காரில் இருந்து திடீரென பொழிந்த பண மழை... ஒரே இரவில் பிரபலமான இளைஞர்கள்!! தொக்காக தூக்கிய போலீஸார்
டெல்லிக்கு அருகே சாலையில் இயங்கி கொண்டிருந்த மாருதி பலேனோ கார் ஒன்றில் இருந்து பண மழை பொழிந்துள்ளது. இணையத்தில் வைரலாகி வரும் இந்த சம்பவத்தை பற்றிய முழுமையான விபரங்களை இனி தொடர்ந்து பார்க்கலாம்.
சினிமா நமது வாழ்வில் ஓர் அங்கமாக விளங்குகிறது என்றால், அதில் சந்தேகமே இல்லை. ஒரு சிலரோ சினிமா திரைப்படங்களில் நடக்கும் சம்பவங்களை சீரியஸாக எடுத்து கொண்டு, அதனை நிஜ வாழ்விலும் செய்ய முயல்வர். அவ்வாறான சம்பவங்களுள் ஒன்றை பற்றி தான் இந்த செய்தியில் பார்க்கவுள்ளோம். இந்தியாவில் சமீபத்தில் வெளியான ஃபார்ஸி வெப் சீரிஸை பற்றி பலர் கேள்விப்பட்டு இருப்பீர்கள்.

பிரபல பாலிவுட் ஷாகித் கபூர் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க, தமிழ் நடிகர் விஜய் சேதுபடி, நடிகைகள் ராசி கண்ணா மற்றும் ரெஜினா கசண்ட்ரா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான இந்த வெப் சீரிஸில், கார் ஒன்றில் இருந்து பணம் நோட்டுகளை சாலையில் தூக்கி வீசுவது போன்றதான ஒரு காட்சி இடம்பெற்றிருக்கும். இந்த காட்சியை நிஜ உலகில் செய்ய முற்பட்ட இரு இளைஞர்களை ஹரியானா போலீஸார் கைது செய்துள்ளனர்.
பரபரப்பான சாலை ஒன்றில் மாருதி சுஸுகி பலேனோ காரில் சென்று கொண்டிருந்த இந்த இளைஞர்கள் திடீரென காரின் பின்பக்க பூட் ஸ்பேஸ் கதவை திறந்து பணம் நோட்டுகளை அள்ளி சாலையில் வீச ஆரம்பித்துவிட்டனர். மேலும், இந்த சம்பவத்தை பின்னால் வேறொரு வாகனத்தில் இருந்து காட்சிப்படுத்தி இணையத்திலும் வெளியிட்டுள்ளனர். அதிக பார்வையாளர்களை பெற்றுவரும் இந்த வீடியோ ஹரியானா மாநில போலீஸாரின் பார்வையிலும் பட்டதை தொடர்ந்து இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
#WATCH | Haryana: A video went viral where a man was throwing currency notes from his running car in Gurugram. Police file a case in the matter.
— ANI (@ANI) March 14, 2023
(Police have verified the viral video) pic.twitter.com/AXgg2Gf0uy
இந்த சம்பவத்தில் ஈடுப்பட்ட இளைஞர்களின் பெயர்கள் ஜோராவர் சிங் கல்சி மற்றும் அவரது நண்பர் லக்கி கம்போஜ் ஆகும். இதில் கல்சி அதிக பின்தொடர்பவர்களுடன் யுடியூப்பில் பிரபலமானவராக விளங்குகிறார். அவரது யுடியூப் பக்கத்தில் பதிவிடவே இவ்வாறான செயலில் இவர்கள் ஈடுப்பட்டுள்ளனர். இவர்கள் சாலையில் வீசியது நிஜ பணம் கிடையாது. போலியான ரூபாய் நோட்டுகளாகும்.
இருப்பினும் சாலையில் ரூபாய் நோட்டுகள் இருப்பதை பார்த்த மற்ற வாகன ஓட்டிகளின் கவனம் சிதறியது. அதுமட்டுமின்றி, சாலையில் காரின் பூட் ஸ்பேஸை திறந்து வைத்து பயணிப்பதும் இந்திய மோட்டார் வாகன சட்டத்தின்படி குற்றமாகும். இதை எல்லாம் கவனத்தில் எடுத்து கொண்ட ஹரியானா போலீஸார் இந்த இளைஞர்கள் மீது, சாலையில் ஆக்ரோஷமாக வாகனம் ஓட்டியது மற்றும் மற்ற வாகன ஓட்டிகளுக்கு தொந்தரவாக இருந்ததற்காக வழக்குகளை பதிவு செய்துள்ளனர்.

குருக்ராம் நகரத்தில் டி.எல்.எஃப் கோல்ஃப் கோர்ஸ் சாலையில் சுரங்கம் ஒன்றிற்கு உள்ளே வெள்ளை நிற பலேனோ காரில் நடந்துள்ள இந்த சம்பவத்தின்போது, வீடியோவை பதிவிட்ட கல்சி தான் காரை இயக்கியுள்ளார். பூட் ஸ்பேஸ் கதவை திறந்தப்படி காரின் பின்பக்கத்தில் அமர்ந்து கொண்டு காம்போஜ் போலியான பண நோட்டுகளை சாலையில் வீசுயுள்ளார். இளைஞர்கள் இருவரையும் பிடித்து விசாரித்த போலீஸார் வீசப்பட்ட ரூபாய் நோட்டுகள் போலியானவை என்பதை முதலாவதாக அறிந்து கொள்கின்றனர்.
அதன்பின் யுடியூப்பில் பதிவு செய்யப்பட்ட இதுகுறித்த வீடியோவை சம்மந்தப்பட்ட இளைஞர் மூலமாகவே நீக்கியுள்ளனர். இருப்பினும், டெலிட் செய்வதற்கு முன்பாகவே இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி விட்டது. இந்த இளைஞர்கள் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறான சம்பவங்களை மன்னித்துவிட்டால், மற்றவர்களும் இத்தகைய செயல்களில் ஈடுப்பட கூடும். ஆதலால் தான் இந்த இளைஞர்கள் மீது கருணை இன்றி எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதாக விசாரித்த கூடுதல் போலீஸ் கமிஷ்னர் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications








