யுவராஜ் சிங்கை வைத்து கார் ஓட்டியவர் இவ்வளவு பெரிய ஆளா? கொஞ்ச நேரத்தில் பயத்தை காட்டிவிட்டார்!!
யுவராஜ் சிங் (Yuvraj Singh), இந்தியாவின் முன்னாள் அதிரடி கிரிக்கெட் வீரர். இவர், உலகின் இரு முறை எஃப்1 சாம்பியன்ஷிப் டிரைவரை அமெரிக்காவில் சந்தித்து, அவருடன் மெக்லாரன் காரில் ஜாலியாக பயணம் செய்துள்ளார். இதுதொடர்பான வீடியோ தான் தற்சமயம் ஹாட் டிரெண்டிங்காக உள்ளது.
இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணியின் முன்னள் அதிரடி இடதுக்கை ஆட்டக்காரர் யுவராஜ் சிங்கிற்கு அறிமுகமே தேவையில்லை. ஏனெனில், அந்த அளவுக்கு நாடு முழுவதும் பரீட்சையமான கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் ஆவார். கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுவிட்ட யுவராஜ் சிங் அமெரிக்காவில் நடைபெற்ற மியாமி கிராண்ட் பிரிக்ஸ் போட்டியை நேரில் காண சென்றுள்ளார்.

அப்போது, அங்கிருந்த 2 முறை உலகின் எஃப்1 சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றவரான பின்லாந்தை சேர்ந்த மிகா ஹாக்கினெனை யுவராஜ் சிங் சந்தித்துள்ளார். பின்னர், அவருடன் மெக்லாரன் 750எஸ் என்கிற சூப்பர் காரில் யுவராஜ் சிங் பயணம் செய்துள்ளார். இந்த பயணத்தில் மெர்சலாகி போன யுவராஜ் சிங், இந்த காரை வாங்க விரும்புவதாக தெரிவித்துள்ளார்.
ஃபார்முலா 1 கார் பந்தயத்தின் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனல் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள இதுகுறித்த வீடியோவில் முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் மற்றும் முன்னாள் எஃப்1 சாம்பியன் மிகா ஹாக்கினென் இடையேயான உரையாடலை காணலாம். மெக்லாரன் 750எஸ் காரினுள் யுவராஜ் சிங் நுழைவதில் இருந்து துவங்கும் இந்த வீடியோவில், யுவராஜ் சிங்கிடம் மிகா ஹாக்கினென் சில கேள்விகளை கேட்பதை காணலாம்.
இதில் குறிப்பிடத்தக்க கேள்வி என்னவென்றால், "உங்களிடம் எதாவது ஸ்போர்ட்ஸ் கார் உள்ளதா?" என்பதாகும். இதற்கு பதிலளித்த யுவராஜ் சிங், "ஆம். லம்போர்கினி மர்சியலகோ மற்றும் பெண்ட்லீ காண்டினெண்டல் ஜிடி வி8 என 2 கார்கள் உள்ளன" என்றார். அதன்பின், யுவராஜ் எதோ ஒன்றை கூற வந்த போது, மிகா ஹாக்கினென் உடனடியாக காரின் ஆக்ஸலரேட்டரை வேகமாக மிதித்தார்.
இதில் சீறி பாய்ந்த மெக்லாரன் 750எஸ் காரின் செயல்திறனை கண்டு சில நிமிடங்களுக்கு யுவராஜ் சிங் வாயடைத்து போனதை வீடியோவில் காணலாம். இரண்டு முறை சாம்பியன் மிகா ஹாக்கினெனின் திறமை இன்னமும் சற்றும் குறையவில்லை. கார் வேகமாக சென்று கொண்டிருந்த சமயத்தில், வளைவு ஒன்றில் மிகா ஹாக்கினென் சடர்ன் பிரேக் கொடுக்க, இதனை கொஞ்சமும் எதிர்பார்க்காத யுவராஜ் சிங் தனது சீட்டில் இருந்து சற்று முன்னோக்கி வருவதை வீடியோவில் காண முடிகிறது.

மியாமி கிராண்ட் பிரிக்ஸில் ரேஸ் டிராக்கில் இதேபோன்று பல்வேறு ஷார்ப் கார்னர்களில் மிகா ஹாக்கினென் காரை ஓட்டிய விதத்தை பார்த்து மெய்சிலிர்த்து போன யுவராஜ் சிங், மெக்லாரன் 750எஸ் காரின் அபரிதமான செயல்படுதிறனை கண்டு ஆச்சிரியமடைந்துள்ளார். வீடியோவின் இறுதியில், இந்த பயணம் எப்படி இருந்தது? என மிகா ஹாக்கினென் யுவராஜ் சிங்கிடம் கேட்டார்.
அதற்கு, "வாயில் இருந்து காஃபி வெளியே வந்தது போன்று உணர்ந்தேன்" என யுவராஜ் சிங் பதிலளிக்க, இருவரும் மாறி, மாறி சிரித்துக் கொண்டனர். பின்னர், காரை விட்டு வெளியே வந்த யுவராஜ் சிங் மெக்லாரன் எஃப்1 குழுவிடம், "மிகா இப்போதும் லண்டோவை விட சிறப்பாக கார் ஓட்டுகிறார்" என நகைச்சுவையாக தெரிவித்தார். லண்டோ நோரிஸ், மெக்லாரன் எஃப்1 குழுவின் தற்போதைய டிரைவர் ஆவார்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த சந்திப்பின்போது, யுவராஜ் சிங் 2, 3 முறை இந்த மெக்லாரன் 750எஸ் காரை வாங்க போவதாக தெரிவித்துள்ளார். ஆதலால், இந்தியா வந்த பின்பு இந்த மெக்லாரன் காரை யுவராஜ் சிங் வாங்குவதற்கு அதிக வாய்ப்புள்ளது. பொதுவாக, ஆட்டோமொபைல் வாகனங்கள் மீது எம்.எஸ் தோனி தான் ஆர்வமாக இருப்பார் என்பது நமக்கு தெரியும். ஆனால், யுவராஜ் சிங்கும் ஆட்டோமொபைல் பிரியர் என்பது தற்போதுதான் தெரியவந்துள்ளது.


Click it and Unblock the Notifications









