டயரில் 40 ஆணிகளுடன் ஃபார்ச்சூனர் காரை இயக்கி பார்த்த இளைஞர்!! கடைசியில் எல்லாருக்கும் செம்ம ‘பல்ப்’

பயணத்திற்கு எல்லாவற்றையும் தயார் செய்துக்கொண்டு கிளம்பும்போது காரின் டயர்கள் பஞ்சராகி இருந்தாலோ அல்லது போகும்போது பஞ்சராகினாலோ எவரொருவருக்கும் மனநிலை சமநிலையை இழந்துவிடும். முன்பெல்லாம் கார்கள் மற்றும் பைக்குகளில் ட்யூப் டயர்கள் வழங்கப்பட்டு வந்தன. ஆனால் தற்போது அவற்றில் பெரும்பாலானவற்றில் ட்யூப்லெஸ் டயர்கள் பொருத்தப்படுகின்றன.

டயரில் 40 ஆணிகளுடன் ஃபார்ச்சூனர் காரை இயக்கி பார்த்த இளைஞர்!! கடைசியில் எல்லாருக்கும் செம்ம ‘பல்ப்’

இத்தகைய டயர்கள் பஞ்சராகினாலும் அதனை எளிதாக சரி செய்துவிடலாம். மேலும், ட்யூப்லெஸ் டயர்களினால் மேலும் சில பயன்களும் உள்ளன. அதனை வெளிப்படுத்தும் வகையிலான வீடியோ ஒன்றினை பற்றி தான் இனி இந்த செய்தியில் பார்க்க போகிறோம். மிஸ்டர்.இந்தியன் ஹாக்கர் என்ற யூடியூப் சேனலில் வெளியிடப்பட்டுள்ள அந்த வீடியோவினை கீழே காணலாம்.

வீடியோவின் துவக்கத்தில் டொயோட்டா ஃபார்ச்சூனர் கார் ஒன்று வேகமாக வந்து சாலையின் ஓரத்தில் நிற்கிறது. அதனுள் இருந்து இளைஞர் ஒருவர் இறங்கி வருகிறார். இவர் தான் இந்த யுடியூப் சேனலிற்கான உரிமையாளர் போல் தெரிகிறது. காரில் இருந்து இறங்கியவுடன் இந்த வீடியோவில் என்ன செய்ய போகிறோம் என்பதை பேச துவங்கும் அந்த இளைஞர், முந்தைய வீடியோவில் என்ன செய்தோம் என்பதையும் பார்வையாளர்களுக்கு நினைவூட்டுகிறார்.

டயரில் 40 ஆணிகளுடன் ஃபார்ச்சூனர் காரை இயக்கி பார்த்த இளைஞர்!! கடைசியில் எல்லாருக்கும் செம்ம ‘பல்ப்’

முந்தைய வீடியோவில் பைக் ஒன்றின் டயரில் ஆணிகளை செலுத்தி பார்த்து சோதனை செய்துள்ளனர். இந்த வீடியோவில் டொயோட்டா ஃபார்ச்சூனர் கார் ஒன்றின் டயரில் ஆணிகளை புகுத்தி சோதித்துள்ளனர். ஒரு பொருளை உருவாக்குவதை காட்டிலும், அதனை அழிப்பதை தான் நம்மில் பெரும்பாலானோர் ஆர்வமாக பார்ப்போம். அவ்வாறுதான் இந்த ஃபார்ச்சூனர் காரின் முன்பக்க டயர் ஒன்றில் ஒவ்வொரு ஆணிகளாக இறக்க இறக்க, அடுத்து என்ன நடக்குமோ என்கிற பரபரப்பு நம்மை தொற்று கொள்கிறது.

டயரில் 40 ஆணிகளுடன் ஃபார்ச்சூனர் காரை இயக்கி பார்த்த இளைஞர்!! கடைசியில் எல்லாருக்கும் செம்ம ‘பல்ப்’

டயருக்கு போதுமான அளவு காற்று இருப்பதால் ஆணிகளை அடிக்க அடிக்க, டயரின் வடிவம் சற்று மாறுவதை காண முடிகிறது. 20 ஆணிகளை முதற்கட்டமாக உள்ளே நுழைந்தபின், காரை சற்று பின்னோக்கி நகர்த்தி மேலும் 20 ஆணிகளை அடித்துள்ளனர். 20 ஆணிகளை அடித்தவுடன் டயர் முற்றிலுமாக பஞ்சராகிவிடும் என நம்மை போல் இந்த வி-லாகரும் எண்ணியுள்ளார்.

