2 சிங்கக்குட்டிகளை பெற்றெடுத்த அந்த தாய் இவங்க தானா!! பென்ஸ் காரில் தான் இனி எங்கு போக வேண்டுமென்றாலும்!

ஜெரோதா (Zerodha), பங்குச்சந்தையில் இந்தியாவின் மிக பெரும் பங்குத்தரகர் நிறுவனங்களுள் ஒன்று. இதனை யூனிகார்ன் நிறுவனம் என அழைக்கின்றனர். அதாவது, தற்சமயம் சுமார் 100 கோடிக்கும் அதிகமான சொத்து மதிப்பு கொண்ட இந்த நிறுவனத்தை 2010ஆம் ஆண்டில் நிகில் கமத் (Nikhil Kamath) மற்றும் நிதின் கமத் (Nithin Kamath) என்கிற சகோதரர்கள் தங்களது சொந்த உழைப்பில் நிறுவினர். அதாவது, இந்த நிறுவனத்தை நிறுவுவதற்காக வெளியில் இருந்து கடனுதவி பெறப்படவில்லை. இதுதான் உண்மையில் சொந்த காலில் நிற்பது போல...

இத்தகைய ஆன்லைன் ஸ்டாக் பிரோக்கர் நிறுவனத்தை நிறுவி, குறைந்த காலத்திலேயே விரைவாக கோடீஸ்வரர்களாகி உள்ள நிகில் கமத்- நிதின் கமத் சகோதரர்கள், ரூ.1.50 கோடி மதிப்பிலான சொகுசு காரை தங்களது அம்மா ரேவதி கமத்துக்கு வாங்கி கொடுத்து அழகு பார்த்துள்ளனர். இதனை ரேவதி கமத் தனது ஃபேஸ்புக் (Facebook) பக்கத்தில் படத்துடன் வெளியிட்டுள்ளார்.

zerodha founder presents mercedes-Benz gls

இந்த படத்தில், ஷோரூம் வளாகத்திற்கு வெளியே வைத்து பிராண்ட்-நியூ காரை ரேவதி கமத் அவர்களுக்கு டெலிவிரி வழங்கப்பட்டு இருப்பதை பார்க்க முடிகிறது. மேலும், பிரபலங்கள் யாரேனும் ஷோரூமுக்கு காரை டெலிவிரி பெற வந்தால், அவர்களுக்கு காரின் சாவியை, சாவி வடிவிலான பெரிய அட்டையில் வைத்து ஸ்டைலாக வழங்குவதை பார்த்திருக்கிறோம்.

ஆனால், ரேவதி கமத் அவர்களுக்கு அவ்வாறான அலங்காரங்கள் எதுவும் இல்லாமல், நேரடியாக காரின் சாவி வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் வேகமாக வளர்ந்துவரும் இரு தொழிலதிபர்களை பெற்றெடுத்தது மட்டுமில்லாமல், ரேவதி கமத் அவர்கள் நன்கொடையாளர் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர் ஆவார். இத்தகையவரின் கைகளுக்கு தற்போது சென்று சேர்ந்திருப்பது, மெர்சிடிஸ்-பென்ஸ் (Mercedes-Benz) நிறுவனத்தின் ஜி.எல்.எஸ் (GLS) கார் ஆகும்.

zerodha founder presents mercedes-Benz gls

இந்த பென்ஸ் காரை பற்றி சொல்ல வேண்டுமென்றால், இந்தியாவில் விற்பனை செய்யப்படும் மிக விலையுயர்ந்த கார்களுள் இதுவும் ஒன்றாகும். இன்னும் சொல்லப்போனால், எஸ்யூவி கார்களின் அரசன் என இதை சொல்கிறார்கள். 450 (பெட்ரோல்) மற்றும் 450டி (டீசல்) என 2 விதமான வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படும் ஜி.எல்.எஸ் காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் தற்சமயம் ரூ.1.33 கோடியில் இருந்து ரூ.1.39 கோடி வரையில் உள்ளன.

