காரை தர முடியாதுன்னு சொன்ன யூடியூபர்! கேட்டது யார்னு இப்ப தெரிஞ்சிருக்கும்! பழி வாங்கறதுல அண்ணன் ஸ்பெஷலிஸ்ட்!

முன்பெல்லாம் பள்ளியில் படிக்கும் குழந்தைகளை கேட்டால் டாக்டர் ஆக வேண்டும், இன்ஜினியர் ஆக வேண்டும், கலெக்டர் ஆக வேண்டும் என்பார்கள். தற்போது இந்த கனவு பட்டியலில் யூடியூபர் (YouTuber) என்பதும் இணைந்துள்ளது. யூடியூப் (YouTube) மூலம் ஒருவருக்கு மிக எளிதாக புகழும், பணமும் கிடைப்பதுதான் இதற்கு காரணம். இன்று சினிமா நடிகர்களை விஞ்சும் வகையிலான ரசிகர்கள் கூட்டத்தை ஒரு சில யூடியூபர்கள் கொண்டுள்ளனர். தமிழ்நாட்டை பொறுத்தவரையில் இர்பான் (Irfan), கோபி (Gopi), சுதாகர் (Sudhakar) மற்றும் மதன் கௌரி (Madan Gowri) போன்றவர்களை பிரபல யூடியூபர்களாக குறிப்பிட முடியும்.

இந்த வரிசையில் கேரள மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ள யூடியூபர்களில் ஒருவர்தான் நிஹாத் (Nihad). இவர் Mrz Thoppi என்ற பெயரில் யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார். யூடியூபர்களால் மிக குறுகிய காலத்தில் மிகப்பெரிய அளவிற்கு முன்னேற முடியும் என்பதற்கு இவர் தற்போது செய்துள்ள ஒரு சம்பவம் உதாரணம்.

YouTuber Nihad Buys BMW 6 Series

கடந்த ஒரு சில மாதங்களுக்கு முன்பு மற்றொரு யூடியூபர் ஒருவரிடம், அவரது பிஎம்டபிள்யூ காரை ஓட்டி பார்க்க வேண்டும் என்ற ஆசையை நிஹாத் தெரிவித்தார். ஆனால் அந்த யூடியூபரோ காரை ஓட்டுவதற்கு தர மறுத்து விட்டார். இதற்காக நிஹாத் வருத்தப்பட்டு கொண்டு நேரத்தை வீணடிக்கவில்லை. மாறாக பிஎம்டபிள்யூ காரை வாங்கும் முயற்சியில் இறங்கினார்.

முயற்சி செய்தால் வெற்றி கிடைத்தே தீர வேண்டும் என்பதுதான் விதி. இந்த விதிப்படி தற்போது பிஎம்டபிள்யூ காரை நிஹாத் வாங்கி விட்டார். அவர் வாங்கியிருப்பது பிஎம்டபிள்யூ 6 சீரிஸ் (BMW 6 Series) கார் ஆகும். இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் இந்த காரின் ஆரம்ப விலை 73.50 லட்ச ரூபாயாக உள்ளது.

BMW 6 Series

அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 78.90 லட்ச ரூபாயாக இருக்கிறது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும். ஆனால் நிஹாத் வாங்கியிருப்பது யூஸ்டு கார் (Used Car) என தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் அவரது முன்னேற்றத்தை நாம் பாராட்டியே ஆக வேண்டும்.

இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் பிஎம்டபிள்யூ 6 சீரிஸ் காரில் மொத்தம் 3 இன்ஜின் ஆப்ஷன்கள் (Engine Options) வழங்கப்படுகின்றன. அவை 2.0 லிட்டர் பெட்ரோல், 2.0 லிட்டர் டீசல் மற்றும் 3.0 லிட்டர் டீசல் ஆகியவை ஆகும். இந்த 3 இன்ஜின்கள் உடனும் 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் ஆப்ஷன்தான் கொடுக்கப்படுகிறது.

இந்த காரின் வசதிகளை (Features) பொறுத்தவரையில் 12.3 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், 12.3 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், வயர்லெஸ் செல்போன் சார்ஜர், பின் பகுதியில் தலா 10.25 இன்ச் அளவில் 2 டச்ஸ்க்ரீன்கள் மற்றும் பனரோமிக் சன்ரூஃப் போன்றவை எல்லாம் குறிப்பிடத்தக்க அம்சங்கள் ஆகும்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: பல்வேறு சிறப்பம்சங்கள் நிரம்பிய பிஎம்டபிள்யூ 6 சீரிஸ் காரை வாங்கியதன் மூலம், தனக்கு பிஎம்டபிள்யூ காரை தர முடியாது என்று சொன்ன யூடியூபரை, நிஹாத் சிறப்பான முறையில் பழி வாங்கியுள்ளார் என்றே சொல்லலாம். இந்திய சந்தையில் மெர்சிடிஸ் பென்ஸ் இ-க்ளாஸ் (Mercedes Benz E-Class) போன்ற கார்களுக்கு எல்லாம் மாற்று ஆப்ஷனாக பிஎம்டபிள்யூ 6 சீரிஸ் கருதப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Tuesday, December 10, 2024, 17:49 [IST]
English summary
Youtuber nihad buys bmw 6 series viral video check all details here
மேலும்... #celebrity cars #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+