அம்பானி வீட்டு கல்யாணத்தவே ஓரங்கட்டிட்டாரு! பல கோடி ரூபாய் காரை வாங்கியது அவரா! வாயை பிளந்த தொழிலதிபர்கள்!
இந்தியா உள்பட உலகின் பல்வேறு நாடுகளிலும் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று டொயோட்டா லேண்ட் க்ரூஸர் எல்சி 300 (Toyota Land Cruiser LC 300). இது எஸ்யூவி (SUV) ரகத்தை சேர்ந்த கார் ஆகும். அரசியல்வாதிகளான கே.என்.நேரு (K.N Nehru) மற்றும் ராஜ் தாக்கரே (Raj Thackeray) ஆகியோரிடம் இந்த கார் உள்ளது.
இதுதவிர நடிகரும், அரசியல்வாதியுமான பவன் கல்யாணிடமும் (Pawan Kalyan) இந்த கார் இருக்கிறது. இந்த வரிசையில் மற்றொரு பிரபலம் இந்த காரை தற்போது வாங்கியுள்ளார். ஆனால் அவர் நடிகரோ அல்லது அரசியல்வாதியோ கிடையாது. யூடியூபர் (YouTuber). ஆம், உண்மைதான். நாங்கள் இங்கே பேசி கொண்டுள்ள யூடியூபர் விகாஸ் தயால் (Vikas Dayal) ஆவார்.

இன்ஸ்டாகிராம் (Instagram) மற்றும் யூடியூப் (YouTube) ஆகிய சமூக வலை தளங்களில் இவரை பல லட்சக்கணக்கானோர் பின் தொடர்கின்றனர். சர்வதேச சந்தைகளில் விற்பனை செய்யப்படும் இந்த காரில், பெட்ரோல் (Petrol) மற்றும் டீசல் (Diesel) என 2 வகையான இன்ஜின் ஆப்ஷன்களும் வழங்கப்படுகின்றன.
ஆனால் இந்தியாவில் டீசல் இன்ஜின் ஆப்ஷன் மட்டுமே வழங்கப்படுகிறது. அது 3.3 லிட்டர் வி6 டர்போ டீசல் இன்ஜின் ஆகும். அதிகபட்சமாக 309 பிஎஸ் பவர் மற்றும் 700 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய வகையில் இந்த இன்ஜின் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் உடன் 10 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.

மறுபக்கம் இந்த காரின் பெட்ரோல் வெர்ஷன்களில், 3.5 லிட்டர் ட்வின் டர்போசார்ஜ்டு இன்ஜின் கொடுக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 415 பிஎஸ் பவர் மற்றும் 650 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய வகையில் இந்த இன்ஜின் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது. ஆனால் நாங்கள் ஏற்கனவே குறிப்பிட்டபடி இந்த காரின் பெட்ரோல் இன்ஜின் வெர்ஷன்கள், இந்தியாவில் விற்பனை செய்யப்படுவதில்லை.
12.3 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், லெதர் அப்ஹோல்ஸ்ட்ரி மற்றும் 14 ஸ்பீக்கர் ஜேபிஎல் ஆடியோ சிஸ்டம் என இந்த காரில் ஏராளமான அதிநவீன வசதிகள் வாரி வழங்கப்பட்டுள்ளன. எனவே வாடிக்கையாளர்கள் வழங்கும் பணத்திற்கு மதிப்பு வாய்ந்த தயாரிப்பாக இது கருதப்படுகிறது.
இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் இந்த காரின் ஆன்-ரோடு விலை (On-road Price) சுமார் 2.50 கோடி ரூபாய் வருகிறது. எனவேதான் தொழில் அதிபர்கள் மற்றும் அரசியல்வாதிகள் போன்றவர்களால் மட்டும் இந்த காரை வாங்க முடிகிறது. அப்படி இருக்கும்போது யூடியூபர் ஒருவர் இந்த காரை வாங்கியிருப்பது ஆச்சரியமான ஒரு விஷயம்தான்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: யூடியூபர் விகாஸ் தயால் ஒரு கார் காதலர் ஆவார். அவரிடம் ஏற்கனவே பிஎம்டபிள்யூ எம்340ஐ (BMW M340i), டொயோட்டா ஃபார்ச்சூனர் (Toyota Fortuner) மற்றும் மஹிந்திரா தார் (Mahindra Thar) என ஏராளமான கார்கள் உள்ளன. இந்த வரிசையில்தான் தற்போது டொயோட்டா லேண்ட் க்ரூஸர் எல்சி 300 அவரது கார் கலெக்ஸனில் (Car Collection) இணைந்துள்ளது.
இந்த சூழலில் டொயோட்டா லேண்ட் க்ரூஸர் எல்சி 300 காரை விகாஸ் தயால் டெலிவரி எடுக்கும் நிகழ்வு ஒரு திருவிழா போல் நடத்தப்பட்டுள்ளது. இதை விகாஸ் தயால் தனது கனவு கார் என குறிப்பிட்டுள்ளார். அந்த வைரல் வீடியோ (Viral Video) சமூக வலை தளங்களில் தற்போது வேகமாக பரவி வருகிறது.


Click it and Unblock the Notifications








