யூடியூப் மூலம் இவ்வளவு சம்பாதிக்கலாம் என்று தெரியாமல் போச்சே... பிறந்த நாளுக்கு இலவசமாக டெஸ்லா கார்கள்!!

பிரபல அமெரிக்க யூடியூப்பர் ஒருவர் தனது 26வது பிறந்த நாளை முன்னிட்டு 26 பேருக்கு இலவசமாக டெஸ்லா எலக்ட்ரிக் கார்களை வழங்குகிறார். இதில் ஒன்று டெஸ்லாவின் சமீபத்திய அறிமுகமான சைபர்டிரக் ஆகும். யார் இந்த அமெரிக்கன் யூடியூபர்? இத்தனை கார்களை இலவசமாக வழங்கும் அளவிற்கு இவரிடம் பணம் உள்ளதா? என்பதை பற்றிய கூடுதல் விபரங்களை இனி பார்க்கலாம்.

பிரபல சமூக வலைத்தளமான யூடியூப் நாளுக்கு நாள் வளர்ச்சி கண்டு வருகிறது. உலகில் ஒவ்வொரு நாளும் ஏறக்குறைய சுமார் 25 இலட்சம் வீடியோக்கள் யூடியூப்பில் பதிவேற்றம் செய்யப்படுவதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. அதாவது, ஒவ்வொரு மணிநேரத்திற்கும் 1 லட்சத்திற்கும் அதிகமான வீடியோக்கள். இந்த வீடியோக்கள் அனைத்தையும் மொத்தமாக பார்த்து முடிப்பதற்கு உங்களுக்கு சுமார் 18 ஆயிரம் வருடங்கள் தேவைப்படும்.

youtube

ஆனால் இதில் வேடிக்கை என்னவென்றால், எந்த வீடியோவில் இருந்து பார்க்க ஆரம்பிக்கலாம் என நீங்கள் யோசிக்கும் நேரத்திற்குள் சில நூறு வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கும். இவ்வாறு, ஒவ்வொரு நிமிடமும், ஒவ்வொரு வினாடியும் அபரிதமான வளர்ச்சி அடைந்துவரும் யூடியூப் மூலம் பலர் கை நிறைய சம்பாதிக்கின்றனர். அத்தகையவர்களுள் ஒருவர் தான், ஜிம்மி டோனால்ட்சன்.

அமெரிக்காவை சேர்ந்தவரான இவர் மிஸ்டர் பீஸ்ட் என்கிற பெயரில் நடத்திவரும் யூடியூப் சேனலுக்கு உலகம் முழுவதில் இருந்தும் சப்ஸ்கிரைபர்கள் உள்ளனர். இன்னும் சரியாக சொல்ல வேண்டுமென்றால், தற்போதைய நிலவரப்படி யூடியூப் மூலமாக உலகிலேயே அதிக வருவாயை ஈட்டியுள்ளவர் ஜிம்மி டோனால்ட்சன் ஆவார். மிஸ்டர் பீஸ்ட் யூடியூப் சேனல் இந்த அளவிற்கு உலகம் முழுவதும் பிரபலமாகி இருப்பதற்கு முக்கிய காரணம், வித்தியாச, வித்தியாசமான உள்ளடக்கத்துடன் இவர் பதிவிடும் வீடியோக்கள் ஆகும்.

youtuber giving cars to followers

2017ஆம் ஆண்டில் ஜிம்மி டோனால்ட்சன் யூடியூப்பில் பதிவிட்ட வீடியோ ஒன்று இவரை உலகம் முழுவதும் பிரபலமாக்கியது. 1 லட்சம் டாலர்கள் வரையில் பண நோட்டுகளை ஜிம்மி டோனால்ட்சன் வெறும் கைகளால் எண்ணுவதுதான் அந்த வீடியோவில் இருந்த விஷயம் ஆகும். இதற்கு 44 மணிநேரம் தேவைப்பட்டதாக பின்னர் ஒரு நேர்காணலில் ஜிம்மி தெரிவித்து இருந்தார். இந்த வீடியோவின் மூலம் உலகம் முழுவதும் ரசிகர்களை பெற்ற இவர், அதன்பின் திரும்பி பார்க்க கூட நேரம் இல்லாத அளவுக்கு யூடியூப்பில் வளர்ந்துக் கொண்டிருக்கிறார்.

இதன் மூலமாக, செல்வ செழிப்பில் திளைத்துவரும் ஜிம்மி டோனால்ட்சனின் 26வது பிறந்தநாள் கடந்த மே 7ஆம் தேதி சென்றது. தனது இந்த பிறந்த நாளை கொண்டாடும் விதமாக 26 டெஸ்லா எலக்ட்ரிக் கார்களை வாங்கி அவற்றை 26 பேருக்கு இலவசமாக ஜிம்மி டோனால்ட்சன் வழங்க உள்ளார். அந்த 26 டெஸ்லா கார்களுடன் நின்று எடுத்துக் கொண்ட புகைப்படத்தை இவர் தனது மிஸ்டர் பீஸ்ட் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

youtuber giving cars to followers

இதுவரையில் 1 கோடிக்கும் அதிகமான லைக்குகளை பெற்றுள்ள இந்த இன்ஸ்டாகிராம் பதிவில், "இது எனது 26வது பிறந்தநாள், அதனால் என்னை பின்தொடர்பவர்களுக்கு 26 டெஸ்லா கார்களை வழங்குகிறேன்! இந்த வாய்ப்பை பெற உங்களது 2 நண்பர்களின் பெயரை குறிப்பிட்டு இந்த பதிவை லைக் மற்றும் கமெண்ட் செய்யுங்கள்! நீங்கள் என்னை பின்தொடர்கிறீர்களா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

ஏனெனில், அப்போதுதான் நீங்கள் டெஸ்லா காரை வென்றால் என்னால் உங்களிடம் தெரிவிக்க முடியும். காரை பெறும் வெற்றியாளர்கள் இன்னும் 7 நாட்களில் அறிவிக்கப்படுவர். இந்த பதிவை உங்களது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் வைத்து, உங்களது நண்பர்களும் டெஸ்லா காரை வெல்ல உதவுங்கள்" என ஜிம்மி டோனால்ட்சன் தெரிவித்துள்ளார்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஜிம்மி டோனால்ட்சன் பின்தொடர்பாளர்களை கவர்வதில் எந்த அளவுக்கு கைத்தேர்ந்தவர் என்பதை இந்த ஒரு இன்ஸ்டாகிராம் பதிவின் மூலம் அறியலாம். லைக் & ஷேர் செய்ய சொன்னது மட்டுமின்றி, 2 நண்பர்களை மென்ஷன் செய்யவும் என அன்பாக கட்டளையிட்டுள்ளார். இதன் மூலமாக, இவரது இந்த இன்ஸ்டா பதிவு மேலும் புது, புது இன்ஸ்டாகிராம் பயனர்களை சென்றடையும். இருப்பினும், இலவசமாக 26 டெஸ்லா கார்களை வழங்கும் மனது நிறைய பேருக்கு வராது.

More from DriveSpark

Article Published On: Thursday, May 9, 2024, 8:00 [IST]
English summary
Youtuber mrbeast giving 26 tesla electric cars to his followers as his birthday gift
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X