யுவராஜ் சிங் பைக்குகளை தொடாமல் கார்களை மட்டும் வாங்குவதன் உருக்கமான பின்னணி...

By Arun

பவுலர்களுக்கு கிலி உண்டாக்கும் பேட்டிங், பேட்ஸ்மேன்களை சுழன்று சென்று தாக்கும் ஸ்பின் பவுலிங், அரண் போன்ற துடிப்பான பீல்டிங்கால் உலகப்புகழ் பெற்ற கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் எக்காலத்திலும் பைக் மட்டும் ஓட்டவே மாட்டார். இதற்காகவே அவர் பல லக்ஸரி கார்களை வாங்கி குவித்துள்ளார். அது ஏன்? என்ற உருக்கமான காரணத்தை பின்வரும் ஸ்லைடர்களில் காணலாம்.

யுவராஜ் சிங் பைக் ஓட்ட மாட்டார்... கார்களை மட்டுமே வாங்குவார்... காரணத்த கேட்டா உருகி போவீங்க...!!!

யுவி மேஜிக்...!!

இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங், அதிரடியான ஆட்டத்திற்கு பெயர் பெற்றவர். இன்று அவர் பார்ம் அவுட் என்றாலும் கூட, அவரது சாதனைகள் என்றென்றும் நிலைத்திருக்கும்.

யுவராஜ் சிங் பைக் ஓட்ட மாட்டார்... கார்களை மட்டுமே வாங்குவார்... காரணத்த கேட்டா உருகி போவீங்க...!!!

2007 டி20 உலக கோப்பை தொடரில் இங்கிலாந்துக்கு எதிரான போட்டி ஒன்றில் ஒரே ஓவரில் 6 சிக்சர்களை விளாசி மேஜிக் நிகழ்த்தியது, 2011 உலக கோப்பை தொடரில் தொடர் நாயகன் விருது வென்று மிரட்டியது என யுவராஜ் சிங்கின் சில சாதனைகள் வரலாற்று பொக்கிஷம்.

யுவராஜ் சிங் பைக் ஓட்ட மாட்டார்... கார்களை மட்டுமே வாங்குவார்... காரணத்த கேட்டா உருகி போவீங்க...!!!

கூல் கேப்டன் டோனி தலைமையிலான இந்திய அணி இந்த 2 உலக கோப்பை தொடர்களையும் வெல்ல காரணகர்த்தாவாக விளங்கியதே யுவராஜ் சிங்தான். அதை ஒருபோதும் மறுக்கமுடியாது.

யுவராஜ் சிங் பைக் ஓட்ட மாட்டார்... கார்களை மட்டுமே வாங்குவார்... காரணத்த கேட்டா உருகி போவீங்க...!!!

அம்மா செல்லம்...!!

கிரிக்கெட் களத்தில் யுவராஜ் சிங் ஒரு பயமறியான். ஆனால் வீட்டில் அவரது அம்மா ஷப்னம் சிங்தான் எல்லாம். அம்மாவுக்கு அடங்கி ஒடுங்கி நடக்கும் நல்ல பிள்ளை நம்ம யுவராஜ் சிங்.

யுவராஜ் சிங் பைக் ஓட்ட மாட்டார்... கார்களை மட்டுமே வாங்குவார்... காரணத்த கேட்டா உருகி போவீங்க...!!!

யுவராஜ் சிங்குக்கு பைக் ஓட்டுவது என்றால் ரொம்பவே பிடிக்கும். ஆனால் அவர் எப்போதும் பைக்குகளை ஓட்டவே மாட்டார். பைக் ஓட்டுவதில் இருந்து யுவராஜ் சிங் எப்போதும் விலகியே இருப்பார்.

யுவராஜ் சிங் பைக் ஓட்ட மாட்டார்... கார்களை மட்டுமே வாங்குவார்... காரணத்த கேட்டா உருகி போவீங்க...!!!

அதற்கான காரணத்தை கேட்டால், நீங்க உருகி போயிடுவீங்க. யுவராஜ் சிங் அம்மா செல்லம் என்றாலும் கூட, அவருக்கு என சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

யுவராஜ் சிங் பைக் ஓட்ட மாட்டார்... கார்களை மட்டுமே வாங்குவார்... காரணத்த கேட்டா உருகி போவீங்க...!!!

