யூடியூபில் வீடியோ போட்டே ரூ3கோடிக்கு கார் வாங்கிய 24 வயது இளைஞர்! இது இவருக்கு முதல் கார் கிடையாது!

யூடியூபில் வீடியோ போட்டு சம்பாதித்து 24 வயது இளைஞர் ஒருவர் சுமார் 3 கோடி ரூபாய்க்கு மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் எலvக்ட்ரிக் கார் ஒன்றை வாங்கி உள்ளார். இவரிடம் இந்த கார் மட்டுமல்ல காஸ்ட்லியான பல்வேறு கார்கள் இருக்கிறது 3டொயோட்டா நிறுவனத்தின் ஃபார்ச்சூனர் லெஜண்டர், போர்ஷே பாக்ஸ்டர் மற்றும் மஹிந்திரா தார் உள்ளிட்ட கார்களை இவர் சொந்தமாக வைத்துள்ளார். இந்த அளவுக்கு பிரபலமான இளைஞர் யார்? இவர் எப்படி இவ்வளவு சம்பாதித்தார்? இவர் வைத்திருக்கும் கார்களைப் பற்றிய விரிவான விபரங்களை இங்கே காணலாம் வாருங்கள்.

24 வயது இளைஞரான சவ்ரவ் ஜோஷி என்பவர் பிரபல யு டியூபராக இருந்து வருகிறார். இவர் youtube, இன்ஸ்டாகிராம் போன்ற சமூகவலை பக்கங்களில் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார் .இதன் மூலம் அவர் ஏகப்பட்ட பணம் சம்பாதித்து வருகிறார். இப்படியாக இவர் வாழ்வில் நடக்கும் பல்வேறு விஷயங்களை தனது youtube பக்கத்தில் பதிவேற்றி வருகிறார். இப்படியாக இவர் youtube மூலம் சம்பாதித்த பணத்தில் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் ஜி 580 இக்யூ என்ற எலெக்ட்ரிக் கார் ஒன்றை சொந்தமாக வாங்கியுள்ளார். இதை அவர் வீடியோவாக எடுத்து பதிவு செய்துள்ளார்.

youtuber sourav joshi

இந்த வீடியோ அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது இந்த வீடியோவில் அவர் நேரடியாக மெர்சிடிஸ் பென்ஸ் டீலர்ஷிப்க்கு செல்கிறார். அங்கு அவர் டொயோட்டா ஃபார்ச்சூனர் லெஜண்டர் காரில் பயணம் செய்கிறார். அவரது தம்மபியுடன் இந்த ஷோரூமுக்கு செல்கிறார். அங்கு இந்த காரை வாங்குவதற்கான நடைமுறைகளை பின்பற்றுகிறார். அவரை வரவேற்ற ஷோரூம் ஊழியர்கள் அவருக்கு தேவையான உதவிகளை செய்து காரை வாங்குவதற்கான அனைத்து பேப்பர் அதிலும் கையெழுத்து பெற்றார்கள்.

பின்னர் மெர்சிடிஸ் பென்ஸ் ஜிவாகன் 580 என்ற எலெக்ட்ரிக் காரை வாங்கினார். பின்னர் அதில் ஏறி அவர் பயணம் செய்தார். இந்த வீடியோவில் இந்த காட்சிகள் எல்லாம் பதிவு செய்யப்பட்டுள்ளன. மெர்சிடிஸ் நிறுவனத்தின் ஜி588 என்ற கார் ஜி வாகன் சிரீஸில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது. இந்த கார் ரூபாய் 3 கோடி என்ற விலையில் இந்தியாவில் விற்பனையாகி வருகிறது. வெளியில் இருந்து பார்க்கும்போது சாதாரண ஜீவாகன் கார் போலவே இந்த கார் காட்சி அளிக்கும். இது ஏஎம்ஜி ஸ்டைலில் முன்பக்க கிரில் மற்றும் பக்கவாட்டில் எக்ஸாஸ்ட் உள்ளிட்ட அம்சங்களை கொண்டுள்ளது. இந்த காரின் உட்பகுதியும் சாதாரண ஜீவாகன் கார் போலவே வடிவமைக்கப்பட்டுள்ளது.

