யூடியூப்பில் பணம் சம்பாதித்து இவ்வளவு பெரிய காரை வாங்க முடியுமா? என்னங்க சொல்றீங்க!! ரைடர் கேர்ளின் புதிய கார்

யூடியூப்பில் வீடியோக்களை பதிவு செய்தாலே நன்றாக சம்பாதிக்கலாம் போல. ஏனெனில், பைக் & கார்களை ஓட்டுவதை வீடியோக்களாக யூடியூப்பில் பதிவிட்டு வந்த பிரபல யூடியூப்பர் ஒருவர் புதியதாக டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ் காரை டெலிவிரி பெற்றுள்ளார். யார் அந்த பிரபல யூடியூப்பர்? என்பதையும், அவர் வாங்கியுள்ள இன்னோவா ஹைகிராஸின் சிறப்பம்சங்களையும் இனி பார்க்கலாம், வாங்க.

யூடியூப் போன்ற சமூக வலைத்தளங்களில் பிரபலமாக இருப்பவர்கள் புதியதாக பைக் அல்லது கார் வாங்குவதை சமீப காலமாக அடிக்கடி பார்க்க முடிகிறது. இந்த வகையில், 'ரைடர் கேர்ள்' என்ற பெயரில் யூடியூப்பில் பிரபலமாகிய விஷாகா என்ற பெண் மோட்டார்சைக்கிள் ஆர்வலர் புதியதாக டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ் காரை ஷோரூமில் இருந்து டெலிவிரி எடுத்துள்ளார்.

rider girl takes delivery innova

ரைடர் கேர்ள் என்ற யூடியூப் சேனலை உங்களில் சிலர் பார்த்திருப்பீர்கள் என நினைக்கிறேன். புது, புது பைக் & கார்களை ஓட்டுவதை வீடியோவாக பதிவிட்டு ஓர் யூடியூப்பராக விஷாகா இணையத்தில் அறிமுகமாகினார். இவரது வீடியோக்களில் நகைச்சுவை, நய்யாண்டிகளும் இருந்ததால் பார்வையாளர்கள் அதிகரித்தனர் மற்றும் சப்ஸ்கிரைபர்களும் பெருக துவங்கினார். இதனால் அதன்பின் தனது வாழ்வில் நடக்கும் அனைத்தையும் வீடியோவாக பதிவிட விஷாகா துவங்கினார்.

தற்போது, ஷோரூமில் இருந்து டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ் காரை டெலிவிரி பெற்றிருப்பதையும் கூட வீடியோவாக பதிவு செய்து தனது யூடியூப் சேனலில் விஷாகா பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவை செய்தியின் இறுதியில் காணலாம். விஷாகா தனது குடும்பத்தினர் உடன் டொயோட்டா ஷோரூமுக்கு தனது மஹிந்திரா தாரில் செல்வதில் இருந்து இந்த வீடியோ துவங்குகிறது. விஷாகாவின் முதல் கார் மஹிந்திரா தார் ஆகும்.

rider girl takes delivery innova

இந்த மஹிந்திரா தார் வாகனத்தை சில மாதங்களுக்கு முன்னர் இந்த 2023ஆம் ஆண்டின் துவக்கத்தில்தான் விஷாகா வாங்கி இருந்தார். தற்போது அடுத்த 7 மாதங்களுக்குள் 2வது காரை டெலிவிரி எடுப்பதில் விஷாகா மிகவும் சந்தோஷமாக உள்ளார். இது, டொயோட்டா ஷோரூமில் அவரது முகத்தில் இருந்த மகிழ்ச்சியிலேயே தெரிகிறது. ஷோரூமுக்குள் ஒவ்வொரு நிகழ்வுகளையும் தனித்தனியாக வீடியோவாக காட்சிப்படுத்தியும் இன்ஸ்டாகிராம் ரீல் வீடியோவாக இவர் பதிவேற்றம் செய்துள்ளார்.

அதாவது, ஷோரூமிற்கு சென்றவுடன் அதிகாரிகளிடம் பேசுவது, அதன்பின் மூடப்பட்டு இருந்த காருக்கு அருகில் சென்று இந்த கார் எப்படி இருக்கும் என தனது ஆசைகளை தெரிவிப்பது என ஒவ்வொரு விஷயத்தையும் தனித்தனியாக காட்சிப்படுத்தியுள்ளார். அதேநேரம், மறுப்பக்கம் மொத்த நிகழ்வுகளையும் ஒன்றாக ஒருக்கிணைத்து சுமார் 30 நிமிட வீடியோவாக யூடியூப்பில் பதிவேற்றி உள்ளார். அதனை செய்தியின் இறுதியில் காணலாம் என ஏற்கனவே கூறிவிட்டோம்.

rider girl takes delivery innova

ரைடர் கேர்ள் விஷாகா வாங்கியிருப்பது டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ் காரின் உயர்-நிலை வேரியண்ட்டான இசட்.எக்ஸ் (ஆப்ஷ்னல்) ஆகும். முற்றிலும் பளபளப்பான கருப்பு நிறத்தில் இருக்கும் இந்த காரில் இரு கேப்டன் இருக்கைகள் மத்திய இருக்கை வரிசையில் உள்ளன. இன்னோவா ஹைகிராஸ் இசட்.எக்ஸ் (ஆப்ஷ்னல்) வேரியண்ட்டில் 2.0 லிட்டர் 4-சிலிண்டர் பெட்ரோல்-எலக்ட்ரிக் ஹைப்ரீட் பவர்டிரெயினை டொயோட்டா நிறுவனம் வழங்குகிறது.

காரை டெலிவிரி பெற்று வீட்டிற்கு சென்ற பின், அங்கிருக்கும் தனது மற்ற வாகனங்களுடன் புதிய இன்னோவா ஹைகிராஸ் காரை விஷாகா நிறுத்தியுள்ளார். விஷாகாவிடம் ஏற்கனவே மஹிந்திரா தார் உள்ளதாக கூறிவிட்டோம். இவை இரண்டு மட்டுமின்றி, ஹோண்டா மொபைலியோ காரும், கேடிஎம் ட்யூக் 390 மற்றும் ராயல் என்பீல்டு ஹிமாலயன் போன்ற பைக்குகளும் விஷாகாவிடம் உள்ளன. இதில் கேடிஎம் ட்யூக் 390 பைக் ஆனது கஸ்டமைஸ் செய்யப்பட்டதாக விஷாகாவிடம் உள்ளது.

rider girl takes delivery innova

டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து: டொயோட்டாவின் புத்தம் புதிய காரை வாங்குவது எல்லாம் நிச்சயமாக பலருக்கு வாழ்வில் மறக்க முடியாத விஷயமாக இருக்கும். ஏனெனில், இன்னோவா கார்களுக்கு நம் இந்திய அளவில் ஓர் கிரேஸ் உள்ளது. யூடியூப்பராக இருந்தாலும், இவ்வளவு பெரிய காரை வாங்க முடியும் என நிரூப்பித்து காட்டியுள்ளார் 'ரைடர் கேர்ள்' விஷாகா. அதுமட்டுமின்றி, பெண்களுக்கு ஓர் சிறந்த ரோல் மாடலாகவும் விளங்குகிறார்.

More from DriveSpark

Article Published On: Friday, August 4, 2023, 11:25 [IST]
English summary
Youtuber rider girl vishakha takes delivery of toyota innova hycross
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X