நாலே நாலு படம்தான் நடிச்சிருக்காங்க! ஆனா காரோட விலை ஒன்னரை கோடிக்கும் மேல! இந்த பளிங்கு சிலை யார்னு தெரியுதா?

இந்தியாவை சேர்ந்த கோடீஸ்வரர்கள் மத்தியில் பிரபலமாக உள்ள கார்களில் ஒன்று மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்எஸ் (Mercedes Benz GLS). சொகுசு எஸ்யூவி (Luxury SUV) ரகத்தை சேர்ந்த இந்த கார், மொத்தம் 2 வேரியண்ட்களில் (Variants) கிடைக்கிறது. அவை ஜிஎல்எஸ் 450 4மேட்டிக் (GLS 450 4matic) மற்றும் ஜிஎல்எஸ் 450டி 4மேட்டிக் (GLS 450d 4matic) ஆகியவை ஆகும். இதில், ஜிஎல்எஸ் 450 4மேட்டிக் வேரியண்ட்டின் விலை 1.34 கோடி ரூபாய் ஆகவும், ஜிஎல்எஸ் 450டி 4மேட்டிக் வேரியண்ட்டின் விலை 1.39 கோடி ரூபாய் ஆகவும் உள்ளது.

இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) ஆகும். இவ்வளவு விலை உயர்ந்த காரை பாலிவுட் நட்சத்திரம் ஒருவர் தற்போது வாங்கியுள்ளார். அவர் ஜாரா கான் (Zara Khan) ஆவார். இங்கிலாந்து நாட்டில் பிறந்தவரான இவர், தற்போது பாலிவுட் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக உள்ளார்.

Zara Khan Buys Mercedes Benz GLS

நடிகை மற்றும் பாடகி போன்ற முகங்கள் இவருக்கு உண்டு. ஜாரா கான் குறும்படங்கள் உள்பட ஒட்டுமொத்தமாக 4 திரைப்படங்களில் மட்டுமே நடித்துள்ளார். ஆனால் ஏராளமான திரைப்படங்களில் இவர் பாடல்களை பாடியுள்ளார். அத்துடன் இவர் சினிமா மற்றும் விளையாட்டு பின்னணி கொண்ட குடும்பத்தில் இருந்து வந்தவர் ஆவார்.

இவர் தற்போது வாங்கியிருப்பது மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்எஸ் காரின் ஜிஎல்எஸ் 450 4மேட்டிக் வேரியண்ட் ஆகும். இதன் ஆன்-ரோடு விலை (On-Road Price) தோராயமாக 1.60 கோடி ரூபாய் வரும். இந்த காரில், 3.0 லிட்டர் 6 சிலிண்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.

Zara Khan Buys Mercedes Benz GLS SUV

அதிகபட்சமாக 381 பிஎஸ் பவர் மற்றும் 500 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய வகையில் இந்த இன்ஜின் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் உடன், 9 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. அத்துடன் 48V மைல்டு ஹைப்ரிட் தொழில்நுட்பமும் கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும் ஆல் வீல் டிரைவ் சிஸ்டமும் வழங்கப்பட்டுள்ளது. ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் கொடுக்கப்பட்டுள்ளதால், சவால் நிறைந்த கரடு முரடான நிலப்பரப்புகளிலும் இந்த காரை எளிதாக இயக்க முடியும். இந்த காரின் முன் பக்க டேஷ்போர்டில் தலா 12.3 இன்ச் அளவில் 2 திரைகள் வழங்கப்பட்டுள்ளன.

இதில் ஒன்று டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் ஆகவும், மற்றொன்று டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் ஆகவும் செயல்படும். அத்துடன் 5 ஸோன் க்ளைமேட் கண்ட்ரோல், 13 ஸ்பீக்கர் பர்ம்ஸ்டர் 3டி சவுண்ட் சிஸ்டம், ஆம்பியண்ட் லைட்டிங் மற்றும் பனரோமிக் சன்ரூஃப் உள்ளிட்ட வசதிகளும் (Features) இந்த காரில் வழங்கப்பட்டுள்ளன.

பாதுகாப்பை (Safety) பொறுத்தவரையில், 9 ஏர்பேக்குகள் மற்றும் அடாஸ் (ADAS - Advanced Driver Assistance Systems) பாதுகாப்பு தொகுப்பு போன்றவை எல்லாம் மிகவும் முக்கியமான வசதிகளாக உள்ளன. இது போன்ற காரணங்களால்தான், கோடீஸ்வரர்கள் பலரும் மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்எஸ் காரை விரும்பி வாங்குகின்றனர்.

பாலிவுட் நட்சத்திரம் ஜாரா கான் தற்போது மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்எஸ் காரின் ஜிஎல்எஸ் 450 4மேட்டிக் வேரியண்ட்டை வாங்கியிருப்பது தொடர்பான வைரல் வீடியோ (Viral Video) ஒன்று யூடியூப் (YouTube) தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது. இந்த வீடியோவை ஜாரா கானின் ரசிகர்கள் சமூக வலை தளங்களில் அதிகளவில் பகிர்ந்து வருகின்றனர்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: ஜாரா கான் வாங்கியுள்ள மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்எஸ் கார், பிஎம்டபிள்யூ எக்ஸ்7 (BMW X7) போன்ற கார்களுக்கு, மிகச்சிறந்த மாற்று ஆப்ஷனாக கருதப்படுகிறது. சொகுசான பயணங்களை எதிர்பார்க்கும் கோடீஸ்வரர்களுக்கு மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்எஸ் கார், நல்ல தேர்வாக இருக்கும் என்பது எங்கள் கருத்து.

More from DriveSpark

Article Published On: Monday, February 10, 2025, 12:41 [IST]
English summary
Zara khan buys mercedes benz gls worth rs 1 60 crore viral video all details here
மேலும்... #celebrity cars #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+