முக்கோண வடிவில் சைக்கிள் வீல்! சாதித்து காட்டிய யூடியூபர்!

சைக்கிளிற்கு வீல் வட்டமாகத்தான் இருக்கும் அதை நாம் எல்லோரும் பார்த்திருப்போம். ஆனால் யூடியூபர் ஒருவர் தன் சைக்கிள் வீலை முக்கோண வடிவமைப்பில் செய்து அதை சாதாரண சைக்கிள் போல ஓட்டியும் காட்டியுள்ளார். இது எப்படிச் சாத்தியமானது? முக்கோண வடிவில் எப்படி சைக்கிள் வீலை செய்ய முடியும்? இது குறித்து விரிவாகக் காணலாம் வாருங்கள்.

மனிதன் பரிணாம வளர்ச்சி அடைய முக்கியமான காரணம் சக்கரம், சக்கரம் கண்டுபிடிக்கப்பட்ட பின்பு தான் மனிதன் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு நகரத் துவங்கினான். அவர் நகரத் துவங்கியதற்குப் பின்பு தான் புதிய புதிய விஷயங்களைக் கற்றுக்கொண்டான். தன்னை தானே மாற்றிக்கொண்டு பரிணாம வளர்ச்சியை அடைந்தான்.

triangle wheel cycle

அன்று அவர் கண்டுபிடித்த சக்கரம் தான் இன்றளவும் வாகனங்களில் சக்கரங்களின் வடிவமாக இருக்கிறது. இந்த வட்ட வடிவ வீல்கள் சைக்கிள் முதல் அதிக விலை மதிப்பு கொண்ட கார்கள் வரை ஒரே மாதிரி வட்டமாகத் தான் இருந்தது. ஆனால் இதைச் சமீபத்தில் யூடியூபர் ஒருவர் மாற்றியமைத்துள்ளார். வட்டமாக இல்லாத பொருட்களால் எளிதாகச் சுலபமாக நகரமுடியாது என்று தான் நாம் படித்திருப்போம்.

சமீபத்தில் யூடியூபர் ஒருவர் வெளியிட்டுள்ள வீடியோவில் அவர் முக்கோண வடிவில் வீல்களை வடிவமைத்து அதைச் சைக்கிளில் பொருத்தி சாதாரணமாகச் சைக்கிள் போலப் பயன்படுத்தி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. பலர் இதைப் பகிர்ந்து இது குறித்து விவாதித்து வருகின்றனர்.

triangle wheel cycle

இந்த வீல்களை தயாரிக்க அவர் மரத்தாலான வீல் ஃப்ரேம்களை வடிவமைத்துள்ளார். மெட்டல் ஃப்ரேம்களை பயன்படுத்தவில்லை. அதில் டயர்கள் பொருத்தப்பட்டுள்ளது. இது போக கன்வென்சனல் பேரிங், ஹப்ஸ் மற்றும் டிஸ்க் பிரேக் பொருத்தப்பட்டுள்ளது. இந்த வீல் முக்கோண வடிவில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் ஃப்ரேம் முதல் டயர் வரை அவரே வடிவமைத்துள்ளார்.

முக்கோண வடிவில் வீல் இருந்தால் இது சாதாரணமாக நகராது. முக்கியமாக வீலை சுத்த முயற்சித்தால் வரும் பெரிய பிரச்சனை ஆக்ஸில் ஒரே இடத்தில் இருக்காமல் மேலும் கீழுமாக நகரத் துவங்கும். இது பெரிய பிரச்சனையாக இருக்கும். இதை இந்த யூடியூபர் சரி செய்துள்ளார். வீல்களுக்கு மேலே ஒரு ரோலரை செட் செய்து வாகனத்தின் ஆக்ஸில் மேலே செல்லாமல் தடுத்துள்ளார்.

triangle wheel cycle

அதே நேரம் அவர் பயன்படுத்தியுள்ள சஸ்பென்சன் சிஸ்டமும் வாகனத்தின் ஆக்ஸிலின் உயரத்தை அதிகப்படுத்தாமல் வைக்க உதவி செய்கிறது. இந்த வீல் பொருத்தப்பட்ட பைக்கை ஒருவர் ஓட்டி செல்வது போவும் இதில் விடியோ உள்ளது. இந்த யூடிபர் இந்த முக்கோண வடிவ வீலை எப்படி உருவாக்கினார் எனவும் வீடியோ வெளியிட்டுள்ளார்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இவர் முக்கோண வடிவிலான வீல் மட்டுமல்ல இவர் சதுர விடிவிலும் வீலை உருவாக்கியுள்ளார். இது போல இவர் சைக்கிளில் பல்வேறு மாற்றங்களைச் செய்து பல வீடியோக்களை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோக்கள் எல்லாம் சைக்கிள் பிரியர்கள் மத்தியில் வைரலாக பரவி வருகிறது. பலர் இந்த வீடியோவை பகிர்ந்து வருகின்றனர்.

More from DriveSpark

Article Published On: Tuesday, May 30, 2023, 18:44 [IST]
English summary
Youtuber made triangle wheel cycle video gone viral
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X