ஐபிஎல் ஏல பணம் எப்படியெல்லாம் வேலை செய்யுது! 2026க்கு பிறகு நினைச்சாலும் இந்த காரை வாங்க முடியாது!
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர்களில் ஒருவரான யுஸ்வேந்திர சாஹல் (Yuzvendra Chahal), தனது கார் சேகரிப்பில் மற்றொரு உயர்தர காரைச் சேர்த்துள்ளார். அவர் புதிதாக ஒரு 'பிஎம்டபிள்யூ இசட்4 கன்வெர்ட்டிபிள்' (BMW Z4 Convertible) காரை வாங்கியுள்ளார். ராஜஸ்தான் ராயல்ஸ் (Rajasthan Royals) அணியின் இந்தச் சுழற்பந்து வீச்சாளர், ஏற்கெனவே போர்ஷே (Porsche), லம்போர்கினி (Lamborghini), மெர்சிடிஸ்-பென்ஸ் (Mercedes-benz) மற்றும் ரோல்ஸ் ராய்ஸ் (Rolls-Royce) போன்ற பல சொகுசு கார்களை வைத்துள்ளார்.
சாஹல், தண்டர்நைட் மெட்டாலிக் (Thundernight Metallic) நிறத்திலான தனது புதிய இசட்4 கன்வெர்ட்டிபிள் காரை டெலிவரி (Delivery) எடுத்த மகிழ்ச்சியான தருணத்தை தனது சமூக வலைத்தள பக்கத்தில் வீடியோவாகப் பகிர்ந்துள்ளார். அவரது பெற்றோரும் இந்தக் கார் வாங்கும் நிகழ்வின்போது உடனிருந்து மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டனர்.

இந்த வீடியோவில், சாஹலின் பெற்றோர்கள் காரை திறந்து காட்டி, அவரோடு சேர்ந்து புகைப்படம் எடுத்துக்கொள்வதும் பதிவாகியிருந்தது. அந்த வீடியோவுடன், சாஹல் வெளியிட்ட பதிவில், "என் கனவுகள் அனைத்தையும் நிஜமாக்கிய எனது பெற்றோருடன் எனது புதிய காரை வீட்டிற்குக் கொண்டு வந்தேன். என் பெற்றோர்கள் இந்த மைல்கல்லைக் கண்டு ரசிப்பதுதான் உண்மையான ஆடம்பரம்" என்று குறிப்பிட்டிருந்தார்.
மற்றொரு புகைப்படத்தில், சாஹல் முழுமையாக கருப்பு நிற உட்புற அமைப்பைக் கொண்ட அவரது புதிய பிஎம்டபிள்யூ காரை ஓட்டுவதைக் காணலாம். இது இசட்4 காரின் ஸ்போர்ட்டியான மற்றும் நேர்த்தியான உட்புற தோற்றத்தை எடுத்துக்காட்டுகிறது. சாஹல், 8-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மற்றும் பல டிரைவிங் மோட்களைக் கொண்ட இசட்4-இன் டாப் வேரியண்ட்டைத் தேர்ந்தெடுத்துள்ளார்.

இந்தக் கன்வெர்ட்டிபிள் கார் ஒரு அரிய வகையாகும். 2026ஆம் ஆண்டின் இறுதியில் பிஎம்டபிள்யூ நிறுவனம் இந்த காரின் உற்பத்தியை நிறுத்த திட்டமிட்டுள்ளது. இதனால், இது கடைசி தலைமுறை இசட்4 கன்வெர்ட்டிபிள் கார் ஆகும். இந்தியாவில் இசட்4 காரின் எக்ஸ்-ஷோரூம் விலை சுமார் ரூ.87.90 லட்சம் முதல் தொடங்குகிறது.
3.0 லிட்டர், 6 சிலிண்டர் டர்போ பெட்ரோல் என்ஜினை பிஎம்டபிள்யூ இசட்4 கார் கொண்டுள்ளது. இது 340 ஹெச்பி ஆற்றலையும், 500 என்எம் டார்க் திறனையும் உற்பத்தி செய்கிறது. இது 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் அல்லது 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் உடன் வருகிறது. மேலும், வெறும் 4.5 வினாடிகளில் 0 முதல் 100 கிமீ/மணி வேகத்தை எட்டும் திறன் கொண்டது.

10.25 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், 12 ஸ்பீக்கர் ஹர்மன் கார்டன் சரவுண்ட் சவுண்ட் சிஸ்டம், டூயல்-ஜோன் க்ளைமேட் கண்ட்ரோல், பிரீமியம் லெதர் அப்ஹோல்ஸ்டரி, பிஎம்டபிள்யூ லைவ் காக்பிட், ஹெட்ஸ்-அப் டிஸ்ப்ளே (HUD), டச் கண்ட்ரோலர் உடன் கூடிய பிஎம்டபிள்யூ ஐ-டிரைவ் (iDrive), வயர்லெஸ் ஆப்பிள் கார்ப்ளே, 3டி நேவிகேஷன், க்ரூஸ் கண்ட்ரோல் மற்றும் அடாப்டிவ் ஹெட்லேம்ப்கள் போன்ற அம்சங்களுடன் பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் உயர்தர கைவினைத்திறனை இசட்4 காரின் உட்புறம் வெளிப்படுத்துகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: கிரிக்கெட் வீரர் யுஸ்வேந்திர சஹாலின் இந்த சமீபத்திய பிஎம்டபிள்யூ கார் கொள்முதல் கிரிக்கெட்டுக்கு அப்பால், அவரது ஆட்டோமொபைல்கள் மீதான ஆழமான காதலையும் நிரூபிக்கிறது. சமீப காலமாக சர்வதேச கிரிக்கெட் களத்தில் அதிகமாக பார்க்க முடியாத இவரை வருகிற 2026 ஐபிஎல் (IPL) கிரிக்கெட் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக நீண்ட இடைவெளிக்கு பின் பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications









