கல்யாணம் ஆன சில தினங்கள்தான் ஆச்சு அதுக்குள்ள இப்படியா!! கட்டின மனைவியை கண் கலங்க வைத்த பிரபல நடிகர்!
கடந்த ஏழு ஆண்டுகளாக டேட்டிங் செய்து வந்த நிலையில் திருமணத்தின் வாயிலாக கணவன் மனைவியாக மாறியவர்கள் இந்தி நடிகை சோனாக்ஷி சின்ஹாவும், நடிகர் ஜாகீர் இக்பாலும். இந்த பாலிவுட் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களின் திருமணம் சமீபத்திலேயே நடைபெற்றது. இவர்கள் இருவரும் சமீபத்திலேயே திருமணம் வாழ்க்கையில் அடியெடுத்து வைத்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது. தற்போது, இவர்களின் திருமணம் பற்றிய பேச்சே பாலிவுட் திரையுலகம் முழுக்க நிரம்பி வழிந்துக் கொண்டிருக்கின்றது. இந்த மாதிரியான சூழலிலேயே சோனாக்ஷி சின்ஹாவும், ஜாகோ இக்பாலும் மீண்டும் தலைப்பு செய்திகளில் இடம் பெற தொடங்கி இருக்கின்றனர்.
ஜாகீர் இக்பால், சோனாக்ஷி சின்ஹாவிற்கு பிஎம்டபிள்யூ ஐ7 (BMW i7) கார் மாடலை வாங்கிக் கொடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த கார் மாடலின் ஒரே ஒரு யூனிட்டின் விலை மட்டுமே ரூ. 2 கோடிக்கும் அதிகம் ஆகும். இத்தகைய அதிக விலைக் கொண்ட சொகுசு காரை வாங்கிக் கொடுத்ததனாலேயே இவர்கள் தற்போது மீண்டும் டிரெண்டிங் நபர்களாக மாறி இருக்கின்றனர்.

மேலும், இந்த விலை உயர்ந்த கார் பரிசு சோனாக் சின்ஹாவிற்கு ஆனந்த் கண்ணீரை ஏற்படுத்தியதாகக் கூறப்படுகின்றது. பிஎம்டபிள்யூ ஐ7 ஓர் சொகுசு அம்சங்கள் நிறைந்த செடான் ரக எலக்ட்ரிக் காராகும். திரை பிரபலங்கள் மத்தியில் பிரபலமானது கார் மாடலாக இது மாறி வருகின்றது.
இதை உறுதிப்படுத்தும் விதமாக தற்போது சோனாக்சிக்கு இந்த கார் பரிசளிக்கப்பட்ட சம்பவம் அரங்கேறி இருக்கின்றது. பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் 7 சீரிஸ் சொகுசு கார் மாடலின் எலெக்ட்ரிக் வெர்ஷனே ஐ7 ஆகும். இந்த காரின் தயாரிப்பிற்கு பயன்படுத்தப்படும் அதே தளமே இதற்கும் பயன்படுத்தப்படுகின்றது.
இருப்பினும், தனித்துவமான கிரில், லைட் செட்-அப் மற்றும் நீல நிற அலங்கார அணிகலன்கள் ஆகியவற்றை வழக்கமான 7 சீரிஸ் இடம் மாறுபட்டுக் காட்சியளிக்க வேண்டும் என்பதற்காக எலெக்ட்ரிக் வெர்ஷனில் பிஎம்டபிள்யூ வழங்கி இருக்கின்றது. இதுபோன்று இன்னும் ஒரு சில தனித்துவமான அம்சங்களை இந்த எலெக்ட்ரிக் கார் மாடலில் நம்மால் பார்க்க முடிகின்றது.
அதில் ஒன்றாகவே பெரிய கிட்னி கிரில்லிற்கு அடுத்தபடியாக ஐ (i) எனும் பேட்ஜ் உள்ளது. இந்த காரில் நான்கு சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக்குகள் வழங்கப்பட்டு இருக்கின்றன. பாதுகாப்பான பிரேக்கிங்கை வழங்க வேண்டும் என்கிற நோக்கிலேயே இத்தகைய நடவடிக்கையை பிஎம்டபிள்யூ மேற்கொண்டுள்ளது. மேலும், அடாஸ் தொழில்நுட்பம், சென்சார்கள், ரேடார்கள் மற்றும் கேமராக்கள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன.
