ஒரு வருஷத்துக்கு முன்னாடி பள்ளம் தோண்டி புதைக்கப்பட்ட கார்.. வெளியே எடுத்த பின்னாடி ஓடுச்சா? வீடியோ!!
யுட்யூபில் (Youtube)இல் பார்வையாளர்களைக் கவர வேண்டும் என்பதற்காக யுட்யூபே கதியாக இருப்பவர்கள் விநோத செயலில் ஈடுபடுவது வழக்கமான ஒன்று. அந்தவகையிலேயே, ஓர் யுட்யூப் சேனலைச் சேர்ந்த சிலர் கடந்த ஓராண்டிற்கு முன்னர் புதைக்கப்பட்ட காரை இப்போது வெளியே எடுத்து அதை இயக்கி பார்த்திருக்கின்றார். இந்தியாவிலேயே இந்த விநோத நிகழ்வு அரங்கேறியிருக்கின்றது. குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் என்றால் இந்த வேலையை பார்த்தது 'கிரேசி எக்ஸ்ஒய்இசட்' யுட்யூப் சேனல் ஆகும். விநோதமான செயல்களைச் செய்து அதுபற்றிய வீடியோவை பகிரக் கூடிய ஓர் யுட்யூப் சேனலே இந்த கிரேசி எக்ஸ்ஒய்இசட் ஆகும்.
இவர்கள் சரியாக ஓராண்டுக்கு முன்னர் ஓர ஆடம்பர காரை புதைத்து அதை வெளியே எடுத்து இயக்கி பார்த்திருக்கின்றனர். இந்த சோதனையின்போது அந்த கார் என்ன நிலைமையில் இருந்தது? என்பது பற்றிய தகவலையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாங்க விரிவான பதிவிற்குள் போகலாம்.

யுட்யூபர்கள் புதைத்தது பிஎம்டபிள்யூ சொகுசு கார் மாடல் ஆகும். மணலில் முழுமையாக புதைக்கப்பட்டு இருந்த காரணத்தினால் அந்த காரை எங்களால் அடையாளம் காண முடியவில்லை. சற்றே ஆழமாக தோண்டி இந்த காரை யுட்யூபர்கள் புதைந்திருந்த காரணத்தினால் அதன் குறிப்பிட்ட சில டோர்கள் முழுமையாக சேதமுற்று வேலை செய்யாமல் இருப்பதை நம்மால் காண முடிகின்றது.
மேலும் காருக்குள் முழுமையாக மண் கொட்டப்பட்டு இருந்த காரணத்தினால் காரின் உள்பக்கமும் கடுமையாகப் பாதிக்கப்பட்டு இருப்பதை நம்மால் காண முடிகின்றது. அதேநேரத்தில், பிரேக் மற்றும் ஆக்சிலேட்டர் உள்ளிட்ட சில முக்கிய கருவிகள் கணிசமான அளவில் நல்ல நிலையில் இருந்ததை நம்மால் காண முடிகின்றது.
இதேபோல் அவர்கள் வீலை இயக்கி பார்த்தபோதும் அது பெரிய அளவில் சிரமம் இல்லாமல் திரும்பியதையும் நம்மால் காண முடிகின்றது. இதுமட்டுமல்ல காரின் கிளஸ்டரில் இருந்த லைட்டுகளும் இயங்கும் நிலையில் இருந்ததையும் நம்மால் பார்க்க முடிகின்றது. இன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டும் என்றால் ஓராண்டு மண்ணிற்குள் புதைந்து கிடைந்த போதிலும் பிஎம்டபிள்யூ காரின் பேட்டரிகள் குறைந்தபட்ச பவரை தக்க வைத்திருக்கின்றது.
ஆனால், அதன் எஞ்சின் இயங்கும் நிலையில் இருந்ததா என்பது தெரியவில்லை. அதை யுட்யூப் சேனலைச் சேர்ந்தவர்கள் வெளிப்படையாகக் காண்பிக்கவில்லை. விரைவில் பாகம் இரண்டாக அதுபற்றிய வீடியோவை அவர்கள் வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. எங்களின் யூகிப்பின்படி சிறிய மீட்டெடுப்பிற்கு பின்னர் அந்த காரை அவர் இயக்கி பார்ப்பார்கள் என நாங்கள் எதிர்பார்க்கின்றோம்.

இதுபோன்று யுட்யூபர்கள் காரை வியூவ்ஸுக்காக கார்களைச் சேதைப்படுத்துவது அல்லது வாகனங்கள் சார்ந்த விநோத செயல்களைச் செய்வது முதல் முறையல்ல. ஆனால் உலக நாடுகளைக் காட்டிலும் இந்தியாவில் இதுமாதிரியான நிகழ்வுகள் குறைவாகவே நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அதேநேரத்தில் வேறு சில முன்னணி யுட்யூபர் ரோல்ஸ் ராய்ஸ் காரையே சேதப்படுத்துவது மாதிரியான வீடியோக்களை வெளியிட்டுக் கொண்டிருக்கின்றனர் என்பது கவனிக்கத்தகுந்தது.
இதுமட்டுமல்ல மிகவும் உயரமான இடத்தில் இருந்து வாகனங்களை தள்ளிவிடுவது, வேண்டும் என்றே அபாயகரமான ஆயுதங்களைக் கொண்டு வாகனங்களைச் சேதப்படுத்துவது உள்ளிட்ட மோசமான செயல்களையும் செய்துக் கொண்டிருக்கின்றனர். இந்த மாதிரியான சூழலிலேயே ஓராண்டிற்கு முன்னர் புதைக்கப்பட்ட பிஎம்டபிள்யூ கார் தற்போது வெளியே எடுக்கப்பட்ட நிகழ்வு நம் நாட்டில் அரங்கேறி இருக்கின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: யுட்யூபில் இதுபோன்று ஆடம்பர வாகனங்கள் சார்ந்து மேற்கொள்ளப்படும் முரண்பாடான செயல்குறித்த வீடியோக்களுக்கு பார்வையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைக்கின்றது. இதன் காரணத்தினாலேயே இந்தியா மற்றும் உலக நாடுகளில் உள்ள யுட்யூபர்கள் இந்த மாதிரியான செயலை அதிகம் செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications









