சென்னையில 6 நாளா ஒரு விபத்து கூட நடக்கல! போலீசாரின் ஐடியா ஒர்க்அவுட் ஆகிடுச்சு!

சென்னையில் இந்த ஆகஸ்ட் மாதம் 6 நாட்கள் ஒரு விபத்து கூட நிகழாத சம்பவம் நிகழ்ந்துள்ளது. சென்னை பெருநகர போக்குவரத்து போலீசாரின் பெரும் முயற்சியால் இந்த விழிப்புணர்வு மக்களிடம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து சென்னை போலீசார் எடுத்த முயற்சி என்ன எந்த அளவுக்கு விபத்து தற்போது குறைந்துள்ளது என்ற விரிவான விவரங்களை காணலாம் வாருங்கள்.

சென்னை பெருநகர போலீசார் சென்னை முழுவதும் நடக்கும் விபத்துகளின் எண்ணிக்கையை குறைப்பதற்காக ஒரு புதிய யுக்தி ஒன்றை கையில் எடுத்தனர். அதன்படி "0 இஸ் குட்" என்ற பெயரில் ஒரு புதிய முன்னெடுப்பை அறிவித்தனர். அதன்படி சென்னையில் அதிகமாக வாகனம் மட்டும் வாகன ஓட்டிகள் மத்தியில் விபத்து ஏற்படாமல் தடுப்பதற்கு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தினார். இதன் மூலம் விபத்துகளின் எண்ணிக்கையை குறைக்க முடிவு செய்தார்கள்.

zero is good campaign

அதன்படி சென்னை போலீசார் அதிக அளவில் வாகனம் ஓட்டும் பஸ் ஓட்டுநர்கள் கேப் ஓட்டுநர்கள் டெலிவரி ஏஜெண்டுகள் உள்ளிட்ட பலரிடம் இந்த குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள். இதன் மூலம் சென்னையில் ஏற்படும் விபத்துகளின் எண்ணிக்கை குறையும் என கணக்கிட்டார்கள். அதற்காக கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்திலேயே இந்த விழிப்புணர்வுகள் துவங்கப்பட்டது.

தற்போது இந்த விழிப்புணர்வு முயற்சி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றுள்ளதாக சென்னை பெருநகர போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர். அதன்படி இந்த மாதத்தில் ஆறு நாட்கள் ஒரு விபத்து கூட நடக்காத நாட்களாக இருந்துள்ளதாக தெரிவித்துள்ளார்கள். மேலும் இந்த மாதம் நடந்த விபத்துகளின் எண்ணிக்கையை கணக்கிடும்போது கடந்த ஆண்டு இதே மாதம் நடந்த விபத்துகளின் எண்ணிக்கையை விட மிக குறைவாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்கள்.

zero is good campaign

சென்னை பெருநகர போலீசார் அளித்துள்ள தகவலின் படி இந்த ஆகஸ்ட் மாதம் இதுவரை 56 விபத்துக்கள் மட்டுமே பதிவாகியுள்ளதாக தெரிவித்துள்ளார்கள். இதுவே கடந்த 2023ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மொத்தம் 146 விபத்துக்கள் நிகழ்ந்துள்ளன. அதை ஒப்பிடும்போது தற்போது 61.6 சதவீதம் அளவிற்கு விபத்து எண்ணிக்கை குறைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்கள். இது மிகப்பெரிய சாதனையாக பார்க்கப்படுகிறது.

மேலும் சென்னை பெருநகர போலீசார் விபத்து ஏற்படுத்தாத எம்டிசி டிரைவர்களுக்கு விருதுகளை வழங்கினார்கள். இதுபோக கேப் டிரைவர்கள், டெலிவரி ஏஜெண்டுகள், மாணவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருக்கு இது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள். கடந்த மூன்று வாரமாக இந்த முன்னெடுப்பு மிகப்பெரிய அளவில் சமூக வலைதளங்களில் பேசப்பட்டு வருகிறது.

zero is good campaign

மேலும் இதுகுறித்து ஆன்லைனில் இன்ஸ்டாகிராம் ரீல் போட்டியும் நடந்தது. இந்த ரீல் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு ரூபாய் 3 லட்சம் வரை பரிசுகள் வழங்கப்பட்டன. அதன்படி அதிக இன்ஃப்ளூயன்ஸ் செய்ததற்காக பிரவீன் குமார் என்பவருக்கு ரூபாய் 2 லட்சமும் சிறந்த கிரியேட்டர்காக சதீஷ் என்பவருக்கு ரூபாய் ஒரு லட்சமும், சிறந்த கேட்டலிஸ்ட் என்பவர்க்காக சத்யஸ்ரீ என்பவருக்கு ரூபாய் 50 ஆயிரம் பரிசு வழங்கப்பட்டது.

சாலையில் செல்லும் போது விபத்து ஏற்படுத்தாமல் பயணம் செய்ய வேண்டியது மிக முக்கியமாக இருக்கிறது. சாலை விபத்துக்கள் பலரது உயிரை பலி வாங்கக் கூடிய அளவுக்கு மிக மோசமான விபத்துகளாக இருக்கிறது. இதனால் சாலையில் எப்பொழுதும் கவனமாக இருக்க வேண்டும். சாலையில் பயணம் செய்யும்போது சாலை விதிகளை பின்பற்றி பயணம் செய்ய வேண்டும். அப்பொழுதுதான் விபத்துகளை தவிர்க்க முடியும்.

ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் நிகழும் சாலை விபத்துகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த எண்ணிக்கையை குறைப்பதற்காக மத்திய மாநில அரசுகள் பல்வேறு விதமான யுக்திகளை பின்பற்றி வருகிறார்கள். இது குறைந்தால் மட்டுமே இந்தியாவில் சாலை விபத்துகளின் ஏற்படும் மரணங்களை எண்ணிக்கையும் குறையும். இதில் மிகப்பெரிய பிரச்சினையாக இருக்கிறது.

ஒரு பக்கம் இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றாலும், மறுபக்கம் சாலை விதிமுறைகளை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இப்படியாக நடவடிக்கை எடுக்கப்படும் பட்சத்தில் அவர்கள் அடுத்த சாலை விதிமுறைகளை சரியாக பின்பற்றுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. இதற்கான முயற்சியையும் மத்திய மாநில அரசுகள் செய்து வருகின்றனர்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் சாலை விபத்துகளின் எண்ணிக்கையை குறைக்க வேண்டியது மிக முக்கியமான தேவையாக இருக்கிறது. இதற்கு இப்படியான முன்னெடுப்புகளை போலீசார் கையில் எடுத்துள்ளது நிச்சயம் பாராட்டத்தக்கது தான். இதன் மூலம் மிகப்பெரிய அளவில் விபத்து எண்ணிக்கை குறைந்துள்ளது. ஆச்சரியமான விஷயம் இதை தமிழகம் முழுவதும் செயல்படுத்த போலீசார் முயற்சி செய்ய வேண்டும்.

More from DriveSpark

Article Published On: Monday, August 26, 2024, 19:31 [IST]
English summary
Zero is good campaign chennai records six zero fatality days
மேலும்... #off beat #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X