கழுத்துல மூனு முடிச்சு ஏறன உடனே 5 கோடி வாங்கீட்டு விவாகரத்து! சொகுசு காரில் வலம் வருவது அவரோட முன்னாள் மனைவியா

இந்தியாவில் திருமண பந்தம் என்பது மிகவும் முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. எனவே உலகின் மற்ற பெரும்பாலான நாடுகளை காட்டிலும் இந்தியாவில் இன்னமும் விவாகரத்து வழக்குகள் (Divorce Cases) மிகவும் குறைவாகவே இருந்து வருகின்றன. ஆனால் சமீப காலமாக இந்தியாவிலும், விவாகரத்து கேட்டு நீதிமன்ற படியேறுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து கொண்டே செல்கிறது. சமூக அழுத்தங்களை கடந்து, திருமண பந்தங்களில் இருந்து வெளியேறுவோரின் எண்ணிக்கை, சமீப காலமாக அதிகரித்து கொண்டிருப்பதற்கு பின்னால் பல்வேறு உளவியல் காரணங்கள் இருப்பதாக வழக்கறிஞர்களும், உளவியல் நிபுணர்களும் தெரிவிக்கின்றனர்.

மரபு வழி நடைமுறைகளை பின்பற்ற நமது சமகால தலைமுறை தயாராக இல்லை. அத்துடன் பெண்களிடம் ஏற்பட்டுள்ள பொருளாதார சுதந்திரம் மற்றும் மன நலன் சார்ந்த விழிப்புணர்வு ஆகியவை எல்லாம் ஒருங்கிணைந்து, சமூக அழுத்தங்களை எல்லாம் பொருட்படுத்தாமல், மகிழ்ச்சியற்ற/தவறான உறவுகளில் இருந்து விடுபடுவதை ஊக்குவிக்கின்றன.

Dhanashree Verma Spotted In Mercedes Benz C-Class

இவையே இந்தியாவில் விவாகரத்து வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டிருப்பதற்கு முக்கியமான காரணங்களாக கருதப்படுகின்றன. இந்தியாவை பொறுத்தவரையில், யார் விவகாரத்து பெற்றாலும் அது பேசு பொருள்தான். குறிப்பாக பிரபலமான மனிதர்களின் விவாகரத்து என்றால், அது அனைவரின் கவனத்தையும் ஈர்க்க கூடிய ஒரு விஷயமாக மாறி விடும்.

அந்த வகையில் சமீபத்தில் ஒரு விவகாரத்து வழக்கு அனைத்து தரப்பிலும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அது கிரிக்கெட் வீரர் யுசுவேந்திர சஹால் (Yuzvendra Chahal) மற்றும் தனஸ்ரீ வர்மாவின் (Dhanashree Verma) விவகாரத்து வழக்கு ஆகும். இவர்கள் இருவருக்கும் கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் மாதம்தான் திருமணம் நடைபெற்றது.

Dhanashree Verma

ஆனால் 2022ம் ஆண்டு ஜூன் மாதம் முதலே அவர்கள் இருவரும் பிரிந்துதான் வாழ்ந்து கொண்டிருந்தனர். அத்துடன் கருத்து வேறுபாடு காரணமாக விவகாரத்து கேட்டு வழக்கும் தொடர்ந்தனர். இதன் பேரில் அவர்களுக்கு வெகு சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக விவாகரத்து வழங்கப்பட்டது. இந்த வழக்கில் யுசுவேந்திர சஹால் ஜீவனாம்சமாக (Alimony) 4.75 கோடி ரூபாயை, தனஸ்ரீ வர்மாவிற்கு வழங்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதிகாரப்பூர்வமாக விவாகரத்து பெற்ற சூழலில், தனஸ்ரீ வர்மாவை தற்போது பொது இடங்களில் அடிக்கடி காண முடிகிறது. இந்த வரிசையில் மும்பை விமான நிலையத்திற்கு (Mumbai Airport) அவர் வந்தபோது எடுக்கப்பட்ட வைரல் வீடியோ (Viral Video) ஒன்று சமூக வலை தளங்களில் தற்போது வேகமாக பரவி வருகிறது.