ஜி.எல்.எஸ் காரின் ஃபேஸ்லிஃப்ட் வெர்சன் ஆனது கடந்த 2024ஆம் ஆண்டில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. மொத்தம் 3 வரிசைகளை கொண்ட இந்த லக்சரி எஸ்யூவி காரில் முன்பக்கத்தில் 4-ஸ்லாட் கிரில், டி.ஆர்.எல் டிசைன், டெயில்லேம்ப்களில் பிளாக் பேட்டர்ன் சிக்னெச்சர் மற்றும் புதுமையான வடிவில் பம்பர்கள் உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன.

zerodha founder presents mercedes-Benz gls

21-இன்ச்சில் அலாய் சக்கரங்களை பெறும் இந்த கார் அப்சிடியன் கருப்பு, ஹை-டெக் சில்வர், சோடாலைட் ப்ளூ, செலெனைட் கிரே மற்றும் போலார் வெள்ளை என 5 விதமான கலர் ஆப்ஷன்களில் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், இந்த காரின் உட்புற கேபினும் கருப்பு, பீங்கான் மற்றும் பழுப்பு நிறங்களில் கிடைக்கிறது.

கடந்த ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்ட புதிய ஜிஎல்எஸ் காரினுள் புதிய ஸ்டேரிங் சக்கரம், லேட்டஸ்ட் எம்பக்ஸ் சிஸ்டம், 360-டிகிரி கேமரா, அடாஸ் மற்றும் ஆஃப்-ரோடு ஸ்க்ரீன்கள் உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன. ஜி.எல்.எஸ் காரின் மற்றொரு சிறப்பம்சம் என்னவென்றால், இதனை ஆஃப்-ரோடு பயணங்களுக்கு தாராளமாக கொண்டு செல்லலாம். சுமார் அரை மீட்டர் ஆழம் கொண்ட நீரில் கூட இந்த காரை இயக்கி செல்லலாம்.

Take a Poll

டிரைவ்ஸ்பார்க் கருத்து: சுருக்கமாக 'சாலையில் மிதக்கும் மினி கப்பல்' என அழைக்கப்படும் இந்த காரை தான் தற்போது ஜெரோதா நிறுவனர்கள் தங்களது அம்மாவுக்கு வாங்கிக் கொடுத்துள்ளனர். பெட்ரோல் மற்றும் டீசல் என 2 விதமான என்ஜின் ஆப்ஷன்களில் விற்பனை செய்யப்படும் மெர்சிடிஸ்-பென்ஸ் ஜிஎல்எஸ் காரை எந்த என்ஜின் உடன் ரேவதி கமத் பெற்றுள்ளார் என்பது தெரியவில்லை.

FAQs
மெர்சிடிஸ்-பென்ஸ் ஜிஎல்எஸ் காரில் பொருத்தப்படும் கியர்பாக்ஸ் என்ன?

9-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ்

மெர்சிடிஸ்-பென்ஸ் ஜிஎல்எஸ் காரின் என்ஜின் உடன் வழங்கப்படும் ஹைப்ரீட் சிஸ்டத்தின் பயன் என்ன?

இந்த பென்ஸ் காரில் வழங்கப்படும் இக்யூ பூஸ்ட் மைல்ட் ஹைப்ரீட் சிஸ்டம் கூடுதலாக 20 எச்பி மற்றும் 200 என்.எம் டார்க் திறனை வழங்கக்கூடியது

மெர்சிடிஸ்-பென்ஸ் ஜிஎல்எஸ் காரில் வழங்கப்படும் என்ஜின் ஆப்ஷன்கள் என்னென்ன?

3 லிட்டர் 6-சிலிண்டர் டர்போசார்ஜ்டு டீசல் என்ஜின் & 3 லிட்டர் 6-சிலிண்டர் பெட்ரோல் என்ஜின்

DriveSpark Automotive

More from DriveSpark

Article Published On: Monday, March 17, 2025, 18:33 [IST]
English summary
Zerodha founder presents mercedes benz gls luxury car to his mother
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X