கழுத்துல தாலி ஏறன உடனே கோடி கோடியா பணம் வாங்கீட்டு விவகாரத்து! சொகுசு கார்ல வந்தது அவரின் முன்னாள் மனைவியா!
இந்தியாவில் சமீப காலமாக பிரபலமான மனிதர்கள் விவாகரத்து (Divorce) பெறுவது அதிகரித்து கொண்டே வருகிறது. தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்த் (Dhanush - Aishwarya Rajinikanth), ஜிவி பிரகாஷ் குமார் - சைந்தவி (GV Prakash Kumar - Saindhavi) மற்றும் ஏஆர் ரஹ்மான் - சாயிரா பானு (AR Rahman - Saira Banu) போன்ற நட்சத்திர தம்பதிகளின் பிரிவு, ரசிகர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. திரையுலக நட்சத்திரங்கள் மட்டுமல்லாது, கிரிக்கெட் வீரர்கள் போன்ற விளையாட்டு வீரர்களும் சமீப காலமாக விவாகரத்து பெறுவது அதிகமாக உள்ளது.
ஹர்திக் பாண்டியா - நடஷா ஸ்டான்கோவிக் (Hardik Pandya - Natasa Stankovic) தம்பதியினரின் பிரிவை இதற்கு உதாரணமாக சொல்ல முடியும். இந்த வரிசையில் நாடு முழுக்க கடும் அதிர்ச்சியை ஏற்படுத்திய மற்றொரு கிரிக்கெட் வீரரின் விவாகரத்து வழக்கு தற்போது முடிவுக்கு வந்துள்ளது.

அவர் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவரான யுசுவேந்திர சஹால் (Yuzvendra Chahal) ஆவார். இவருக்கும், நடன இயக்குனரான (Dance Choreographer) தனஸ்ரீ வர்மாவிற்கும் (Dhanashree Verma) இடையே கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் மாதம் திருமணம் நடைபெற்றது.
ஆனால் மிக குறுகிய காலத்திலேயே அவர்கள் இருவரும் பிரிந்தனர். சுமார் 18 மாதங்கள் மட்டுமே ஒன்றாக வாழ்ந்த நிலையில், கடந்த 2022ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் அவர்கள் இருவரும் தனித்தனியாக வாழ்ந்து வருகின்றனர். இதற்கிடையே விவகாரத்து கோரி அவர்கள் மும்பை நீதிமன்றத்தில் (Mumbai Court) வழக்கு தொடர்ந்திருந்தனர்.

