கார் இன்சூரன்ஸ் எடுக்கும் போது இதை சேர்த்து எடுப்பாங்க, பிரிமியம் கூடுனாலும் கவலைப்படமாட்டங்க ஏன் தெரியுமா?
இந்தியாவில் கார் வைத்திருக்கும் 95 சதவீதமான கார் உரிமையாளர்கள் ஜீரோ டிப்ரிஷியேஷன் இன்சூரன்ஸ் பாலிசியை தான் தேர்வு செய்கிறார்கள் என சமீபத்தில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் தெரிய தெரிவிக்கப்பட்டுள்ளது. பாலிசி பஜார் என்ற நிறுவனம் தான் இந்த ஆய்வை நடத்தியது. ஏன் கார் உரிமையாளர்கள் அதிகம் ஜீரோ டிப்ரிஷியேஷன் இன்சூரன்ஸ் பாலிசியை தேர்வு செய்கிறார்கள் என்ற விரிவான விபரத்தை காணலாம் வாருங்கள்.
பாலிசி பஜார் என்ற தனியார் நிறுவனம் சமீபத்தில் இந்தியாவில் வாகன இன்சூரன்ஸ் குறித்த ஆய்வு ஒன்றை நடத்தியது. இதில் இந்தியாவில் உள்ள 95 சதவீதமான கார் உரிமையாளர்கள் ஜீரோ டிப்ரிஷியேஷன் இன்சூரன்ஸ் பாலிசியை தான் தங்கள் காருக்கு பெறுகிறார்கள் என்பது தெரியவந்துள்ளது. மக்கள் மத்தியில் இந்த ஜீரோ டிப்ரிஷியேஷன் இன்சூரன்ஸ் பாலிசி பிரபலமாகியுள்ளது வெட்ட வெளிச்சம் ஆகியுள்ளது.

இதுகுறித்து பாலிசி பஜார் நிறுவனத்தின் மோட்டார் வாகன இன்சூரன்ஸ் பிரிவு தலைவர் நிதின் குமார் கூறும் போது: " ஜீரோ டிப்ரிஷியேஷன் முறையில் எடுக்கப்பட்ட இன்சூரன்ஸ் பாலிசிக்கு தான் அதன் கிளைம் செய்யும் போது அதிகமான பணம் கிடைக்கிறது. இதனால் கார் உரிமையாளர்கள் பலர் அந்த பாலிசியை தான் தேர்வு செய்கிறார்கள். அதிலும் குறிப்பாக 85% பாலிசியை வாங்கும் மக்கள் மூன்று ஆண்டுகளுக்கான பாலிசியை தான் பெறுகிறார்கள்.
ஜீரோ டிப்ரிஷியேஷன் இல்லாத இன்சூரன்ஸ் பாலிசியில் கிளைம் செய்தால் சராசரியாக ஒரு கிளைம்க்கு 13 முதல் 14 ஆயிரம் வரை கிளைம் கிடைத்து வந்தது. ஆனால் ஜீரோ டிப்ரிஷியேஷன் பாலிசி எடுத்த ஒரு வாடிக்கையாளர் கிளைம் கேட்டு சென்றால் அவருக்கு சராசரியாக 21 முதல் 22 ஆயிம் வரை கிளைம் கிடைக்கிறது. இதனால் மக்கள் மத்தியில் இந்த ஜீரோ டிப்ரிஷியேஷன் பாலிசி பிரபலமாகியுள்ளது.

இந்த பாலிசியை எடுத்துவிட்டு அதிகமாக கிளைம் செய்கிறார்களா என பார்த்தால் அப்படியும் இல்லை. முன்பு எப்படி கிளைம் ரேட் இருந்ததோ அதே ரேட் தான் தற்போதும் இருக்கிறது. இதனால் மக்கள் பாதுகாப்பு கருதி இந்த ஜீரோ டிப்ரிஷியேஷன் பாலிசியை அதிகம் தேர்வு செய்கின்றனர்.
மேலும் மக்கள் மத்தியில் உயர் ரக கார்களை வாங்கும் விருப்பம் அதிகமாக இருக்கிறது. இப்படியாக உயரக கார்களை வாங்குபவர்கள் அந்த காருக்கு எந்தவிதமான பிரச்சனையும் ஏற்பட்டு விடக்கூடாது என கருதி இந்த ஜீரோ டிப்ரிஷியேஷன் பாலிசியை தேர்வு செய்கின்றனர்" எனக் கூறினார்.

