Just In
- 2 hrs ago
ஒருபக்கம் விலை அதிகரிப்பு, மறுபக்கம் சலுகை!! மோட்டார்சைக்கிள் விற்பனையில் கவாஸாகியின் அடுத்தடுத்த அறிவிப்புகள்
- 3 hrs ago
மக்களை தைரியமாக எலெக்ட்ரிக் கார் வாங்க வைக்க அதிரடி... கோவையை தொடர்ந்து மற்றொரு நகரிலும் தரமான சம்பவம்...
- 5 hrs ago
வாகனத்தில் தனியாக செல்லும்போது மாஸ்க் அணிவது கட்டாயமா, இல்லையா? - மத்திய அரசு விளக்கம்
- 15 hrs ago
சூப்பர்... மஹிந்திரா நிறுவனத்தின் பாதுகாப்பான கார் செய்த தரமான சம்பவம்... என்னனு தெரியுமா?
Don't Miss!
- News
கேரளாவில் ஓடும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் தீப்பிடித்ததால் பரபரப்பு... பெரும் விபத்து தவிர்ப்பு!
- Sports
வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்கூரை பாராட்டி ட்வீட்டிய கேப்டன்... மராத்தியில் பாராட்டு
- Finance
40% வரை ஸ்மார்ட்போன்களுக்கு தள்ளுபடி.. அமேசானின் சூப்பர் சலுகைகள்.. கவனிக்க வேண்டிய ஆஃபர் மழை..!
- Movies
திருமணம் செய்வதாக ஏமாற்றி, பாலியல் வன்கொடுமை.. பைலட் மீது டிவி நடிகை பரபரப்பு புகார்!
- Education
ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Lifestyle
வார ராசிபலன் 17.01.2021 முதல் 23.01.2021 வரை – இந்த ராசிக்காரர்களுக்கு லாபம் நிறைந்த வாரமிது…
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
யுடியூப் சேனலை சப்ஸ்க்ரைப் செய்தவரின் வீட்டிற்கு வந்த 40 கார்கள்- ஆச்சிரியத்தில் ஆடிப்போன குடும்பம்
ஜிம்மி டோனால்ட்சன் என்கிற பிரபலமான யுடியூப் சேனல் நிர்வாகி ஒருவர் தனது ரசிகர்களுக்காக 40 கார்களை அனுப்பி வைத்து ஆச்சிரியப்படுத்தியுள்ளார். இதுகுறித்த கூடுதல் சுவாரஸ்யமான தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

ஜிம்மி டோனால்ட்சன், மிஸ்டர்பீஸ்ட் என்ற பெயரில் யுடியூப்பில் பிரபலமானவர். ரசிகர்களை பரிசு பொருட்களை வழங்கி மகிழ்விப்பதினாலும், விலையுயர்ந்த பொருட்களை வாங்கி குவிப்பதினாலும் இவருக்கு ரசிகர் பட்டாளம் பெரியது.

வீடியோ பகிர்வு தளத்தின் பிளந்த்ரோபிஸ்ட் என்று கூறப்படும் மிஸ்டர் பீஸ்ட், "மிஸ்டர் பீஸ்ட் சேலஞ்சில்" ஒரு ரசிகருக்கு 1 மில்லியன் சந்தாதாரர்களை வழங்கியபோது அனைவராலும் கவனம் ஈர்க்கப்பட்டார். ஜிம்மி டோனால்ட்சனின் இவ்வாறான மேலதிக வினோதங்களின் பட்டியல் முடிவற்றது.

ஒரு டீலர் ஷோரூமில் இருந்து அனைத்து கார்களையும் வாங்குவது, பணியாளர்களுக்கு ஆயிரக்கணக்கான டாலர்களை டிப்ஸ் கொடுப்பது, அனைத்து நாய்களையும் ஒரு தங்குமிடத்தில் இருந்து தத்தெடுப்பது, அந்நியர்களுக்கு ஒரு இலவச வங்கியைத் திறப்பது, 20 மில்லியன் மரங்களை நடவு செய்வது என இவரது ரசிகர்களை கவரும் செயல்கள் ஏராளம்.

இவ்வாறான செயல்களின்போது சில முறை நாம் எதிர்பார்ப்பதில் இருந்து மாறுப்பட்ட செயல்களும் நடப்பது உண்டு. இப்படிதான், ஒருமுறை மிஸ்டர்பீஸ்ட் ரூ.5 கோடி மதிப்புள்ள ஒரு தீவை வாங்கி ஒரு வேடிக்கையான தீவு சவாலில் ஒரு நண்பருக்கு கொடுக்க முடிவு செய்தபோது சில விஷயங்கள் வினோதமாகிவிட்டன.

யூடியூபில் ஒவ்வொரு முறையும் ஒரு புதிய அடையாளத்தைத் தொட்டதால் தனது சந்தாதாரர்களுக்கு பரிசளிக்கும் பாரம்பரியத்தைக் கடைப்பிடித்து வந்த மிஸ்டர்பீஸ்ட் இப்போது 40 மில்லியனுக்கும் அதிகமான சந்தாதாரர்களை பெற்றதால் 40 மில்லியானவது சந்தாதாரருக்கு 40 கார்களை வழங்கியுள்ளார்.
மிஸ்டர்பீஸ்ட் தனது குழுவினருடன் 40 கார்களை தனது சிறப்பு சந்தாதாரர் லூக்கின் வீட்டிற்கு ஏற்றிக்கொண்டு டைமரைத் தொடங்கியபோது அதுவே புதிய சவாலாக அமைந்தது. போர்ஷேவில் துவங்கி, தனிபயன் ஸ்போங்கேபாப் ஜீப், செடான் என இந்த 40 வாகனங்களில் லாரிகள் கூட அடங்குகின்றன.

இவற்றை லூக்கிற்கு 24 மணி நேரத்திற்குள் கொடுக்க வேண்டியிருந்தது. மிஸ்டர்பீஸ்டை போல் லூக் தனது குடும்ப உறுப்பினர்கள், தாத்தா, பாட்டி, நண்பர்கள், ஒரு டிரைவர் மற்றும் வால்மார்ட் வாகன நிறுத்துமிடத்தில் ஒரு மனிதருக்கு என தனக்கு வந்த கார்களை அவர்களுக்கு ஆளுக்கு ஒன்றாக பரிசளித்தார்.

5 மணிநேரத்திற்கு முன்பாகவே இந்த பணி நிறைவடைந்த நிலையில், பதிலுக்கு ஒரு சிறப்பு காரை லூக் திருப்பி ஜிம்மிக்கு பரிசாக வழங்கினார். முன்னதாக, மிஸ்டர்பீஸ்ட் 3 மில்லியன் சந்தாதாரர்களை தாண்டியபோது, அவர் ஒரு சந்தாதாரருக்கு 3 மில்லியன் சில்லறைகளை வழங்கி இருந்தார்.

4 மில்லியனின்போது, சம எண்ணிக்கையிலான குக்கீகள் பரிசாக வழங்கப்பட்டன. அவர் 5 மில்லியனைத் தாண்டியபோது, 5 மில்லியன் பாப்கார்ன் துண்டுகளை அந்த சந்தாதாரர் பெற்றிருந்தார். 7 மில்லியன் சந்தாதாரருக்கு "மிஷன் அசாத்தியமான மாஸா" வைக்கப்பட்டது, மேலும் அவருக்கு 7 மில்லியன் அமெரிக்க டாலர் ரொக்கத் தொகையுடன் 7 மில்லியன் கழிப்பறை காகித தாள்கள் வழங்கப்பட்டன.