மொஹமத் சிராஜ் கூட டேட்டிங் போனதா சொல்றாங்களே அந்த பெண்ணா இவங்க! வந்திறங்கிய கார பாத்து எல்லாம் ஆடி போயிட்டாங்க
முன்னணி கிரிக்கெட் விளையாட்டு வீரரான மொஹமத் சிராஜ் உடன் டேட்டிங் சென்றதாக சொல்லப்படும் பெண், விலை உயர்ந்த ஆடம்பர காரில் வந்து அனைவரையும் கிரங்கிப் போக செய்திருக்கின்றார். ஸனாய் போஸ்லே, இவரே அந்த பெண் ஆவார். இவருக்கும், மொஹமத் சிராஜ்-க்கும் இடையிலேயே ரகசிய உறவு இருப்பதாக பலரும் வதந்தியாக பேசி வந்தனர். இந்த நிலையிலேயே, தங்களுக்கு இடையே இருப்பது என்ன மாதிரியான உறவு என்பதை வெளிப்படையாக சமீபத்தில் போட்டு உடைத்திருந்தார் ஸனாய் போஸ்லே.
மொஹமத் சிராஜ் தன்னுடைய 'டியர் பிரதர்' என்கிற பதிவை வெளியிட்டே அவர் தனக்கும், சிராஜ்க்கும் இடையே இருக்கும் உறவு பற்றிய தகவலை கூறியிருந்தார். இந்த பதிவை மொஹமத் சிராஜ்-ம் ஷேர் செய்திருந்தார் என்பது கவனிக்கத்தகுந்தது. ஸனாய் போஸ்லேவின் இந்த பதிவு பலரின் மூக்கை உடைக்கும் வகையில் அமைந்தது.

குறிப்பாக, இவர்களை பற்றி தவறாக புரளி பேசிக் கொண்டிருந்தவர்களின் வாயை அடைக்கும் வகையில் இந்த பதிவு அமைந்தது. இத்தகைய செயலைத் துணிச்சலாகச் செய்த ஸனாஸ் போஸ்லேவே தற்போது ஆடம்பர காரில் வந்து தன்னுடைய ரசிகர்களின் மனதைக் கவர்ந்திருக்கின்றார். ஸனாய் போஸ்லே, இவரை பற்றி அறியாத பாலிவுட் பட பிரியர்களே இருக்க முடியாது.
இவர் ஓர் பாடகி ஆவார். அதுமட்டுமல்ல புகழ்பெற்ற கதக் நடனக் கலைஞராகவும் இவர் இருக்கின்றார். மேலும், இவர் புகழ்பெற்ற பாடகி ஆஷா போஸ்லேவின் பேத்தி என்பது இங்கே குறிப்பிடத்தகுந்தது. இவரின் திறனும், இவருடைய அப்பாவான ஆனந்த் போஸ்லே-வின் திறனும் அப்படியே ஸனாய் போஸ்லேவிற்கும் உள்ளது.
இதனால்தான் பலரும் இவரின் குரலுக்கு அடிமையாக உள்ளனர். அப்படியான ஓர் நபரே மொஹமத் சிராஜ் ஆவார். இவரின் பாடலுக்கு தீவிர ஃபேன் என்பதாலேயே அவருடன் நெருங்கி பழகி வருகின்றார், சிராஜ். ஓர் அண்ணன் தங்கை மாதிரியான உறவே அவர்களிடத்தில் உள்ளது. இந்த நிலையிலேயே ஸனாய் ஆடம்பர காரில் பயணிக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகிக் கொண்டிருக்கின்றது.
ஸனாய் போஸ்லே பயன்படுத்தி இருப்பது மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்ஏ 200 (Mercedes Benz GLA 200) சொகுசு கார் மாடல் ஆகும். இந்தியாவில் இந்த கார் மாடலின் ஒரே ஒரு யூனிட்டே ரூ. 50.80 லட்சத்திற்கும் அதிகமான விலையில் விற்கப்படுகின்றது. இது வெறும் ஆரம்ப நிலை தேர்வின் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும்.