ஜீரோ டிப்ரிஷியேஷன் பாலிசி என்றால் என்ன?: ஒரு காரை நாம் புதிதாக வாங்கியதில் இருந்து தொடர்ந்து அதன் மதிப்பு குறைந்து கொண்டே தான் இருக்கும். காரில் பயன்படுத்தப்படும் பொருட்கள் நாளாக நாளாக அதன் தரத்தை இழப்பதால் காரின் மதிப்பும் வெகுவாக குறைகிறது.
இதனால் வழக்கமாக காருக்கு இன்சூரன்ஸ் செய்திருந்தால் அந்தக் கார் புதிதாக வாங்கப்பட்டு ஓர் ஆண்டுக்குப் பிறகு விபத்தில் சிக்கினால் அந்த ஒரு ஆண்டுக்கான தேய்மான கட்டணம் கணக்கிடப்பட்டு அது காருக்கான இன்சூரன்ஸ் தொகையிலிருந்து கழிக்கப்படும். பின்னர் அந்த தொகை தான் இன்சூரன்ஸ் பணமாக கருதப்பட்டு அதற்கு தகுந்தார் போல் கிளைம் கிடைக்கும்.
இந்த இடத்தில் தான் ஜீரோ டிப்ரிஷியேஷன் என்ற ஒரு ஆட் ஆன் பேக்கேஜ் இன்சூரன்ஸ் நிறுவனங்களால் சேர்க்கப்படுகிறது. அதன்படி ஏற்கனவே உள்ள இன்சூரன்ஸில் சற்று பிரீமியம் தொகையை கூடுதலாக கட்டினால் இந்த ஜீரோ டிப்ரிஷியேஷன் கவர் செய்யப்படும்.ஜீரோ டிப்ரிஷியேஷன் என்றால் காரின் முன் பக்க பம்பரிலிருந்து பின்பக்க பம்பர் வரையிலான பாதுகாப்பு என அர்த்தம்.
இந்த முறையில் ஒருவர் கார் இன்சூரன்ஸ் எடுத்திருந்தால் அவர் காரின் மதிப்பு கிளைம் செய்யப்படும் போது தேய்மானம் என்ற விஷயம் கழிக்கப்படாது. அதாவது கார் வாங்கும் போது அவர் என்ன தொகைக்கு இன்சூரன்ஸ் எடுத்திருந்தாரோ அதே தொகை தான் கிளைம் செய்யும் போதும் கணக்கிடப்படும் கழிவுகள் எதுவும் எடுத்துக்கொள்ளப்படாது.
இதனால் நமக்கு என்ன லாபம்: நீங்கள் ஜீரோ டிப்ரிஷியேஷன் ஆப்ஷன் இல்லாமல் இன்சூரன்ஸ் எடுத்திருந்தால் ஒருவேளை உங்கள் வாகனம் விபத்தில் சிக்கி சுமார் 10,000 ரூபாய் அளவுக்கு அதை ரிப்பேர் செய்ய செலவாகிறது என வைத்துக்கொள்வோம். இந்த பணத்திற்காக நீங்கள் இன்சூரன்ஸ் பணம் கேட்டால்.
நீங்கள் கிளைம் செய்யும்போது அவர்கள் நீங்கள் கார் வாங்கிய காலம் மற்றும் விபத்து நடந்த காலம் ஆகியவற்றை கணக்கிட்டு அதற்கு ஒரு 20 சதவீதம் தேய்மானம் போட்டிருந்தால் உங்களுக்கு 10,000 ரூபாய்க்கு பதிலாக 8000 ரூபாய் தான் கைக்கு கிடைக்கும். நீங்கள் கையில் இருந்து 2000 ரூபாய் செலவு செய்ய வேண்டியது இருக்கும்.
ஆனால் ஜீரோ டிப்ரிஷியேஷன் முறையில் நீங்கள் இன்சூரன்ஸ் எடுத்திருந்தால் உங்களுக்கு இந்த தேய்மானம் என்பது கணக்கிடப்படாது. ரிப்பேருக்கு உண்டான முழு செலவும் இன்சூரன்ஸிலேயே கவர் செய்யப்படும். இதனால் நீங்கள் காருக்கு ரிப்பேர் செலவான ரூபாய் 10 ஆயிரத்தையும் இன்சூரன்ஸ் மூலம் பெற்றுக் கொள்ள முடியும்.
