காரே ஓட்ட தெரியாதாம்.. விலைமிக்க பிஎம்டபிள்யூ காரை வாங்கிட்டாங்க.. வாழ்வதற்காக பப்ஜியை நம்பியிருக்கும் பெண்!
வாழ்வாதாரத்திற்காக ஒருவர் ஒரு வேலையை நம்பியிருந்த காலம் இப்போது மாறிவிட்டது. இப்போது பலர் இணையத்தையும், இணையம் சார்ந்த விளையாட்டு மற்றும் பிற செயலிகளை நம்பியிருக்கத் தொடங்கி இருக்கின்றனர். ஒரு சிலர் இவற்றின் வாயிலாக பெரும் செல்வந்தர்களாககூட மாறி இருக்கின்றனர். அத்தகைய ஓர் நபராக அறியப்படும் இளம் பெண்ணே காசிவ் ஹிராநந்தினி. இவர் பிரபல பப்ஜி விளையாட்டு பெண் ஆவார். இந்த விளையாட்டு மட்டும் அல்ல இன்னும் பல ஆன்-லைன் சார்ந்த விளையாட்டுகளை விளையாடி அதுகுறித்த வீடியோக்களை இணையத்தில் அவர் பகிர்ந்து வருகின்றார்.
அத்துடன், வீடியோ விளாக்கிங்கையும் அவர் செய்து வருகின்றார். இதன் வாயிலாக கிடைக்கும் வருவாயில் அவர் மிகுந்த ஆடம்பர வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றார்.இதன் மூலம் அவர் தன்னுடைய வாழ்வாதாரத்திற்கு பப்ஜி போன்ற ஆன் விளையாட்டுகள் மற்றும் யுட்யூபையே நம்பி இருக்கின்றார் என தெரிகின்றது.

இவரே தற்போது தன்னுடைய முதல் காரை வாங்கி இருப்பதாக தெரிவித்திருக்கின்றார். இதில் ஓர் பியூட்டி என்ன என்றால் அவருக்கு காரே ஓட்ட தெரியாதாம். இணையத்தை வாழ்வாதாரத்திற்காக நம்பியிருக்கும் இவர் மிகவும் காஸ்ட்லியான காரை வாங்கி இருப்பது மற்றுமொரு உச்சபட்ச ஆச்சரியம் ஆகும்.
பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் சொகுசு கார் மாடலின் 330 எல்ஐ கிரான் லிமோசைன் எம்ஸ்போர்ட் ப்ரோ எடிசன் (BMW 330 Li Gran Limousine M Sport Pro Edition)-னையே அவர் வாங்கி இருக்கின்றார். வாங்கியது முதல் காராக இருந்தாலும், அசத்தலான காரையே அவர் வாங்கி இருக்கின்றார் என்பது கவனிக்கத்தகுந்தது.
சொகுசு வசதிகளுக்கும், அட்வான்ஸ்டு தொழில்நுட்பங்களுக்கும் பெயர்போன கார் மாடலாக 3 சீரிஸ் உள்ளது. காரை டெலிவரி எடுத்த பின்னர் சில வழக்கமான இந்து சாங்கியங்களைச் செய்தே அவர் அந்த காரை முழுமையான பயன்பாட்டிற்குக் கொண்டு வந்திருக்கின்றார். இவருக்கு கார் ஓட்ட தெரியாது என்பதால் வரும் நாட்களில் இந்த காரிலேயே அவர் கார் ஓட்ட பழகிக் கொள்வார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ஆனால், கார் ஓட்ட பழகுவதற்கு புத்தம் புதிய காரை பயன்படுத்த கொஞ்சம் யோசிக்க வேண்டும். ஏனெனில் சிறு தவறும் மிகப் பெரிய பாதிப்பை காரில் ஏற்படுத்திவிடும். இது மிகப் பெரிய செலவிற்கு வழிவகுத்துவிடும். இதனால்தான் கார் ஓட்ட பழகுபவர்கள் விலை குறைவான கார்களை பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்படுகின்றது.

யுட்யூபர் வாங்கி இருக்கும் இந்த பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் சொகுசு கார் ஒன்றின் விலை ரூ. 63 லட்சத்திற்கும் அதிகம் ஆகும். இந்த காரில் வளைவான திரை, மின்சாரத்தால் அட்ஜெஸ்ட் செய்யும் வசதிக் கொண்ட இருக்கைகள், சொகுசான இருக்கைகள், பிஎம்டபிள்யூ 8.5 ஓஎஸ் வசதிக் கொண்ட திரை, வயர்லெஸ் சார்ஜர் போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன.
இதுமட்டுமல்ல பார்க் அசிஸ்ட் பிளஸ், பனோரமிக் சன்ரூஃப், ஆம்பியன்ட் லைட், மூன்று ஜோன்கள் கொண்ட க்ளைமேட் கன்ட்ரோல் மற்றும் ஆறு ஏர் பேக்குகள் உள்ளிட்டவையும் இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றன. எஞ்சினைப் பொருத்த வரை இந்த 330 எல்ஐ கிராண் லிமோசைன் எம் ஸ்போர்ட் ப்ரோ எடிசன் காரில் 2.0 லிட்டர் 4 சிலிண்டர் பெட்ரோல் மோட்டாரே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இது அதிகபட்சமாக 254 பிஎச்பி மற்றும் 400 என்எம் டார்க்கை வெளியேற்றும் என்பது கவனிக்கத்தகுந்தது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இவ்வளவு அதிக ஆற்றலை உருவாக்கும் சொகுசு காரையே யுட்யூபர் தற்போது வாங்கி இருக்கின்றார். காரை ஓட்ட தெரியாமலேயே இவ்வளவு காஸ்ட்லியான காரை அவர் வாங்கி இருப்பது மொத்த கார் காதலர்களையும் வியப்பில் ஆழ்த்தும் வகையில் அமைந்திருக்கின்றது. இது ஓர் அதிக ஆற்றலை உருவாக்கும் கார் என்பதால் இதில் ஓட்ட பழகும்போது அவர் கொஞ்சம் கவனத்துடன் இருக்க வேண்டும் என்பதே அனைவரின் அறிவுறுத்தலாகவும் இருக்கின்றது.


Click it and Unblock the Notifications








