பழசை மறக்காத பணக்காரரால் பஞ்சர் கடைக்காரருக்கு அடித்த அதிர்ஷ்டம்! இந்த காரோட விலை இத்தன கோடியா! என்ன மனுஷன்யா!
இந்தியா உள்பட உலகின் பல்வேறு நாடுகளிலும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று லேண்ட் ரோவர் டிஃபெண்டர் (Land Rover Defender). இது எஸ்யூவி (SUV) ரகத்தை சேர்ந்த கார் ஆகும். திரையுலக நட்சத்திரங்கள் மற்றும் தொழில் அதிபர்கள் மத்தியில், லேண்ட் ரோவர் டிஃபெண்டர் காருக்கு மிகப்பெரிய வரவேற்பு இருந்து வருகிறது.
இது மிகவும் விலை உயர்ந்த கார் என்பதால், அவர்களால் மட்டுமே வாங்க முடியும். நிலைமை அப்படி இருக்கும்போது, பஞ்சர் கடை மெக்கானிக் ஒருவர், லேண்ட் ரோவர் டிஃபெண்டர் காரை ஓட்டும் வைரல் வீடியோ (Viral Video) ஒன்று சமூக வலை தளங்களில் தற்போது வேகமாக பரவி வருகிறது. இது அந்த பஞ்சர் கடை மெக்கானிக்கின் கார் கிடையாது.

மோகன் குமார் (Mohan Kumar) என்பவருக்கு சொந்தமானது ஆகும். சமூக வலை தளங்களில் பிரபலமாக உள்ள இவர், கட்டுமான நிறுவனம் ஒன்றை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. வாழ்க்கையில் மிகப்பெரிய உயரங்களை எட்டியிருந்தாலும் கூட, பழைய விஷயங்களை மறக்காத தன்மையை கொண்டவராக மோகன் குமார் அறியப்படுகிறார்.
தற்போது வைரலாக பரவி வரும் வீடியோவிலேயே இதை நம்மால் உணர முடிகிறது. இந்த வீடியோவில் பஞ்சர் கடை மெக்கானிக் லேண்ட் ரோவர் டிஃபெண்டர் காரை ஓட்டுவதையும், மோகன் குமார் அவருக்கு அருகில் அமர்ந்திருப்பதையும் நம்மால் பார்க்க முடிகிறது. இவர்கள் இருவருக்கும் இடையே மிக நீண்ட வருடங்களாக நட்பு இருந்து வருகிறது.

அந்த நட்பின் அடிப்படையில்தான், தனது லேண்ட் ரோவர் டிஃபெண்டர் காரை ஓட்டும் வாய்ப்பை, பஞ்சர் கடை மெக்கானிக்கிற்கு மோகன் குமார் வழங்கியுள்ளார். இதற்காக சமூக வலை தளங்களில் பலரும் மோகன் குமாருக்கு பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். நாங்கள் ஏற்கனவே குறிப்பிட்டதை போல், லேண்ட் ரோவர் டிஃபெண்டர் மிகவும் விலை உயர்ந்தது.
இந்த காரின் ஆரம்ப விலையே 93.55 லட்ச ரூபாயாக உள்ளது. அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 2.35 கோடி ரூபாயாக இருக்கிறது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) மட்டுமே. ஆன்-ரோடு விலை (On-Road Price) இன்னும் கூடுதலாக வரும்.
லேண்ட் ரோவர் டிஃபெண்டர் காரில் 2.0 லிட்டர் பெட்ரோல், 3.0 லிட்டர் பெட்ரோல், 5.0 லிட்டர் பெட்ரோல் மற்றும் 3.0 லிட்டர் டீசல் இன்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. அத்துடன் 10 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் மற்றும் 12.3 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் உள்ளிட்ட வசதிகளும் இந்த காரில் கொடுக்கப்பட்டுள்ளன.
இதுதவிர ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல், ஹெட்ஸ் அப் டிஸ்ப்ளே, வயர்லெஸ் செல்போன் சார்ஜர், கனெக்டட் கார் தொழில்நுட்பம், 360 டிகிரி கேமரா, ரியர் பார்க்கிங் சென்சார்கள், 6 ஏர்பேக்குகள் மற்றும் ட்ராக்ஸன் கண்ட்ரோல் போன்ற வசதிகளும், லேண்ட் ரோவர் டிஃபெண்டர் காரில் இடம்பெற்றுள்ளன.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: மிகவும் விலை உயர்ந்த லேண்ட் ரோவர் டிஃபெண்டர் காரை, பஞ்சர் கடை மெக்கானிக்கிற்கு ஓட்ட வழங்கியிருப்பது என்பது, உண்மையிலேயே மோகன் குமாரின் நல்ல மனதை வெளிக்காட்டுவதாக உள்ளது. வரும் காலங்களில் அவர் இதுபோல் இன்னும் நிறைய விலை உயர்ந்த வாகனங்களை வாங்க வாழ்த்துக்கள்.


Click it and Unblock the Notifications