youtuber sourav joshi

இந்த காரில் மொத்தம் 4 எலக்ட்ரிக் மோட்டார்கள் பொருத்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு வீலுக்கும் ஒரு எலெக்ட்ரிக் மோட்டார் என்ற வகையில் கொடுக்கப்பட்டுள்ளது. இது மொத்தம் 587 பிஎஸ் பவரையும்1,164 என்எம் டார்க் திறனையும் கொண்டதாக இருக்கிறது. இந்த காரில் 116 கிலோ வாட் ஹவர் பேட்டரி பேக்கப் பொருத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்த கார் ஒரு முறை சார்ஜ் செய்தால் 473 கிலோ மீட்டர் தூரம் பயணிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய வெறும் 32 நிமிடங்கள் மட்டுமே தேவைப்படுகிறது.

இந்த காரின் பெர்பார்மென்ஸை பொறுத்தவரை 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை வெறும்5 நொடியில் பிக்கப் செய்து விடுகிறது. அதிகபட்சமாக 150 கிலோமீட்டர் வேகத்தில் பயணம் செய்யும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த காரில் உள்ள தனித்துவமான அம்சம் ஜி டர்ன் என்ற அம்சம் தான். இந்த அம்சத்தின் படி இந்த காரை ராணுவ டேங்க் போல சுமார் 180 டிகிரி கோணத்தில் உடனடியாக திருப்பிக் கொள்ள முடியும். இருந்த இடத்திலிருந்து அப்படியே சுற்றிக் கொள்ளும் வகையில் இந்த கார் உருவாக்கப்பட்டுள்ளது.

youtuber sourav joshi

இந்த காரை வாங்கிய முதல் பிரபலம் சௌரவ் ஜோஷி மட்டுமல்ல இதற்கு முன்னர் எல்விசி யாதவ் என்ற பிரபல யூடியூபரும் இந்த காரை சொந்தமாக வாங்கியுள்ளார். தற்போது இந்த காரை வாங்கியுள்ள சவ்ரவ் ஜோஷி அதிக விலை கொண்ட காரை வாங்குவது இது ஒன்றும் புதிதல்ல இதற்கு முன்னர் இவர் போர்ஷே பாக்ஸடர் ஸ்பைடர் என்ற காரை சொந்தமாக வைத்துள்ளார் .இந்த கார் 1.2 கோடி என்ற விலையில் இந்தியாவில் விற்பனையாகி வருகிறது. இந்த காரில் 4.0 லிட்டர் பிளாக் 6 சிலிண்டர் இன்ஜின் கொண்டதாக இருக்கிறது. இது 114 பிஎச்பி பவரையும் 420 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்துகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: பிரபல யூட்யூபரான சவ்ரவ் ஜோசி காஸ்ட்லியான கால்களை வாங்குவதில் பிரபலமானவர். இவர் மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்சி லக்சரி எஸ்யூவி, டொயோட்டா ஃபார்ச்சூனர் லெஜெண்டர், மஹிந்திரா கார் போன்ற பல்வேறு விதமான கார்களை வைத்துள்ளார். இவர் இந்த கார்களை வைத்து பல்வேறு வீடியோக்களையும் வெளியிட்டுள்ளார் .மேலும் இவர் டொயோட்டா நிறுவனத்தின் இன்னோவா கிரைஸ்டா காரை பயன்படுத்துவது பல்வேறு வீடியோக்களில் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

More from DriveSpark

Article Published On: Tuesday, February 25, 2025, 12:12 [IST]
English summary
Youtuber sourav joshi buys rs 3 crore electric mercedes g wagen
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X