ஒன்றரை கோடி ரூபா காரை வாங்கிய இளைஞர்! எழுதி வெச்சுக்கோங்க... இனி எல்லாரும் இததான் முழு நேர தொழிலா பண்ண போறாங்க
இந்தியா உள்பட உலகின் பல்வேறு நாடுகளிலும் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று மெர்சிடிஸ்-பென்ஸ் ஜி63 ஏஎம்ஜி (Mercedes-Benz G63 AMG). சொகுசு எஸ்யூவி (Luxury SUV) ரகத்தை சேர்ந்த இந்த காரை, தொழில் அதிபர்கள், திரையுலக நட்சத்திரங்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் பலர் வைத்துள்ளனர்.
இந்த வரிசையில் பிரபல யூடியூபர் சஞ்சு ஷெகர்வாட்டும் (YouTuber Sanju Sehrawat) மெர்சிடிஸ்-பென்ஸ் ஜி63 ஏஎம்ஜி காரை வாங்கியுள்ளார். சஞ்சு ஷெகர்வாட்டின் மெர்சிடிஸ்-பென்ஸ் ஜி63 ஏஎம்ஜி காரை பற்றி தெரிந்து கொள்வதற்கு முன்பாக முதலில், அவரை பற்றி நாம் தெரிந்து கொள்வோம்.

இவரை யூடியூப் தளத்தில் பல லட்சக்கணக்கானோர் பின் தொடர்ந்து வருகின்றனர். இதன் காரணமாகவே மெர்சிடிஸ்-பென்ஸ் ஜி63 ஏஎம்ஜி போன்ற விலை உயர்ந்த காரை எல்லாம், அவரால் வாங்க முடிந்துள்ளது. இந்த சூழலில், சஞ்சு ஷெகர்வாட்டின் மெர்சிடிஸ்-பென்ஸ் ஜி63 ஏஎம்ஜி காரை பற்றிய வைரல் வீடியோ (Viral Video) ஒன்று தற்போது யூடியூப் (YouTube) தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது.
இந்த வீடியோவில், சஞ்சு ஷெகர்வாட்டே தனது மெர்சிடிஸ்-பென்ஸ் ஜி63 ஏஎம்ஜி காரை பற்றிய தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளார். இதன்படி கடந்த 2023ம் ஆண்டு மார்ச் மாதம் இந்த கார் வாங்கப்பட்டுள்ளது. இது 2017 மாடல் ஆகும். 1.50 கோடி ரூபாய் கொடுத்து இந்த காரை சஞ்சு ஷெகர்வாட் வாங்கியுள்ளார்.

விலை உயர்ந்த காராக இருக்கும் அதே நேரத்தில் இந்த கார் எரிபொருளை தண்ணீர் போல் குடிப்பதாகவும் சஞ்சு ஷெகர்வாட் கூறியுள்ளார். இந்த கார் ஒரு லிட்டருக்கு 2-3 கிலோ மீட்டர் மைலேஜ் மட்டுமே வழங்குகிறது என சஞ்சு ஷெகர்வாட் கூறியுள்ளார். அத்துடன் பிரீமியம் எரிபொருளைதான் நிரப்புகிறராம்.
இதன் காரணமாக ஒரு மாதத்திற்காக எரிபொருள் செலவு மட்டும் 1-1.50 லட்ச ரூபாய் வருகிறதாம்! இதுதவிர ஒவ்வொரு முறை சர்வீஸ் செய்யும்போதும் 1.75 லட்ச ரூபாய் செலவு ஆகிறதாம். அதே நேரத்தில் பாகங்கள் ஏதாவது பழுதாகி விட்டால், அதை சரி செய்வதற்கான தொகையும் மிகவும் அதிகம் என சஞ்சு ஷெகர்வாட் இந்த வீடியோவில் குறிப்பிட்டுள்ளார்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: மெர்சிடிஸ்-பென்ஸ் ஜி63 ஏஎம்ஜி சொகுசு எஸ்யூவி காரை வாங்குவது எவ்வளவு கடினமோ, அதே அளவிற்கு அதை பராமரிப்பதும் கடினம் என்பது சஞ்சு ஷெகர்வாட்டின் இந்த பேட்டியின் மூலம் தெரியவந்துள்ளது. எனவே கோடீஸ்வரர்களால் மட்டுமே இந்த காரை வாங்கி பராமரிக்க முடியும்.
ஆனால் இங்கே ஒரு மற்றொரு விஷயத்தையும் நாம் கவனிக்க வேண்டும். சமீப காலமாக யூடியூபர்கள் பலர் புதிய உயரங்களை தொட்டு வருகின்றனர். எனவே வாழ்க்கையில் சாதிக்க வேண்டும் என துடிக்கும் இளைஞர்களுக்கு யூடியூப் ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது. சஞ்சு ஷெகர்வாட் போன்றவர்களின் வெற்றி இன்னும் பலரை யூடியூப் நோக்கி இழுக்கும் என்பதில் துளியும் சந்தேகமில்லை.


Click it and Unblock the Notifications








