இளைஞராக இருந்த போது என்னென்ன வேலைகளை செஞ்சாரு! எலக்ட்ரிக் கார் உடன் குடும்பமாக செட்டில் ஆகிட்டார்!
மஹிந்திரா (Mahindra) நிறுவனம் சமீபத்தில் அதன் பிஇ 6 (BE 6) மற்றும் எக்ஸ்.இ.வி 9இ (XEV 9e) எலக்ட்ரிக் கார்கள் (Electric Cars)-இன் டெலிவிரிகளை துவங்கியதில் இருந்து ஷோரூம்களில் கூட்டம் அலைமோதுகிறது. பாமர மக்களில் இருந்து சினிமா பிரபலங்கள் வரையில் பலரும் வரிசையாக மஹிந்திராவின் புதிய எலக்ட்ரிக் கார்களை வாங்கி வருகின்றனர். பிஇ 6 மற்றும் எக்ஸ்.இ.வி 9இ எலக்ட்ரிக் கார்களுக்கான புக்கிங் கடந்த பிப்ரவரி மாதத்தில் துவங்கியதுமே பெரும் பணக்காரர்கள் கூட இந்த எலக்ட்ரிக் கார்களை ஆர்வமாக முன்பதிவு செய்திருப்பதை இதில் இருந்து அறிய முடிகிறது.
இதை எல்லாம் ஏன் இப்போது கூறுகிறோம் என்றால், பிரபல யூடியூப்பர் (Youtuber) ஒருவர் பிராண்ட்-நியூ மஹிந்திரா எக்ஸ்.இ.வி 9இ எலக்ட்ரிக் காரை டெலிவிரி பெற்றுள்ளார். யார் அவர் என்பதையும், அவர் வாங்கியுள்ள எக்ஸ்இவி 9இ எலக்ட்ரிக் காரை பற்றியும் தான் இனி இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம். வாருங்கள் செய்திக்குள் போகலாம்.

இணைய சேவைகளின் பயன்பாடு அதிகரித்த பிறகு கற்பனை திறன் உள்ள நிறைய பேர் மக்கள் மத்தியில் கவனத்தை பெற்றுள்ளனர். குறிப்பாக, யூடியூப்பில் வீடியோக்களை பதிவேற்றம் செய்யும் யூடியூப்பர்கள் விரைவாகவே பிரபலமடைகின்றனர். அந்த வகையில், இணையவாசிகள் மத்தியில் கடந்த 10 வருடங்களுக்கு முன்பே கவனத்தை பெற ஆரம்பித்தவர் தான், மும்பைகர் நிகில் (Mumbiker Nikhil) ஆவார்.
பெயரை பார்த்ததுமே தெரிந்திருக்கும், இவர் ஒரு மும்பைவாசி என்பது. ஆனால், இவரது உண்மையான பெயர் நிகில் சர்மா (Nikhil Sharma) ஆகும். யூடியூப் போன்ற சமூக வலைத்தளங்கள் எல்லாம் புதுமையானதாக நமக்கு தோன்றிய 2013ஆம் காலக்கட்டத்திலேயே யூடியூப்பில் சேனல் ஆரம்பித்து வீடியோக்களை பதிவேற்றம் செய்ய துவங்கியவர். அந்த சமயத்தில் பெரியதாக போட்டி இல்லாததால் அடுத்த சில வருடங்களிலேயே யூடியூப்பில் பிரபலமடைந்துவிட்டார்.

மும்பைகர் நிகில் எனப்படும் நிகில் சர்மாவுக்கு பைக்குகளை ஓட்டுவது என்றால் சிறு வயதில் இருந்தே பிடித்தமான ஒன்றாக இருந்துள்ளது. இதனால், ஆரம்பத்தில் யூடியூப்பில் தனது பைக் பயணங்களை வீடியோவாக காட்சிப்படுத்தி பதிவிட ஆரம்பித்தார். பின்னர் அதன் நீட்சியாக, காஷ்மீர் (Kashmir)-இல் இருந்து கன்னியாக்குமரி (Kanyakumari) வரையில் பைக் பயணம் மேற்கொண்டது, மும்பைகர் நிகிலை இந்திய அளவில் பிரபலப்படுத்தியது.
இளைஞராக இருந்த போது யூடியூப்பில் தொடர்ச்சியாக பைக் வி-லாக் வீடியோக்களாக போட்டு பிரபலமாகியவர், தற்போது மனைவி, குழந்தை உடன் குடும்பஸ்தரராக உள்ளார். இந்த நிலையில்தான், யூடியூப்பர் மும்பைகர் நிகில் புதியதாக பிராண்ட்-நியூ மஹிந்திரா எக்ஸ்இவி 9இ எலக்ட்ரிக் காரை வாங்கி உள்ளார்.

தாய், தந்தை, மனைவி மற்றும் குழந்தை என குடும்பமாக ஷோரூமுக்கு சென்று எக்ஸ்இவி 9இ எலக்ட்ரிக் காரை நிகில் சர்மா டெலிவிரி பெறும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த வீடியோவில், கோல்டன் நிறத்தில் எக்ஸ்இவி 9இ எலக்ட்ரிக் காரை இந்த யூடியூப்பர் வாங்கியிருப்பதை பார்க்க முடிகிறது. இந்த நிறத்தை 'டெசர்ட் மிஸ்ட்' (Desert Myst) என மஹிந்திரா நிறுவனம் அழைக்கிறது.
இது இல்லாமல், எவரெஸ்ட் வெள்ளை, டாங்கோ ரெட், டீப் ஃபாரஸ்ட், நெபுலா நீலம், ரபி வெல்வெட், ஸ்டீல்த் பிளாக் என்கிற கலர் ஆப்ஷன்களிலும் எக்ஸ்இவி 9இ எலக்ட்ரிக் கார் விற்பனை செய்யப்படுகிறது. பேக் ஒன், பேக் 2, பேக் 3 செலெக்ட் மற்றும் பேக்-3 என 4 விதமான வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படும் எக்ஸ்இவி 9இ எலக்ட்ரிக் காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் தற்சமயம் ரூ.21.90 லட்சம் - ரூ.30.50 லட்சம் வரையில் உள்ளன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: மேலே குறிப்பிடப்பட்டு இருப்பது, இந்த விலையுயர்ந்த மஹிந்திரா எலக்ட்ரிக் காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் மட்டுமே ஆகும். ஆன்-ரோடு விலை இன்னும் சில இலட்சங்கள் அதிகமாக வரும். இவ்வளவு விலைமிக்க எலக்ட்ரிக் காரை யூடியூப் மூலம் சம்பாதித்து நிகில் சர்மா வாங்கியுள்ளார் என்பது சற்று ஆச்சிரியமாக உள்ளது. அல்லது, வேறு வழிகளில் இவர் பணம் ஈட்டிக் கொண்டிருக்கலாம்.


Click it and Unblock the Notifications









