கல்யாணம் முடிச்ச கையோட கோடி கோடியா பணம் கேட்டு விவாகரத்தா? சொகுசு காரில் வந்த பிரபல மனிதரின் முன்னாள் மனைவி!
இந்தியாவில் விவாகரத்து வழக்குகள் (Divorce Cases) அதிகரித்து கொண்டே வருகின்றன. குறிப்பாக திரையுலக நட்சத்திரங்கள் மற்றும் கிரிக்கெட் வீரர்கள் பலரும் சமீப காலமாக தொடர்ச்சியாக விவாகரத்து பெற்று வருகின்றனர். இது அவர்களது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை அளிப்பதாக உள்ளது. கூடவே திரையுலக நட்சத்திரங்கள் மற்றும் கிரிக்கெட் வீரர்கள் விவாகரத்து பெறும் சமயங்களில், அதற்கான காரணங்கள் என்னென்ன? என்பது தொடர்பான தகவல்களும் வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி விடுகின்றன. இந்த வரிசையில் சமூக வலை தளங்களில் கிரிக்கெட் வீரர் ஒருவரின் விவாகரத்து சம்பவம் சமீப காலமாக தீவிரமாக விவாதிக்கப்பட்டு வருகிறது.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவரான யுசுவேந்திர சஹால்தான் (Yuzvendra Chahal) அவர். சஹால் மற்றும் அவரது மனைவி தனஸ்ரீ வர்மாவிற்கு (Dhanashree Verma) இடையே கருத்து வேறுபாடு இருந்து வந்துள்ளது. இதனால் அவர்கள் தற்போது நீதிமன்றம் மூலம் விவகாரத்து பெற்றுள்ளனர்.

எனவே தனஸ்ரீ வர்மா இனி சஹாலின் மனைவி அல்ல. முன்னாள் மனைவியாக மாறியுள்ளார். இது கண்டிப்பாக சஹால் மற்றும் தனஸ்ரீ வர்மா ஆகிய இருவருக்கும் மிகவும் கடினமான நேரமாகதான் இருக்கும். இருப்பினும் இந்த கடினமான நேரத்திலும் தனஸ்ரீ வர்மா முகத்தில் புன்னகையுடன் பொதுமக்களை எதிர்கொண்ட வைரல் வீடியோ (Viral Video) ஒன்று சமூக வலை தளங்களில் தற்போது பரவி வருகிறது.
யூடியூப் (YouTube) தளத்தில் பதிவிடப்பட்டுள்ள இந்த வைரல் வீடியோ, மும்பை விமான நிலையத்தில் (Mumbai Airport) எடுக்கப்பட்டுள்ளது. இந்த வைரல் வீடியோவில், தனஸ்ரீ வர்மா கார் ஒன்றில் இருந்து இறங்கி வந்து, விமான நிலையத்திற்கு உள்ளே செல்வதை நம்மால் பார்க்க முடிகிறது.

நாங்கள் ஏற்கனவே குறிப்பிட்டதை போல், இந்த கடினமான நேரத்திலும், தனஸ்ரீ வர்மா முகத்தில் புன்னகையுடன் அங்கிருந்தவர்களை எதிர்கொண்டதை இந்த வைரல் வீடியோவில் நாம் காணலாம். இந்த வைரல் வீடியோவில், தனஸ்ரீ வர்மா பயன்படுத்தியது மெர்சிடிஸ் பென்ஸ் சி-க்ளாஸ் சி 200 (Mercedes Benz C-Class C 200) கார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த காரின் எக்ஸ்-ஷோரூம் விலையே (Ex-showroom Price) சுமார் 60 லட்ச ரூபாய் வருகிறது. ஆன்-ரோடு விலை (On-Road Price) தோராயமாக 75 லட்ச ரூபாய் வரும். மிகவும் விலை உயர்ந்த இந்த காரில், 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன் வழங்கப்பட்டுள்ளது.
அதிகபட்சமாக 5800 - 6800 ஆர்பிஎம்மில் 201 பிஹெச்பி பவரையும், 1,800 - 4,000 ஆர்பிஎம்மில் 300 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடிய வகையில் இந்த இன்ஜின் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் உடன் 9 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: தனஸ்ரீ வர்மாவும், அவரது முன்னாள் கணவரான யுசுவேந்திர சஹாலும் சொகுசு கார்களில் பயணம் செய்வதை விரும்ப கூடியவர்கள். தனஸ்ரீ வர்மா தற்போது மெர்சிடிஸ் பென்ஸ் சி-க்ளாஸ் சி 200 காரை பயன்படுத்திய நிலையில், சஹாலிடமும் ஏராளமான விலை உயர்ந்த கார்கள் உள்ளன.
போர்ஷே கேயென்னே எஸ் (Porsche Cayenne S), லம்போர்கினி சென்டெனாரியோ (Lamborghini Centenario) மற்றும் ரோல்ஸ் ராய்ஸ் வ்ரெயித் (Rolls Royce Wraith) போன்றவை எல்லாம், யுசுவேந்திர சஹாலின் கார் கலெக்ஸனில் (Car Collection) இருந்து வரும் குறிப்பிடத்தகுந்த கார்கள் ஆகும்.
முன்னதாக யுசுவேந்திர சஹாலிடம், தனஸ்ரீ வர்மா 60 கோடி ரூபாயை ஜீவனாம்சமாக கேட்பதாக சமூக வலை தளங்களில் தகவல்கள் பரவி வந்தன. அவர்கள் இருவருக்கும் கடந்த 2020ம் ஆண்டின் இறுதியில்தான் திருமணமே நடந்தது. அதாவது திருமணம் நடந்து சுமார் 4 வருடங்கள் மட்டுமே கடந்துள்ளன.
எனவே 60 கோடி ரூபாய் ஜீவனாம்சம் பணத்தை பெறுவதற்காகவே தனஸ்ரீ வர்மா விவாகரத்து கேட்பதாகவும், திருணத்தை ஒரு தொழில் போல் மாற்றி விட்டதாகவும் சமூக வலை தளங்களில் பரபரப்பாக பேசப்பட்டது. ஆனால் அந்த குற்றச்சாட்டுக்களை எல்லாம் தனஸ்ரீ வர்மா குடும்பத்தினர் மறுத்துள்ளனர். இந்த தகவல்கள் ஆதாரமற்றவை என்பது அவர்களின் கருத்து.


Click it and Unblock the Notifications








