யூட்யூபர் தன்னுடைய அஜாக்ரதையான செயலால் காயலாங் கடைக்கு போடும் அளவிற்கு வீணாகி போயிருக்கின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: யுட்யூப் பிரபலங்கள் சிலர் மிகப் பெரிய தொழிலதிபர்களுக்கு இணையான ஆடம்பர வாழ்க்கையை வாழ்ந்துக் கொண்டிருக்கின்றனர். அந்த மாதிரியான ஓர் இளைஞரே கிஸ் ஸ்ட்ரீமர் என்று அறியப்படும் ஜேக் டோஹர்தி ஆவார். தன்னுடைய மொத்த சொத்தாக இந்த கார் இருந்த நிலையில், அதை தற்போது அவர் இழந்திருக்கின்றார். அத்துடன், அவருடைய யுட்யூப் சேனலையும் இழந்திருக்கின்றார். இதனால் தன்னுடைய 15 மில்லியன் ஃபாலோயர்களை அவர் இழந்திருக்கின்றார்.

More from DriveSpark

Article Published On: Wednesday, October 9, 2024, 5:00 [IST]
English summary
Youtuber jack doherty crashes his 200000 usd mclaren during a livestream
மேலும்... #car crash
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+