டயரில் 40 ஆணிகளுடன் ஃபார்ச்சூனர் காரை இயக்கி பார்த்த இளைஞர்!! கடைசியில் எல்லாருக்கும் செம்ம ‘பல்ப்’

ஆனால் காற்று அதிகளவில் வெளிவராததால் மேலும் 21 ஆணிகளை அடித்துள்ளனர். 41 ஆணிகளும் அடித்தபின் காற்று எவ்வாறு வெளிவருகிறது என்பதை பார்வையாளர்களுக்கு காட்டும் விதமாக டயரின் மீது தண்ணீரை ஊற்றுக்கின்றனர். அப்போது ஆணி அடிக்கப்பட்ட இடங்களில் இருந்து காற்று குமிழ்கள் வெளிவருவதை பார்க்க முடிகிறது. இருப்பினும் அந்த டயர் தொடர்ந்து காரை இயக்க ஏதுவான நிலையிலேயே உள்ளது.

டயரில் 40 ஆணிகளுடன் ஃபார்ச்சூனர் காரை இயக்கி பார்த்த இளைஞர்!! கடைசியில் எல்லாருக்கும் செம்ம ‘பல்ப்’

இதனால் காரை இயக்க தயாராகுகிறார்கள். கார் ஸ்டார்ட்டான உடனேயே அந்த குறிப்பிட்ட சக்கரத்தில் இருந்து காற்று வெளிவரும் சத்தம் கேட்க ஆரம்பிக்கிறது. டயர்கள் ஆணிகளுடன் சாலையில் அழுத்தப்படுவதை பார்க்கையில் சற்று பதற்றமாக தான் உள்ளது. காரின் சக்கரம் ஒரு சுழற்சியை நிறைவு செய்தபின் பார்க்கையில், சில ஆணிகள் மேலும் உள்ளே இறங்கியும், சில ஆணிகள் வளைந்திருப்பதையும் காண முடிகிறது.

டயரில் 40 ஆணிகளுடன் ஃபார்ச்சூனர் காரை இயக்கி பார்த்த இளைஞர்!! கடைசியில் எல்லாருக்கும் செம்ம ‘பல்ப்’

அதற்கடுத்தடுத்த சுற்றுகளில் கிட்டத்தட்ட எல்லா ஆணிகளும் முழுமையாக உள்ளே செல்கின்றன. ஆணிகள் ஒவ்வொரு முறை சாலையில் படும்போதும் சத்தம் அதிகமாகிறது. இந்த பஞ்சர் சோதனையை இந்த வி-லாகர் மிக மெதுவாகவே செய்து பார்க்கிறார். ஆனால் அதிவேகத்தில் செல்லும் கார் ஒன்றின் டயர் பஞ்சராகினால் அது விபத்தில் சென்று முடிய அதிக வாய்ப்புள்ளது.

டயரில் 40 ஆணிகளுடன் ஃபார்ச்சூனர் காரை இயக்கி பார்த்த இளைஞர்!! கடைசியில் எல்லாருக்கும் செம்ம ‘பல்ப்’

ஏனெனில் அதிவேகத்தில் ஒரு பக்கம் நிலைக்குலையும் போது காரின் கண்ட்ரோல் சில வினாடிகள் இல்லாமல் போகிவிடும். மீண்டும் கண்ட்ரோலிற்கு கொண்டுவந்து காரை சாமர்த்தியமாக நிறுத்துபவர் ஜெய்க்கிறார். கடைசிவரை கண்ட்ரோலை கொண்டுவராதவர் விபத்தில் சென்று முடிக்கிறார். ஆனால் உண்மையில் இதில் ஓட்டுனர் தவறு எதுவும் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

டயரில் 40 ஆணிகளுடன் ஃபார்ச்சூனர் காரை இயக்கி பார்த்த இளைஞர்!! கடைசியில் எல்லாருக்கும் செம்ம ‘பல்ப்’

41 ஆணிகளை கொண்ட டயருடன் இந்த வி-லாகர் சில மீட்டர்கள் தூரத்திற்கு இந்த ஃபார்ச்சூனர் காரில் சென்று வருகிறார். ட்யூப்லெஸ் டயர்களினால் தான் 40 ஆணிகள் குத்தப்பட்ட போதிலும் சிறிது தொலைவிற்கு சென்று வர முடிகிறது. முன்பு பயன்பாட்டில் இருந்து ட்யூப் டயர்கள் என்றால் ஒரு ஆணி குத்தப்பட்ட சில வினாடிகளிலேயே பஞ்சராகி இருக்கும். இத்தகைய சோதனைகளை வீடியோக்களில் பார்ப்பதுடன் நிறுத்தி கொள்வது நல்லது. இல்லையென்றால், உங்களது பணம் தான் வீணாக செலவாகும்.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Youtuber who drove the toyata fortuner car with 40 nails in the tire
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X