மேலும், இதன் கவர்ச்சியான லுக்கிற்காக 21 அங்குல அலாய் வீல்களும் வழங்கப்டுள்ளன. இதுதவிர, இந்த செடான் ரக எலெக்ட்ரிக் காரில் தானியங்கி கதவுகளே வழங்கப்பட்டுள்ளன. அவை ஒரு பொத்தானை அழுத்தினாலே தானாக திறந்துவிடும். தன்னுடைய மனைவி கதவை திறக்கக் கூட கஷ்டப்படக் கூடாது என்பதற்காகவே இத்தக சிறப்பம்சங்களை தாங்கிய எலெக்ட்ரிக் காரை சோனாக்ஷிக்கு ஜாகீர் வாங்கிக் கொடுத்திருக்கின்றார்.
இந்த காரின் உட்பக்கத்தில் இன்ஃபோடெயின்மென்ட் மற்றும் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டருக்காக வளைவான டிஸ்பிளே வழங்கப்பட்டு இருக்கின்றது. மேலும் 31.3 அங்குல 8கே சினிமா உணர்வை வழங்கும் வசதிக் கொண்ட திரை ஒன்றும் இந்த காரில் கொடுக்கப்பட்டு உள்ளது. இத்துடன், காரின் பின் கதவுகளில் காலநிலை கட்டுப்பாடுகள் மற்றும் இருக்கைகளை கட்டுப்படுத்த 5.5 அங்குல தொடுதிரையும் கொடுக்கப்பட்டு இருக்கும்.
இதுதவிர, மல்டி ஜோன் காலநிலை கட்டுப்பாடு பிஎம்டபிள்யூ ஐ7 சொகுசு செடான் எலெக்ட்ரிக் காரில் வழங்கப்பட்டு இருக்கின்றது. மேலும், அதிக பிரீமியமான ரைடு அனுபவத்தை பெறும் நோக்கில் இந்த காரின் இருக்கைகளை லெதரால் பிஎம்டபிள்யூ அழகுப்படுத்தி இருக்கின்றது. இத்துடன், ஞாபக திறன் கொண்ட மின்சாரத்தால் இயங்கக்கூடியதாகவும், மசாஜ் செய்யும் வசதிக் கொண்டதாகவும் இந்த இருக்கையை பிஎம்டபிள்யூ தயார் செய்திருக்கின்றது.
இந்தியாவில் பிஎம்டபிள்யூ ஐ7 எலெக்ட்ரிக் கார் ஒரே ஒரு வேரியண்டில் மட்டுமே விற்பனைக்குக் கிடைக்கின்றது. ஐ7 எக்ஸ்டிரைவ் 60 (i7 xDrive 60)தான் அது ஆகும். இது அதிகபட்சமாக 544 பிஎஸ் மற்றும் 745 என்எம் டார்க்கை வெளியேற்றும். இத்துடன், அதிகபட்ச ரேஞ்ஜ் திறனை வழங்க வேண்டும் என்பதற்காக 101.7 kWh லித்தியம்-அயன் பேட்டரி பேக்கும் இதில் வழங்கப்பட்டு இருக்கின்றது.
இதை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 591 கிமீ முதல் 625 கிமீ வரை பயணிக்க முடியும். ஏசி மற்றும் டிசி என இரண்டிலும் இந்த காரை சார்ஜ் செய்துக் கொள்ள முடியும். குறிப்பாக, 195 kW டிசி சார்ஜரைப் பயன்படுத்தும்போது 34 நிமிடங்களிலே 10 சதவீதத்தில் இருந்து 80 சதவீத சார்ஜை ஏற்றிக் கொள்ள முடியும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் பிஎம்டபிள்யூவின் இந்த தயாரிப்பிற்கு என்றே தனி ரசிகர்கள் பட்டாளம் உண்டு. குறிப்பாக, திரைத்துறையினர் பலர் இந்த கார் மாடலை பயன்படுத்தி வருகின்றனர். அந்தவகையில், ரேகா, ஜாக்குலின் பெர்னாண்டஸ், அஜய் தேவ்கன், கிம் ஷர்மா மற்றும் சேகர் சுமன் போன்ற பிரபலங்கள் பலர் இந்த சொகுசு செடான் காரை பயன்படுத்தி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications








