சாம்பார், ரசம்னு வித விதமா சமைச்சே தம்பி சூப்பரான காரை வாங்கிட்டாரு!

யூடியூப்களில் வீடியோ போட்டு பணம் சம்பாதிக்கும் பலர் தற்போது சமூக வலைதளங்களில் இரண்டாக மாறி வருகிறார்கள். இப்படியாக இளைஞர் ஒருவர் யூடியூப் வீடியோ போட்டு அதன் மூலம் சம்பாதித்த பணத்தில் சொந்தமாக மாருதி நிறுவனத்தின் வேகன்ஆர் காரை வாங்கியுள்ளார். இது குறித்து அவர் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். இந்த பதிவு வைரலாக பரவி வருகிறது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

வீடியோ வெளியிட்டு பிரபலமாகி மக்கள் மனதை கவர்ந்தவர் விக்னேஷ் ராமன் இவர் தான் வீட்டில் செய்யும் சமையல் வேலைகளை எல்லாம் வீடியோவாக எடுத்து வெளியிடுவார். தன் வீட்டில் உள்ள தினசரி சாப்பாடுகளை வீடியோ எடுத்து வெளியிட்டு மக்கள் மத்தியில் பிரபலமானார். இவர் மக்கள் மத்தியில் பிரபலமாக மற்றொரு முக்கியமான காரணம் இவரது உடல் அமைப்பு தான்.

youtuber vignesh raman wagonr car

இவர் அதிக குண்டாக இருப்பதால் பலர் இவரை சமூக வலைதளங்களில் கிண்டல் செய்தார்கள். முக்கியமாக இவர் சாப்பாடு குறித்த வீடியோவை வெளியிட்டு வைரலான நிலையில் இவர் இப்படியாக சாப்பிட்டு சாப்பிட்டு குண்டாகி விட்டால் என பலர் கிண்டல் செய்தார்கள். ஆனால் இதையெல்லாம் பொருட்படுத்தாமல் தொடர்ந்து தனக்கு விருப்பமான வீடியோக்களை யூட்யூபில் வெளியிட்டுக் கொண்டே வந்தார்.

இவருக்கு எதிராக வரும் கருத்துக்களை எதிர்த்து சமூக வலைதளங்களில் பலர் பேசினார்கள். இப்படியாக ஒருத்தரை உடலை வைத்து கிண்டல் செய்வது என்பது மோசமான செயல் என அவர்களை விமர்சித்தும் அதே நேரம் சமையல் வேலைகளை எல்லாம் சிறப்பாக செய்து வரும் விக்னேஷ்ராமனை பாராட்டியும் பலரும் கருத்துட்டு வந்தார்கள். இதனால் மக்கள் மத்தியில் விக்னேஷ் ராமன் மிகப்பெரிய இடம் பிடித்தார். அவர் தொடர்ந்து பல்வேறு வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார்.

பொதுவாக சமூக வலைதளங்களில் வீடியோக்கள் வெளியிடுவது மூலம் பணம் சம்பாதிக்க முடியும். இதன் மூலம் ஏகப்பட்ட பேர் பணம் சம்பாதித்து வருகிறார்கள். இதையே முழு நேர வருமானமாக ஈட்டும் பலர் இருக்கிறார்கள். இந்நிலையில் இதன் மூலம் வந்த பணத்தில் விக்னேஷ் ராமன் சொந்தமாக கார் வாங்கியுள்ளார். இது குறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காருடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

இந்த புகைப்படத்தை பகிரும் போது நீண்ட நாள் கனவான தனது வேகன்ஆர் வாங்க வேண்டும் என்ற கனவு தற்போது நிறைவேறி உள்ளதாக பகிர்ந்து இதற்காக தனது வீடியோக்களை தொடர்ந்து பார்த்து சப்போர்ட் செய்யும் மக்களுக்கு நன்றியும் தெரிவித்துள்ளார். இந்த பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது இவரது வளர்ச்சியை பலர் பாராட்டி வருகிறார்கள்.

யூட்யூபர் விக்னேஷ் ராமன் வாங்கியது இந்தியாவிலேயே அதிகமாக விற்பனையாகும் காராகும். கடந்த நிதியாண்டில் அதிக எண்ணிக்கையிலான கார் விற்பனை பட்டியலில் இந்த கார் தான் நம்பர் ஒன் இடத்தில் இருக்கிறது. இந்தியாவில் பெரும்பாலான குடும்பங்கள் முதல் முறையாக கார் வாங்கும் போது இந்த காரை தான் அதிகம் தேர்வு செய்கிறார்கள்.

மாருதி நிறுவனத்தின் வேகன்ஆர் காரை பொறுத்தவரை இந்தியாவில் ரூபாய் 5.54 லட்சம் முதல் ரூபாய் 7.38 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது. இந்த காரின் இஞ்சினை பொருத்தவரை 998 சிசி மற்றும் 1197 சிசி ஆகிய இரண்டு விதமான இன்ஜின்கள் பொருத்தப்படுகின்றன. இது 55 .92 முதல் 88.5 பிஎச்பி பவரையும் 113 முதல் 89 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த கார் மொத்தம் 11 விதமான வேரியன்ட்களில் விற்பனையாகி வருகிறது. அதில் வேகன்ஆர் விஎக்ஸ்ஐ என்ற வேரியன்ட் தான் அதிக எண்ணிக்கையில் விற்பனையாகி வருகிறது. இந்த கார் ரூபாய் 6 லட்சம் என்ற விலையில் மார்க்கெட்டில் விற்பனையாகிறது. இந்த காரின் விற்பனையை அதிகரிக்க ஒவ்வொரு மாதமும் மாருதி நிறுவனம் இந்த காருக்கு பல்வேறு விதமான ஆபர்களை வழங்குவது குறிப்பிடத்தக்கது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இன்று யூடியூபர் வீடியோக்கள் மூலம் பணம் சம்பாதித்து தங்கள் வாழ்வாதாரத்தை பெருக்கிக் கொண்டு வருகிறார்கள். இப்படியாக யூடியூபில் விக்னேஷ் ராமனும் தனது வாழ்வாதாரத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றுள்ளார். இது பலரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தற்போது சமூக வலைதளங்களில் இவர் கார் வாங்கியதற்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.

More from DriveSpark

Article Published On: Wednesday, April 17, 2024, 13:28 [IST]
English summary
Youtuber vignesh raman wagonr car dream fulfilled
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+