அம்மாவுக்கு செய்த சத்தியம்...!!

ஆம், யுவராஜ் சிங் பைக் ஓட்ட, அவரது அம்மா ஷப்னம் சிங் தடை விதித்துள்ளார். அதையும் மீறி பைக் ஓட்டினால் வீட்டில் இருந்து வெளியே சென்று விடுவேன் என அவர் எச்சரிக்கையும் விடுத்துள்ளார்.

யுவராஜ் சிங் பைக் ஓட்ட மாட்டார்... கார்களை மட்டுமே வாங்குவார்... காரணத்த கேட்டா உருகி போவீங்க...!!!

அம்மா எப்போதும் தன்னுடன் இருக்க வேண்டும் என்பதற்காகதான் யுவராஜ் சிங் பைக் ஓட்டுவது இல்லையாம். எப்போதும் பைக் ஓட்ட மாட்டேன் என அவரது அம்மாவுக்கு, யுவராஜ் சிங் சத்தியமும் செய்து கொடுத்துள்ளார்.

யுவராஜ் சிங் பைக் ஓட்ட மாட்டார்... கார்களை மட்டுமே வாங்குவார்... காரணத்த கேட்டா உருகி போவீங்க...!!!

கார்களை வாங்கி குவித்ததன் பின்னணி...!!

பைக்தானே ஓட்டக்கூடாது. காருக்கு ஒன்றும் தடை இல்லையே. இதனால் யுவராஜ் சிங்கின் ஆர்வம் முழுக்க முழுக்க கார்கள் மீது திரும்பியது. கார்களை அவர் வாங்கி குவித்ததன் பின்னணி இதுதான்.

யுவராஜ் சிங் பைக் ஓட்ட மாட்டார்... கார்களை மட்டுமே வாங்குவார்... காரணத்த கேட்டா உருகி போவீங்க...!!!

கிரிக்கெட் களத்தில் சிக்சர்களை விளாசுவதை போல், கார்கள் ஓட்டுவதிலும் யுவராஜ் சிங் பேரார்வம் கொண்டவர். கார்களை ஓட்டுவதற்கு தடையேதும் இல்லை என்பதால், வரிசையாக விதவிதமான கார்களை அவர் வாங்கினார்.

யுவராஜ் சிங் பைக் ஓட்ட மாட்டார்... கார்களை மட்டுமே வாங்குவார்... காரணத்த கேட்டா உருகி போவீங்க...!!!

இதனால் அவரது கேரேஜில் தற்போது, லம்போர்கினி முர்சிலகோ எல்பி 640-4 முதல் பென்ட்லி கான்டினெண்டல் ப்ளையிங் ஸ்பர் வரை பல சொகுசு கார்கள் வரிசை கட்டி நிறுத்தப்பட்டிருக்கின்றன. அந்த கார்கள் குறித்த ருசிகரமான தகவல்களை இனி பார்க்கலாம்.

யுவராஜ் சிங் பைக் ஓட்ட மாட்டார்... கார்களை மட்டுமே வாங்குவார்... காரணத்த கேட்டா உருகி போவீங்க...!!!

லம்போர்கினி முர்சிலகோ எல்பி 640-4

யுவராஜ் சிங்கிடம் இருப்பதிலேயே மிகவும் வேகமான கார் இதுதான். இந்தியாவில் உள்ள ஒரே ஒரு பார்முலா-1 சர்க்யூட்டான புத் சர்வதேச சர்க்யூட்டில் (கிரேட்டர் நொய்டாவில் உள்ளது), யுவராஜ் சிங் இந்த காரை ஓட்டியுள்ளார்.

யுவராஜ் சிங் பைக் ஓட்ட மாட்டார்... கார்களை மட்டுமே வாங்குவார்... காரணத்த கேட்டா உருகி போவீங்க...!!!

ஆரஞ்சு நிறம் கொண்ட இந்த காரில், 6.5 லிட்டர் வி12 பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. உச்சபட்சமாக 631 பிஎச்பி பவரையும், 660 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இந்த காரின் உற்பத்தி தற்போது நிறுத்தப்பட்டு விட்டது.

