தமிழகத்திற்கு வரும் ரூ1800 கோடி முதலீடு! சென்னையில் இந்த ஆலை வரப்போகுதா?

தமிழகத்தில் ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த இசட்எஃப் என்ற நிறுவனம் ஆலையை அமைத்து வாகனங்களுக்கான உதிரி பாகங்களை தயார் செய்ய முடிவு செய்துள்ளது. இதற்காக அந்நிறுவனம் ரூபாய் 1800 கோடியை முதலீடு செய்ய தமிழக அரசுடன் ஒப்பந்தம் கையெழுத்து செய்துள்ளது. இதை இரண்டு கட்டங்களாக முதலீடு செய்ய முடிவு செய்துள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த நிறுவனம் இசட்எஃப். இந்நிறுவனம் இந்தியாவில் ஆங்காங்கே ஆலைகளை அமைத்து வாகனங்களுக்கான உதிரி பாகங்களை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனம் ஏற்கனவே இந்தியாவில் பல்வேறு இடங்களில் ஆலையை அமைத்துள்ள நிலையில் தற்போது சென்னையில் தனது புதிய ஆலை ஒன்றை அமைக்க தமிழக அரசுடன் ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டுள்ளது.

zf new plant in chennai

இதன்படி சென்னையை சேர்ந்த நிறுவனம் ஏற்கனவே ரூபாய் 170 கோடியை முதலீடு செய்துள்ளது. இந்த ஆண்டு ரூ30 கோடியை முதலீடு செய்ய உள்ளது. இந்த முதலீட்டை வைத்து புதிய ஆலையை கட்டமைக்க முடிவு செய்துள்ளது. இதற்காக சென்னை ஒரகடம் பகுதியில் மொத்தம் 44 ஏக்கர் நிலம் இந்த நிறுவனத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் ரோட்டிற்கு ஒரு புறம் 26 ஏக்கரும் ரோட்டிற்கு மறுபுறம் நேர் எதிரில் 18 ஏக்கரும் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளன.

இங்கு தனது ஆலைகளை அமைத்து இந்த ஆண்டு இறுதிக்குள் அங்கு தயாரிப்பு பணிகளை துவங்க அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. இந்த ஆலை நிறுவனத்தின் 19 ஆவது ஆலையாகும். இந்த ஆலையில் 80 சதவீதம் பெண்களை பணியமர்த்த இந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதனால் அப்பகுதியில் உள்ள பலருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அமைக்க போகும் இந்த ஆலையில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான உதிரி பாகங்களை தயாரிக்க உள்ளது. முக்கியமாக எலெக்ட்ரிக் கம்ப்ரஸர்களை தயாரிக்கிறது. இதுபோக எலெக்ட்ரானிக் பிரேக் சிஸ்டம் என்ற ஏபிஎஸ் பிரேக்வுடன் இணைந்து செயல்படும் கருவியையும் தயாரிக்கிறது. இதுபோக ஏஎஸ்பி கேட்ரேஜ், ஹைட்ராலிக் இஎஸ்பி, வீல் எண்டு சொல்யூஷன், டிஜிட்டல் எஃப்பிவி, ஏடிபி, சென்ட்ரல் டிரைவ், இபிபி உள்ளிட்ட கருவிகளை தயாரிக்கிறது.

இந்நிறுவனம் கடந்த 10ஆண்டுகளாக இவ்வாறான கருவிகளை தயாரித்து அனுபவம் பெற்ற நிறுவனமாக இருக்கிறது. இப்படியாக இங்கு தயாரிக்கப்படும் கருவிகள் இந்தியாவில் மட்டுமல்லாமல் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்த ஆலை மூலம் அந்நிறுவனம் இந்தியாவில் தனது வருமானத்தை அதிகப்படுத்த திட்டமிட்டுள்ளது. தற்போது கடந்த 2023-ம் ஆண்டு ரூபாய் 32 கோடி வருமானமாக ஈட்டிய அந்நிறுவனம் அடுத்த 2024-ம் ஆண்டு இறுதியில் ரூபாய் 100 கோடி ரூபாயை லாபமாக ஈட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இங்கு தயாரிக்கப்படும் இந்த உதிரி பாகங்கள் பெரும்பாலும் ஐரோப்பிய யூனியன் மற்றும் சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை இந்தியாவில் இசட்எஃப் நிறுவனம் ரூபாய் 3500 கோடியை முதலீடாக கொண்டு வந்துள்ளது. இதன் மூலம் 9,500 பேருக்கு வேலை கிடைத்துள்ளது. தற்போது கொண்டுவரப்படும் புதிய ஆலைக்கான ஒப்பந்தமும் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பே தமிழக அரசிடம் செய்யப்பட்டுள்ளது.

இசட்எஃப் நிறுவனம் தற்போது கமர்சியல் வாகனங்களுக்கான உதிரி பாகங்களை தான் அதிக அளவில் தயாரித்து விற்பனை செய்து வருகிறது. இனி இந்நிறுவனம் பயணிகள் வாகனங்களுக்கான செக்மெண்டிலும் தனது காலடித்தடத்தை எடுத்து வைக்கும் முடிவை எடுத்துள்ளது. முக்கியமாக எலெக்ட்ரிக் வாகனங்களில் தேவையான உதிரி பாகங்களை இந்நிறுவனம் தயாரித்து விற்பனைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளது.

இசட்எஃப் நிறுவனம் தமிழகத்தில் ஆலை அமைப்பதால் தமிழர்களுக்கு வேலை வாய்ப்பு அதிகம் பெருக வாய்ப்புள்ளது. முக்கியமாக அந்த ஆலையை சுற்றியுள்ள பகுதியில் பொருளாதாரம் வளர்ச்சி மிகப் பெரிய அளவில் ஏற்படும் வாய்ப்புள்ளது. இதனால் தமிழ்நாட்டிற்கு மிகப்பெரிய லாபம் மட்டுமல்லாமல் இந்தியாவிற்கே மிகப்பெரிய லாபமாக அமையப் போகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஆட்டோமொபைல் துறையில் தமிழகம் மிக முக்கிய இடத்தை பிடித்துள்ளது. பல ஆட்டோமொபைல் நிறுவனங்கள் சென்னையில் தங்களது ஆலையை அமைக்க தான் அதிக விருப்பம் காட்டி வருகின்றார்கள் பல நிறுவனங்கள் சென்னையை அடிப்படையாகக் கொண்டே தனது வாகனங்களை தயாரித்து வருகிறது சென்னையை அடுத்து ஓசூர் கிருஷ்ணகிரி போன்ற மாவட்டங்களும் இதில் வளர்ந்து வருகின்றன

More from DriveSpark

Article Published On: Thursday, February 15, 2024, 21:30 [IST]
English summary
Zf new plant chennai 1800cr 5000 jobs
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+