இந்த வழக்கில் இன்று (மார்ச் 20), யுசுவேந்திர சஹால் மற்றும் தனஸ்ரீ வர்மாவிற்கு மும்பை நீதிமன்றம் விவாகரத்து வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன் மூலம் யுசுவேந்திர சஹால் மற்றும் தனஸ்ரீ வர்மா ஆகிய இருவரும் அதிகாரப்பூர்வமாக பிரிந்துள்ளனர். இந்த வழக்கு மூலம் தனஸ்ரீ வர்மாவிற்கு பெரிய தொகை ஒன்று ஜீவனாம்சமாக (Alimony) கிடைத்துள்ளது.
அதாவது யுசுவேந்திர சஹால், அவரது முன்னாள் மனைவி தனஸ்ரீ வர்மாவிற்கு 4.75 கோடி ரூபாயை ஜீவனாம்சமாக வழங்கவுள்ளார். முன்னதாக இந்த வழக்கு தொடர்பாக இன்று தனஸ்ரீ வர்மா மும்பை நீதிமன்றத்திற்கு வந்த வைரல் வீடியோ (Viral Video) சமூக வலை தளங்களில் தற்போது வேகமாக பரவி வருகிறது.
யூடியூப் தளத்தில் பதிவிடப்பட்டுள்ள இந்த வைரல் வீடியோவில் மெர்சிடிஸ் பென்ஸ் சி-க்ளாஸ் (Mercedes Benz C-Class) காரில் தனஸ்ரீ வர்மா வந்து இறங்குவதை நம்மால் பார்க்க முடிகிறது. கேமராக்கள் அவரை சூழ்ந்த நிலையில், தனஸ்ரீ வர்மா வேகமாக நீதிமன்றத்திற்கு உள்ளே சென்று விட்டார்.
தனஸ்ரீ வர்மா மெர்சிடிஸ் பென்ஸ் சி-க்ளாஸ் காரில் பொது இடங்களுக்கு வருவது இது முதல் முறையல்ல. கடந்த காலங்களில் நிறைய இடங்களுக்கு அவர் இந்த காரில் வந்து சென்றுள்ளார். வெகு சமீபத்தில் கூட மும்பை விமான நிலையத்திற்கு (Mumbai Airport) தனஸ்ரீ வர்மா இந்த காரில் வந்தார் என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.
இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் மெர்சிடிஸ் பென்ஸ் சி-க்ளாஸ் காரின் ஆரம்ப விலை 59.40 லட்ச ரூபாயாக இருக்கிறது. இது இந்த காரின் சி 200 (C 200) வேரியண்ட்டின் விலை ஆகும். இதுதான் இந்த காரின் ஆரம்ப நிலை வேரியண்ட். இந்த வேரியண்ட்டைதான் தனஸ்ரீ வர்மா வைத்துள்ளார்.
மறுபக்கம் இந்த காரின் மிட்-வேரியண்ட்டான சி 220டி (C 220d) வேரியண்ட், 60.30 லட்ச ரூபாய் என்ற விலையில் விற்பனையாகி கொண்டுள்ளது. அதே நேரத்தில் டாப் வேரியண்ட்டான சி 300 (C 300) 66.25 லட்ச ரூபாய் என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இவை அனைத்துமே எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) ஆகும்.
இது சொகுசு செடான் (Luxury Sedan) ரகத்தை சேர்ந்த கார் ஆகும். பிரபலங்கள் பலரும் இந்த காரை வைத்துள்ளனர். இதன்படி ஹர்திக் பாண்டியா (Hardik Pandya), ஷில்பா ஷெட்டி (Shilpa Shetty), கரீனா கபூர் (Kareena Kapoor) மற்றும் ஷாகித் கபூர் (Shahid Kapoor) போன்ற பிரபலங்களிடம் எல்லாம் இந்த கார் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்திய சந்தையில் ஆடி ஏ4 (Audi A4) மற்றும் பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் (BMW 3 Series) உள்ளிட்ட கார்களுடன் மெர்சிடிஸ் பென்ஸ் சி-க்ளாஸ் போட்டியிட்டு வருகிறது. இந்த காரின் சி 200 வேரியண்ட்டில், 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. நாங்கள் ஏற்கனவே குறிப்பிட்டபடி இதுதான் தனஸ்ரீ வர்மாவிடம் உள்ளது.
மறுபக்கம் இந்த காரின் சி 220டி வேரியண்ட்டில் 2.0 லிட்டர் டீசல் இன்ஜின் கொடுக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் சி 300 வேரியண்ட்டில் 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன் இடம்பெற்றுள்ளது. இந்த 3 இன்ஜின்கள் உடனும் 48V மைல்டு ஹைப்ரிட் தொழில்நுட்பம் இடம்பெற்றுள்ளது. அத்துடன் 3 இன்ஜின்கள் உடனும் 9 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ்தான் இணைக்கப்பட்டுள்ளது.
இது விலை உயர்ந்த சொகுசு கார் என்பதால், அதிநவீன வசதிகளுக்கு சற்றும் பஞ்சமில்லை. 11.9 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், 12.3 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், பனரோமிக் சன்ரூஃப் மற்றும் ஆம்பியண்ட் லைட்டிங் போன்றவை எல்லாம் மெர்சிடிஸ் பென்ஸ் சி-க்ளாஸ் காரின் முக்கியமான வசதிகள் ஆகும்.
இவை எல்லாம் தவிர, 710W 15 ஸ்பீக்கர் பர்ம்ஸ்டர் பிரீமியம் சவுண்ட் சிஸ்டம், முன் பகுதியில் வென்டிலேஷன் வசதியுடன் கூடிய இருக்கைகள், ஆறு 100W ஃபாஸ்ட் சார்ஜிங் யூஎஸ்பி போர்ட்கள் போன்ற வசதிகளும் கூட, மெர்சிடிஸ் பென்ஸ் சி-க்ளாஸ் காரில் கொடுக்கப்பட்டுள்ளன. அதே போல் இந்த காரில் பாதுகாப்பு வசதிகளுக்கும் பஞ்சம் கிடையாது.
ஏராளமான ஏர்பேக்குகள், 360 டிகிரி கேமரா, ப்ளைண்ட் ஸ்பாட் அஸிஸ்ட் மற்றும் அடாப்டிவ் ஹை பீம் அஸிஸ்ட் போன்றவை எல்லாம் மெர்சிடிஸ் பென்ஸ் சி-க்ளாஸ் காரின் குறிப்பிடத்தக்க பாதுகாப்பு வசதிகள் ஆகும். இது போன்ற காரணங்களால், இது வாடிக்கையாளர்கள் வழங்கும் பணத்திற்கு மதிப்பு வாய்ந்த தயாரிப்பாக கருதப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: யுசுவேந்திர சஹாலும், அவரது முன்னாள் மனைவி தனஸ்ரீ வர்மாவும் ஒன்றாக சொகுசு கார்களில் பயணம் செய்ததை நாம் பார்த்து வந்தோம். இனி அவர்கள் இருவரும் தனித்தனியாக பயணிப்பதை நாம் பார்க்க போகிறோம். இது உண்மையிலேயே வருத்தமான ஒரு விஷயம்தான்.


Click it and Unblock the Notifications