யுவராஜ் சிங் பைக் ஓட்ட மாட்டார்... கார்களை மட்டுமே வாங்குவார்... காரணத்த கேட்டா உருகி போவீங்க...!!!

ஆடி க்யூ5

2011 உலக கோப்பையில் சிறப்பாக விளையாடியதற்காக, ஆடி நிறுவனம் இந்த காரை, யுவராஜ் சிங்கிற்கு பரிசாக வழங்கியது. இந்தியாவில் அதிகம் விற்பனையான ஆடி நிறுவனத்தின் கார்களில் இதுவும் ஒன்று.

யுவராஜ் சிங் பைக் ஓட்ட மாட்டார்... கார்களை மட்டுமே வாங்குவார்... காரணத்த கேட்டா உருகி போவீங்க...!!!

ஆடி க்யூ5 காரின் லுக்கும், சொகுசான வசதிகளும் பல வாடிக்கையாளர்களை கவர்ந்துள்ளன. இந்த கார் இந்தியாவில்தான் அசெம்பிள் செய்யப்பட்டது. பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின் என இரண்டு ஆப்ஷன்களிலும் உள்ளது.

யுவராஜ் சிங் பைக் ஓட்ட மாட்டார்... கார்களை மட்டுமே வாங்குவார்... காரணத்த கேட்டா உருகி போவீங்க...!!!

பிஎம்டபிள்யூ இ46 எம்3 கன்வர்டபிள்

பிஎம்டபிள்யூ நிறுவனம் இந்த காரை, இந்திய மார்க்கெட்டில் அதிகாரப்பூர்வமாக விற்பனை செய்யவில்லை. யுவராஜ் சிங்தான் மிகவும் விருப்பப்பட்டு, பிரத்யேகமாக இறக்குமதி செய்து கொண்டார்.

யுவராஜ் சிங் பைக் ஓட்ட மாட்டார்... கார்களை மட்டுமே வாங்குவார்... காரணத்த கேட்டா உருகி போவீங்க...!!!

பீனிக்ஸ் மஞ்சள் நிற மெட்டாலிக் ஷேடு கொண்ட இந்த கார், அதன் சகாப்தத்தில் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக இருந்தது. இன்றும் கூட கார் ஆர்வலர்களால், இந்த கார் விரும்பப்படுகிறது.

யுவராஜ் சிங் பைக் ஓட்ட மாட்டார்... கார்களை மட்டுமே வாங்குவார்... காரணத்த கேட்டா உருகி போவீங்க...!!!

இந்த காரில் பொருத்தப்பட்டுள்ள 3.2 லிட்டர் இன்லைன் 6 சிலிண்டர் இன்ஜின், 338 பிஎச்பி பவரையும், 365 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். பூஜ்ஜியத்தில் இருந்து 100 கிலோ மீட்டர் என்ற வேகத்தை வெறும் 5.5 வினாடிகளில் எட்டி விடும்.

யுவராஜ் சிங் பைக் ஓட்ட மாட்டார்... கார்களை மட்டுமே வாங்குவார்... காரணத்த கேட்டா உருகி போவீங்க...!!!

இந்த காரின் டாப் ஸ்பீடு மணிக்கு 249 கிலோ மீட்டர்கள். மேனுவல் 6 ஸ்பீடு டிரான்ஸ்மிஷன் இந்த காரின் சிறப்பு வாய்ந்த அம்சங்களில் ஒன்று.

யுவராஜ் சிங் பைக் ஓட்ட மாட்டார்... கார்களை மட்டுமே வாங்குவார்... காரணத்த கேட்டா உருகி போவீங்க...!!!

பிஎம்டபிள்யூ இ60 எம்5

ப்ளூ ஷேடு கொண்ட இந்த காரில், யுவராஜ் சிங் பல நிகழ்ச்சிகளுக்கு வந்து சென்றுள்ளார். இதில், 5.0 லிட்டர் வி10 இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 500 பிஎச்பி பவரையும், 520 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. ஆனால் சில நாட்களுக்கு முன்பு யுவராஜ் சிங், இந்த காரை விற்று விட்டதாக கூறப்படுகிறது.

