உலக கோப்பைக்கு வித்திட்ட யுவராஜ் சிங் கார் கலெக்ஷன்- சிறப்பு பார்வை

தனது வீரமும், விவேகமும் நிறைந்த ஆட்டத்தால் ரசிகர்கள் மனதில் சிம்மாசனம் போட்ட அமர்ந்துள்ள யுவராஜ் சிங்குக்கு கார்கள் மீது தீராத காதல் உண்டு. சிகிச்சைக்காக யுவராஜ் அமெரிக்கா சென்றதால், களையிழந்து கிடந்த அவரது வீட்டில் கார்களும் ஏதோ அனாதை உணர்வுடன் அவரை எதிர்பார்த்து காத்திருந்தன.
அவர் இன்று நாடு திரும்பியுள்ளதால் அவரது வீட்டின் கார் ஷெட்டும் பழைய படி களை கட்டியுள்ளது. கடந்த 2000ம் ஆண்டு இந்திய அணியில் சேர்ந்த நாள் முதல் அவர் இதுவரை சேர்த்து வைத்திருக்கும் கார்களின் பட்டியலை பார்த்தாலே கார்கள் மீதான அவருக்கு இருக்கும் தீராத காதல் புரியும்.
இந்திய அணியில் சேர்ந்த பின் யுவிக்கு அவரது தந்தை ஆசையாய் ஆசையாய் வாங்கி தந்த முதல் கார் ஹோண்டா சிட்டிதான். இன்று வரை அந்த காரை விற்காமல் பொக்கிஷம் போல் பாதுகாத்து வருகிறார். இதற்கடுத்து பல சொகுசு கார்கள் வந்தாலும் ஹோண்டா சிட்டி மீது அவருக்கு தனி காதல் உண்டு.
கடந்த 2007ம் ஆண்டு ஜசிசி சூப்பர்8 ட்வென்ட்டி 20 கிரிக்கெட் போட்டியில் 6 பந்துகளில் 6 சிக்ஸர்களை விளாசிய யுவராஜ் சிங்குக்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் போர்ஷே 911 ஆடம்பர எஸ்யூவி கார் பரிசாக வழங்கப்பட்டது.
இதுதவிர, யுவராஜ் சிங்கிடம் மெர்டிசிடிஸ் பென்ஸ், பிஎம்டபிள்யூ எம்5 மற்றும் எம்3 ஆகிய சொகுசு கார்களும் உள்ளன. இதில், பிஎம்டபிள்யூ எம்5 ரூ.1 கோடி விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இதுதவிர, கடந்த ஆண்டு உலக கோப்பையை இந்திய அணி வெல்வதற்கு வித்திட்ட யுவராஜ் சிங்குக்கு ஆடி நிறுவனம் தனது சொகுசு காரை பரிசாக வழங்கியது நினைவிருக்கலாம்.


Click it and Unblock the Notifications








