அரசியலில் குதிக்க போகும் பிரபல யூடியூபர்? டொயோட்டா இன்னோவா காரை வாங்கியதற்கு உண்மையான காரணம் இதுதானா!

சினிமா நட்சத்திரங்களுக்கு இணையான செல்வாக்கு மற்றும் புகழை யூடியூபர்கள் (YouTubers) தற்போது பெற்று கொண்டுள்ளனர். அத்துடன் அவர்களது வருமானமும் அதிகளவில் உள்ளது. எனவே சமீப காலமாக யூடியூபர்கள் பலர் மிகவும் விலை உயர்ந்த கார்களை வாங்கி கொண்டுள்ளனர். இந்த வரிசையில் யூடியூபர் ஒருவர் தற்போது புத்தம் புதிய காரை வாங்கியுள்ளார். அது டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா (Toyota Innova Crysta) ஆகும். இது இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக உள்ள எம்பிவி (MPV) ரக கார்களில் ஒன்று.

கர்நாடக மாநில மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ள ஜீவா வினய் (Jeeva Vinay) என்ற யூடியூபர்தான் தற்போது டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காரை வாங்கியுள்ளார். டொயோட்டா ஷோரூமிற்கு சென்று அவர் இன்னோவா க்ரிஸ்ட்டா காரை டெலிவரி எடுத்த வைரல் வீடியோ (Viral Video) சமூக வலை தளங்களில் தற்போது வேகமாக பரவி வருகிறது.

Jeeva Vinay Takes Delivery Of Toyota Innova Crysta

ஜீவா வினய் வாங்கியுள்ள டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா கார் தற்போதைய நிலையில் 19.99 லட்ச ரூபாய் என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இது ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை ஆகும். இந்த காரின் டாப் வேரியண்ட்டின் விலை 26.55 லட்ச ரூபாயாக இருக்கிறது.

இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும். டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா கார் 7 சீட்டர் மற்றும் 8 சீட்டர் ஆப்ஷன்களில் கிடைத்து கொண்டுள்ளது. எனவே அதிகம் பேர் பயணம் செய்ய கூடிய வகையிலான ஒரு காரை எதிர்பார்க்க கூடிய வாடிக்கையாளர்கள் மத்தியில் டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா பிரபலமாக திகழ்கிறது.

அத்துடன் இது அரசியல்வாதிகள் மத்தியிலும் மிகவும் பிரபலமாக இருந்து வர கூடிய கார்களில் ஒன்றாகும். அப்படிப்பட்ட ஒரு காரை வாங்கியுள்ளதால், ஜீவா வினய் அரசியலில் குதிக்க போகிறாரா? என ஒரு சில நெட்டிசன்கள் சமூக வலை தளங்களில் வேடிக்கையாக கமெண்ட் செய்து வருகின்றனர்.

டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காரின் செயல்திறனை பொறுத்தவரையில், 2.4 லிட்டர் டீசல் இன்ஜின் ஆப்ஷன் வழங்கப்படுகிறது. அதிகபட்சமாக 150 பிஎஸ் பவர் மற்றும் 343 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய வகையில் ட்யூனிங் செய்யப்பட்டுள்ள இந்த இன்ஜின் உடன் 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் ஆப்ஷன் வழங்கப்பட்டுள்ளது.

8 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், ஆம்பியண்ட் லைட்டிங் மற்றும் ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல், பாதுகாப்பிற்காக 7 ஏர்பேக்குகள், முன் மற்றும் பின் பகுதியில் ரியர் பார்க்கிங் சென்சார்கள் என ஏகப்பட்ட வசதிகளை (Features) டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா கார் கொண்டுள்ளது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: ஜீவா வினய் வாங்கியுள்ள டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா இந்திய மக்களின் நம்பிக்கையை பெற்ற கார்களில் ஒன்றாகும். தாராளமான இட வசதி, சக்தி வாய்ந்த இன்ஜின், சொகுசான பயண அனுபவம் மற்றும் அதிக ரீ-சேல் வேல்யூ உள்ளிட்ட காரணங்களால்தான், டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா புகழ்பெற்று விளங்குகிறது. இந்த காரணங்களுக்காகவே ஜீவா வினய்யும் டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காரை வாங்கியிருப்பார் என நாங்கள் கருதுகிறோம்.

More from DriveSpark

Article Published On: Thursday, January 23, 2025, 22:47 [IST]
English summary
Youtuber jeeva vinay takes delivery of toyota innova crysta viral video
மேலும்... #celebrity cars #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+