மனுஷன் பெத்தவங்களை சந்தோஷத்துல திக்குமுக்காட வச்சுட்டாரு.. இந்த நபரை உங்களால அடையாளம் காண முடியுதா!!

இன்றைய கால இளைஞர்கள் பலர் தங்களுடைய சந்தோஷம், தங்களுடைய வாழ்க்கை என மிகவும் சுயநலத்துடன் வாழ்ந்துக் கொண்டிருக்கின்றனர். தங்களின் பெற்றோர்களைகூட சிலர் கண்டுக் கொள்வதில்லை. அதேவேளையில், மற்றவர்கள்மீது அக்கறைக் கொண்டவர்களும் இந்த உலகத்தில் இருக்கதான் செய்கின்றார். அந்தமாதிரியான ஓர் இளைஞரே தன்னுடைய பெற்றோர்களுக்கு விலை உயர்ந்த காரை பரிசாக வழங்கி பெருமிதப்படுத்தி இருக்கின்றார். காரை பரிசளித்தவர் என யுட்யூபர் என்பது குறிப்பிடத்தகுந்தது. நீண்ட காலமாக அவருடைய அப்பா ஓர் பைக்கில் வலம் வந்திருந்த நிலையிலேயே அவருக்கு இந்த விலை உயர்ந்த காரை பரிசாக வாங்கிக் கொடுத்திருக்கின்றார்.

2018 ஆம் ஆண்டில் வாங்கப்பட்ட பஜாஜ் அவென்ஜர் பைக்கையே அவர் பயன்படுத்தி வந்திருக்கின்றார். அதேவேளையில், அவருடத்தில் 2010 இல் வாங்கப்பட்ட ஹூண்டாய் சேன்ட்ரோ காரும் பயன்பாட்டில் உள்ளது. இந்த நிலையிலேயே மிகவும் காஸ்ட்லியான கார் பரிசாக வழங்கப்பட்டு உள்ளது. யுட்யூபர் பரிசாக வழங்கி இருப்பது டொயோட்டா ஃபார்ச்சூனர் லெஜண்டர் ஆகும்.

Toyota fortuner gift by youtuber

இது ஓர் எஸ்யூவி ரக கார் மாடல் ஆகும். வழக்கமான டொயோட்டா ஃபார்ச்சூனர் கார் மாடலைக் காட்டிலும் அதிக சிறப்பம்சங்கள் மற்றும் கவர்ச்சியான தோற்றத்தை இந்த கார் மாடல் கொண்டிருக்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது. இத்தகைய காரையே யுட்யூபர் திட்டமிட்டு ஆச்சரியமளிக்கும் வகையில் பரிசாக வழங்கி இருக்கின்றார்.

காரை வாங்கியது எந்தவொரு அறிவிப்பும் அவருக்கு வழங்கப்படாமல், திடீரென வீட்டின் வாசல் முன் கொண்டு வந்து நிறுத்தி, இதோ உங்களுக்கான பரிசு என அவர் தந்திருக்கின்றார். பெற்றோர்கள் எப்படி நடந்துகொள்வார்கள் என்பதை தான் தெரிந்துக் கொள்ள வேண்டும் என்கிற நோக்கிலேயே அவர் இவ்வாறு ஆச்சரியப்படுத்தி இருக்கின்றார்.

அந்த தருணத்தில் யுட்யூபரின் அப்பா ஆனந்த கண்ணீர்விட்டது பலரை நெகிழ்ச்சியடையச் செய்யும் வகையில் அமைந்துவிட்டது. பின்னர், அந்த குடும்பத்தினர் காருக்கு பூஜை செய்து தங்கள் குடுபத்தில் ஒருவராக அந்த காரை இணைத்துக் கொண்டனர். டொயோட்டா ஃபார்ச்சூனர் லெஜண்டர் ஓர் ஏழு இருக்கைகள் கொண்ட எஸ்யூவி ரக காராகும்.

இதன் ஆரம்ப விலையே ரூ. 43.66 லட்சம் ஆகும். இதன் அதிகபட்ச விலையே ரூ. 47.64 லட்சம் என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த எஸ்யூவி காரில் 2.8 லிட்டர் டீசல் எஞ்சின் மட்டுமே வழங்கப்படுகின்றது. இந்த மோட்டார் அதிகபட்சமாக 204 பிஎஸ் ஆற்றலையும், 500 என்எம் டார்க்கையும் உற்பத்தி செய்யும் திறன் கொண்டது.

6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனே இந்த டீசல் எஞ்சினுடன் இணைக்கப்பட்டு உள்ளது. இந்த கியர்பாக்ஸ் ஆப்ஷன் மட்டுமே ஃபார்சூனர் லெஜெண்டர் எஸ்யூவில் வழங்கப்படுகின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது. அதேவேளையில், 4×2 மற்றும் 4×4 ஆகிய பவர்டிரெய்ன் தேர்வுகளில் இந்த கார் மாடலை வாங்கிக் கொள்ளலாம்.

இதேபோல், டொயோட்டா ஃபார்ச்சூனர் லெஜண்டர் ஆடம்பர அம்சங்களையம் மிக அதிகளவில் கொண்டிருக்கின்றது. அந்தவகையில், இதன் இருக்கை பிரீமியம் லெதரால் அலங்கரிக்கப்பட்டு இருக்கின்றது. மேலும், விசாலமான கேபின், ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோவை ஆதரிக்கும் வசதிக் கொண்ட 9 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் ஆகியவை ஃபார்ச்சூனர் லெஜண்டரில் வழங்கப்பட்டு இருக்கின்றன.

இதேபோல், ஃபார்ச்சூனர் லெஜெண்டரில் பாதுகாப்புக்கும் முன்னுரிமை அளிக்கப்படுகின்றது. ஏர் பேக்குகள், இபிடி (EBD) உடன் கூடிய ஏபிஎஸ் (ABS), ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட் மற்றும் டவுன்ஹில் அசிஸ்ட் கன்ட்ரோல் போன்ற பலதரப்பட்ட அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதுமாதிரியான பல்வேறு அம்சங்களை தாங்கிய காரையே யுட்யூபர் அவரது பெற்றோர்களுக்கு பரிசாக வழங்கி இருக்கின்றார்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: பிள்ளைகள் காணும் சிறு சிறு வெற்றியைகூட தங்களின் வெற்றியாக கருதி மகிழ்ச்சியடைவார்களே பெற்றோர்கள். இந்த மாதிரியான பெற்றோர்களை கௌரவிக்க வேண்டும் எனப்து இன்றைய கால இளைஞர்கள் பலரின் லட்சியமாக உள்ளது. அந்தமாதிரியான ஓர் நபராக தன்னுடைய பெற்றோர்களை கௌரவித்திருக்கின்றார் இந்த யுட்யூபர்.

More from DriveSpark

Article Published On: Monday, June 17, 2024, 11:45 [IST]
English summary
Youtuber surprises parents with toyota fortuner legender
மேலும்... #off beat #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+