யுவராஜ் சிங் பைக் ஓட்ட மாட்டார்... கார்களை மட்டுமே வாங்குவார்... காரணத்த கேட்டா உருகி போவீங்க...!!!

பிஎம்டபிள்யூ இ90 3 சீரிஸ்

இந்தியாவில் இந்த காருக்கு நிறைய வாடிக்கையாளர்கள் உள்ளனர். யுவராஜ் சிங்கிடம் இருப்பது வெள்ளை நிற கார். டீசல் இன்ஜின் காரான இதனையும், யுவராஜ் சிங் அடிக்கடி பயன்படுத்துவார். ஆனால் இந்த கார் தற்போது மார்க்கெட்டில் கிடைக்காது. இதற்கு பதிலாக புதிய தலைமுறை கார்கள் வந்து விட்டன.

யுவராஜ் சிங் பைக் ஓட்ட மாட்டார்... கார்களை மட்டுமே வாங்குவார்... காரணத்த கேட்டா உருகி போவீங்க...!!!

பிஎம்டபிள்யூ எக்ஸ்6 எம்

செகண்ட் ஹேண்டில்தான் யுவராஜ் சிங் இந்த காரை வாங்கினார். 4.4 லிட்டர் வி8 இன்ஜின் பொருத்தப்பட்டுள்ள இந்த கார், அதிகபட்சமாக 567 பிஎச்பி பவரையும், 750 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும்.

யுவராஜ் சிங் பைக் ஓட்ட மாட்டார்... கார்களை மட்டுமே வாங்குவார்... காரணத்த கேட்டா உருகி போவீங்க...!!!

8 ஸ்பீடு ஆட்டோமெடிக் ட்ரான்ஸ்மிஷன் கொண்ட இந்த கார், பூஜ்ஜியத்தில் இருந்து 100 கிலோ மீட்டர் என்ற வேகத்தை வெறும் 4.2 வினாடிகளில் எட்டி விடும்.

யுவராஜ் சிங் பைக் ஓட்ட மாட்டார்... கார்களை மட்டுமே வாங்குவார்... காரணத்த கேட்டா உருகி போவீங்க...!!!

பென்ட்லி கான்டினெண்டல் ப்ளையிங் ஸ்பர்

யுவராஜ் சிங்கிடம் இருப்பதிலேயே மிகவும் சொகுசான கார் இதுவே. இந்த காரின் சிகப்பு நிற இன்டீரியர்கள், டெட்லி லுக்கை தருகின்றன. இந்த கார் 616 பிஎச்பி பவரையும், 800 என்எம் டார்க் திறனையும் உருவாக்கி, மின்னல் வேகத்தில் பறக்கும்.

யுவராஜ் சிங் பைக் ஓட்ட மாட்டார்... கார்களை மட்டுமே வாங்குவார்... காரணத்த கேட்டா உருகி போவீங்க...!!!

பேவரைட் எது?

யுவராஜ் சிங்கின் கார் கலெக்ஸன் எல்லாம் ஒகே பாஸ்...அவரது பேவரைட் கார் எது என கேட்கிறீர்களா? மெர்ஸிடெஸ்தான் யுவராஜ் சிங்கின் ஆல் டைம் பேவரைட். அட இது லிஸ்ட்லயே இல்லை என எண்ண வேண்டாம். ஏனெனில் இது யுவராஜ் சிங்கின் அம்மாவினுடைய கார். யுவராஜ் சிங்தான் அம்மா செல்லம் ஆச்சே!!!

டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்

01."மேட் இன் தமிழ்நாடு ஸ்கூட்டர்" மூலம் கார்பரேட்களுடன் 'தில்'லாக போட்டிபோடும் உள்ளூர் நிறுவனம்

02.போயிங் ரக விமானத்தை கயிறு கட்டி இழுத்து உலக சாதனை படைத்த எலக்ட்ரிக் கார்! பிரம்மிப்பூட்டும் வீடியோ!!

03.பாலைவனத்தில் வைத்து புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி700 சோதனை: ஸ்பை படங்கள்!!

Most Read Articles

Tamil
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Yuvraj Singh’s car collection: From Lamborghini Murcielago to Bentley Continental. read in tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Drivespark sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Drivespark website. However, you can change your cookie settings at any time. Learn more