அதேவேளையில், இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும் பென்ஸ் நிறுவனத்தின் விலை குறைவான எஸ்யூவி ரக கார் மாடலும் இதுவே ஆகும். இந்திய பணக்காரர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுக் கொண்டிருக்கும் ஆடம்பர காராகவும் இது காட்சியளிக்கின்றது. இதற்கு ஆடம்பர அம்சங்களையும், பாதுகாப்பு வசதிகளையும் மிக தாராளமாக இந்த கார் மாடல் கொண்டிருப்பதே காரணம் ஆகும்.
பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டு விதமான எஞ்சின் ஆப்ஷன்களில் இந்த கார் மாடல் சந்தையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. அதாவது, 160 பிஎச்பி மற்றும் 270 என்எம் டார்க் ஆற்றலை உருவாக்கும் திறன் 1.0 லிட்டர் பெட்ரோல் மற்றும் 187 பிஎச்பி மற்றும் 400 என்எம் டார்க் ஆற்றலை உருவாக்கும் திறன் கொண்ட 2.0 லிட்டர் டீசல் ஆகிய மோட்டார் ஆப்ஷன்களே இந்த காரில் வழங்கப்படுகின்றன.
இதில் பெட்ரோல் லிட்டர் ஒன்றிற்கு 17.4 கிமீ மைலேஜையும், டீசல் லிட்டர் ஒன்றிற்கு 18.9 கிமீ மைலேஜையும் வழங்கும் என்பது கவனிக்கத்தகுந்தது. இந்த காரின் பிக்-அப் திறனும் நம்மை மிரட்டும் வகையிலேயே இருக்கின்றது. தெளிவாகச் சொல்ல வேண்டும் என்றால் மெர்சிடிஸ் பென்ஸின் இந்த கார் மாடலின் பெட்ரோல் மோட்டார் கொண்ட ஆப்ஷனுக்கு பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ எனும் வேகத்தை வெறும் 8.9 செகண்டுகளே போதுமானதாக உள்ளது.
இதேபோல், இதன் டீசல் மோட்டாருக்கு பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிலோ மீட்டர் வேகத்தை எட்ட 7.5 செகண்டுகளே போதுமானதாக உள்ளது. ஆற்றலை உருவாக்குவதில் மட்டும் அல்ல சிறப்பம்சங்கள் மற்றும் லக்சூரி வசதிகளைத் தாங்கியிருப்பதிலும் பென்ஸ் ஜிஎல்ஏ 200 கார் மாடல் மிகவும் அசத்தலான வாகனமாக உள்ளது.
அந்தவகையில், பென்ஸ் ஜிஎல்ஏ கார் மாடலில் வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் பிளே ஆகியவற்றை சப்போர்ட் செய்யும் வசதிக் கொண்ட திரை, டிஜிட்டல் சாவி, சாவியே இல்லாமல் பயணிக்கும் வசதி மற்றும் கைகளின் உதவியே இல்லாமல் திறக்கும் வால் பகுதி கதவு உள்ளிட்ட வசதிகளை இந்த காரில் வழங்கி இருக்கின்றனர்.
இதுமட்டுமல்ல ஆக்டீவ் பார்க் அசிஸ்ட், அடாப்டீவ் ஹை பீம் அசிஸ்ட், 360 டிகிரி பார்வை திறன் கொண்ட கேமிரா, 7 ஏர்பேக்குகள், காற்றே இல்லை என்றால் இயங்கும் திறன் கொண்ட டயர்கள் மற்றும் டயர் பிரஷ்ஷர் மானிட்டரிங் சிஸ்டம் உள்ளிட்டவற்றையும் இந்த காரில் பென்ஸ் வழங்குகின்றது.
அழகான தோற்றத்தைத் தாங்கியிருப்பதிலும் இந்த கார் மாடல் சிறந்த வாகனமாக உள்ளது. குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் என்றால் ஜிஎல்ஏ 200 கார் மாடலுக்கு அழகுச் சேர்க்கும் விதமாக பல்வேறு சிறப்பு அணிகலன்களை பென்ஸ் வழங்கி இருக்கின்றது. கவர்ச்சியான கிரில், முரட்டுத் தனமான பம்பர், கண் மற்றும் புருவத்தைப் பிரதிபலிக்கும் லுக் கொண்ட ஹெட்லைட், பெரிய காற்றை உள்வாங்கும் துலை ஆகியவற்றையே இந்த கார் கொண்டுள்ளது.
இதுமட்டுமல்ல காரின் பின் பக்கமும் மிகவும் கவர்ச்சியானதாக உள்ளது. இதேபோல், 18 அங்குலம் மற்றும் 19 அங்குலம் இரண்டு விதமான அலாய் வில் ஆப்ஷன்களும் இந்த காரில் வழங்கப்படுகின்றன.இத்தகைய காரிலேயே இந்தி பட பாடகி ஸனாய் தற்போது காட்சித் தந்திருக்கின்றனர். இதுகுறித்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகிக் கொண்டிருக்கின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஸனாய் போஸ்லே பாடல் மற்றும் கதக் நடனம் இரண்டிற்கும் பெயர்போனவராக இருக்கின்றார். குறிப்பாக, இவரின் குரலுக்கு மொஹமத் சிராஜ் மட்டுமல்ல முன்னணி பாலிவுட் திரை நட்சத்திரங்களும் மிகப் பெரிய ஃபேனாக இருக்கின்றனர். இந்த பாடகியின் வயது வெறும் 23 மட்டுமே ஆகும். இத்தகைய சிறிய வயதிலேயே நம்ப முடியாத உச்சத்தை அவர் திரை உலகில் அடைந்திருக்கின்றார். குறிப்பாக பலரின் மனம் கவர்ந்த பாடகியாகவும் அவர் மாறியுள்ளார்.


Click it and Unblock the Notifications