இந்த வைரல் வீடியோவில் மெர்சிடிஸ் பென்ஸ் சி-க்ளாஸ் (Mercedes Benz C-Class) காரில் தனஸ்ரீ வர்மா வந்து இறங்குவதை நம்மால் காண முடிகிறது. இது இந்த காரின் சி 200 (C 200) வேரியண்ட் ஆகும். காரில் இருந்து இறங்கிய உடனேயே அவர் நேராக விமான நிலையத்திற்குள் சென்று விட்டார்.

தனஸ்ரீ வர்மாவை மெர்சிடிஸ் பென்ஸ் சி-க்ளாஸ் காரின் சி200 வேரியண்ட்டில் பார்ப்பது இது முதல் முறை கிடையாது. கிட்டத்தட்ட பெரும்பாலான நேரங்களில் பொது இடங்களுக்கு அவர் இந்த காரில்தான் வந்து சென்று கொண்டுள்ளார். விவாகரத்து வழக்கு விசாரணையின்போது கூட, நீதிமன்றத்திற்கு அவர் இதே காரில் வந்து சென்றார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

அத்துடன் யுசுவேந்திர சஹால் மற்றும் தனஸ்ரீ வர்மா ஆகிய இருவரையும் இதே காரில் ஒன்றாகவும் கடந்த காலங்களில் பார்க்க முடிந்துள்ளது. இது கடந்த 2021ம் ஆண்டு வாங்கப்பட்ட கார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் லைன்-அப்பில் ஏ-க்ளாஸ் (A-Class) மற்றும் இ-க்ளாசுக்கு (E-Class) இடையில் சி-க்ளாஸ் நிலைநிறுத்தப்பட்டுள்ளது.

இது இந்தியாவின் சொகுசு கார் வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான ஒன்றாக திகழ்ந்து வருகிறது. கடந்த 2001ம் ஆண்டு இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்தே, மெர்சிடிஸ் பென்ஸ் சி-க்ளாஸ் கார் மிகவும் பிரபலம். இந்தியாவில் தற்போது விற்பனையில் இருப்பது மெர்சிடிஸ் பென்ஸ் சி-க்ளாஸ் காரின் 5வது தலைமுறை மாடல் ஆகும்.

மஹாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் தொழிற்சாலையில் சி-க்ளாஸ் கார்கள் அசெம்பிள் செய்யப்படுகின்றன. இந்தியாவில் அசெம்பிள் செய்யப்படுவதால், மெர்சிடிஸ் பென்ஸ் சி-க்ளாஸ் காரின் விலை சற்று குறைவாக உள்ளது. தற்போதைய நிலையில் இந்த காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை 59.40 லட்ச ரூபாயாக இருக்கிறது.

அதே நேரத்தில் இந்த காரின் டாப் வேரியண்ட்டின் விலையோ 66.25 லட்ச ரூபாயாக உள்ளது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும். இந்த விலைக்கு இது மதிப்பு வாய்ந்த தயாரிப்பாக கருதப்படுகிறது. எனவே கடந்த 2001ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்து, இந்தியாவில் 37 ஆயிரத்திற்கும் அதிகமான மெர்சிடிஸ் பென்ஸ் சி-க்ளாஸ் கார்கள் விற்பனையாகியுள்ளன.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: தனஸ்ரீ வர்மா பயன்படுத்திய மெர்சிடிஸ் பென்ஸ் சி-க்ளாஸ் கார், செடான் (Sedan) ரகத்தை சேர்ந்தது ஆகும். அத்துடன் இது மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் என்ட்ரி-லெவல் சொகுசு கார்களில் (Entry-level Luxury Car) ஒன்றாக இருக்கிறது. எனவே ஓரளவிற்கு குறைவான விலையில் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் சொகுசு செடான் காரை எதிர்பார்த்து கொண்டுள்ள வாடிக்கையாளர்களுக்கு இது நல்ல ஆப்ஷன் ஆகும்.

More from DriveSpark

Article Published On: Monday, March 31, 2025, 14:03 [IST]
English summary
Yuzvendra chahal s ex wife spotted once again in mercedes benz c class luxury sedan viral video
மேலும்... #celebrity cars #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+