கவனத்தில் கொள்ள வேண்டியவை: ஜீரோ டிப்ரிஷியேஷன் என்பது புதிய கார் வாங்கப்பட்டு ஐந்து ஆண்டுகள் அல்லது ஏழு ஆண்டுகள் வரை தான் எடுத்துக் கொள்ள முடியும். இந்த முறையில் நீங்கள் இன்சூரன்ஸ் எடுக்கும் போது அதற்கு செலுத்த வேண்டிய பிரிமியம் தொகை சற்று அதிகமாக இருக்கும்.
பிரீமியம் தொகை என்பது நீங்கள் எவ்வளவு பணத்திற்கு இன்ஸ்சூர் செய்கிறீர்கள் என்பதை பொறுத்து மாறுபடும். வழக்கமான இன்சூரன்ஸ் பிரீமியத்தை விட ஜீரோ டிப்ரிஷியேஷன் இன்சூரன்ஸ் பிரீமியம் 20% வரை அதிகமாக இருக்க வாய்ப்புள்ளது. அதேபோல பழைய காருக்கு நீங்கள் மீண்டும் ஜீரோ டிப்ரிஷியேஷன் இன்சூரன்ஸ் எடுத்தால் அதன் பிரீமியம் அதிகமாக வாய்ப்பு உள்ளது.
மேலும் இன்சூரன்ஸ் எடுக்கும் வாகன உரிமையாளர் இருக்கும் இடத்தை பொருத்தும் பிரீமியம் தொகை அதிகமாக வாய்ப்பு உள்ளது. அதிக விபத்துக்குள்ளாகும் சாலையில் அவர் வீடு இருந்தாலோ அல்லது அடிக்கடி இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்படும் பகுதியில் அவர் இருந்தாலும் அவர் அவருக்கு இன்சூரன்ஸிற்கான ப்ரீமியம் தொகை அதிகமாக இருக்கும்.
பொதுவாக ஒரு பாலிசி ஆண்டில் இரண்டு முறை இன்சூரன்ஸ் பணத்தை கிளைம் செய்து கொள்ளலாமா? இப்படியான எந்த கணக்கும் கிடையாது எப்பொழுது வேண்டுமானாலும் இன்சூரன்ஸ் பணத்தை பெற்றுக் கொள்ள முடியும். பல ஜீரோ டிப்ரிஷியேஷன் இன்சூரன்ஸ் ப்ரீமியம் தொகை அதிகமாக இருந்தாலும் அதையே விரும்பி தேர்வு செய்கின்றனர்.
டிரைவிங் ஸ்பார்க் கருத்து: கார் வாங்கும் பலர் காரை ஒரு பொருளாக கருதாமல் தங்கள் வீட்டின் ஒரு உறுப்பினராகவே கருதுகின்றனர். அதன் மீது அதிக பாசம் வைக்கின்றனர். இதனால் அதற்கு ஏதாவது பிரச்சனை ஏற்பட்டால் அதை உடனே சரி செய்ய வேண்டும் என துடிக்கின்றனர். ஆனால் கையில் பணம் இல்லாமல் போக இது அவர்களுக்கு மன கஷ்டத்தை ஏற்படுத்துகிறது.
இந்த ஜீரோ டிப்ரிஷியேஷன் பாலிசி இருந்தால் அவர்கள் காரை எப்பொழுதும் புதிது போல வைத்துக் கொள்ள முடியும். பணம் பற்றி பெரிதாக கவலைப்பட வேண்டிய தேவை இல்லை. விபத்து நேர்ந்தாலும் எந்த பிரச்சினையும் இல்லாமல் இவர்கள் இன்சூரன்ஸ் பணத்தை பெற்றுக் கொள்ள முடியும். சொகுசு கார்கள் மற்றும் அதிக விலை கொண்ட கார்களுக்கு இந்த இன்சூரன்ஸ் பாலிசி நிச்சய பலன் உள்ளதாக இருக்கும்.


Click it and Unblock the Notifications
