இந்த ராசிக்காரங்க கூட மட்டும் வண்டில போயிராதீங்க! எங்கயாச்சும் கொண்டு போய் விட்றுவாங்க... அவங்க ஜாதகம் அப்படி!
காலண்டரிலும், செய்திகளிலும் ராசி பலன் பார்த்த பிறகுதான், நிறைய பேர் தங்கள் வேலைகளை தொடங்குவார்கள். தங்கள் ராசிக்கு (Zodiac Sign) அன்றைய நாள் எப்படி இருக்கும்? என்பதை பொறுத்தே அவர்களின் செயல்பாடுகள் அமையும். ஜாதகம் (Horoscope) மற்றும் ஜோதிடம் (Astrology) ஆகியவற்றில் ஒரு சிலருக்கு நம்பிக்கை இல்லாமல் இருக்கலாம்.
ஆனால் இவற்றை மிகவும் தீவிரமாக நம்பக்கூடிய பலர் இருக்கின்றனர். அவர்கள் வாழ்க்கையில் எடுக்கும் அனைத்து முடிவுகளும், ராசி, ஜாதகம் மற்றும் ஜோதிடம் ஆகியவற்றை சார்ந்தே இருக்கும். ஒருவரின் ராசியை வைத்து அவர் எப்படிப்பட்டவர்? என கூற முடியும் என்று ஜோதிடர்கள் கூறுகின்றனர். அதேபோல் ஒருவரின் ராசியை வைத்தே, அவர் எப்படி வாகனங்களை ஓட்டுவார்? என்பதையும் கூற முடியுமாம். எனவே ஒவ்வொரு ராசிக்காரர்களும், எப்படி வாகனங்களை ஓட்டுவார்கள்? என்பதை 2 பகுதிகளாக வழங்குகிறோம். இது முதல் பகுதி.

மேஷம் (Aries)
மேஷ ராசிக்காரர்கள் நெருப்பு போன்றவர்கள். அவர்கள் உற்சாகமாகவும், சுறுசுறுப்பாகவும் வாழ்க்கையை வாழ கூடியவர்களாம். மேஷ ராசிக்காரர்கள் வாகனங்களை தைரியமாக ஓட்டுவார்கள் என ஜோதிடர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால் அவர்களின் இந்த தன்னம்பிக்கையும், தைரியமும் சாலையில் மற்ற வாகன ஓட்டிகளுடன் அவர்களை சண்டை போட வைத்து விடுமாம். ஒரு ஆக்ரோஷமான வாகன ஓட்டிக்கான அறிகுறிகளை, மேஷ ராசிக்காரர்கள் வெளிப்படுத்துவார்கள் என ஜோதிடர்கள் கூறுகின்றனர்.
ரிஷபம் (Taurus)
ரிஷப ராசிக்காரர்கள் தீர்மானமிக்கவர்களாக இருப்பார்களாம். அதாவது தங்கள் இலக்குகளில் அவர்கள் மிகவும் உறுதியாக இருப்பார்கள். எனவே சாலையில் அவர்கள் மிகவும் கவனமாக வாகனம் ஓட்டுவார்களாம். ஓட்டுனர் இருக்கையில் இருக்கும்போது, அவர்களின் கவனம் சிதற வாய்ப்புகளே இல்லையாம். ஆனால் சில சமயங்களில் அவர்கள் பிடிவாதமாகவும், தங்களுக்கே சொந்தம் என்ற 'பொஷஷிவ்னெஸ்' உடனும் இருப்பார்களாம். எனவே அவர்களின் இடத்தில் நீங்கள் வாகனத்தை நிறுத்தி விட்டால், அவர்கள் உங்கள் மீது கோவப்படக்கூடும்.
மிதுனம் (Gemini)
மிதுன ராசிக்காரர்கள் ஆர்வம் உள்ளவர்களாகவும், கலகலப்பானவர்களாகவும் இருப்பார்களாம். எனவே வாகனம் ஓட்டும்போது அவர்கள் மிகவும் அரிதாகதான் சோர்வடைவார்களாம். சோர்வடைய மாட்டார்கள் என்றாலும் மிதுன ராசிக்காரர்கள் சாலை விபத்துக்களை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் மிகவும் அதிகமாம். பேசுவதில் அவர்களுக்கு இருக்கும் அதிக ஆர்வம்தான் இதற்கு காரணம் என ஜோதிடர்கள் கூறுகின்றனர். அதாவது பேசி கொண்டே வருவார்கள் என்பதால், வாகனம் ஓட்டும்போது அவர்களின் கவனம் சிதறி விபத்துக்கள் நிகழலாம் என கூறப்படுகிறது.
எனவே மிதுன ராசிக்காரர்களுடன் வாகனத்தில் செல்லும்போது கவனமாக இருக்க வேண்டும் என ஜோதிடர்கள் கூறுகின்றனர். ஒருவேளை மிதுன ராசிக்காரர்கள் தனியாக வாகனம் ஓட்டினால், செல்போனில் நண்பர்கள், குடும்பத்தினர் என யாருடனாவது பேசி கொண்டே செல்வார்களாம். இதை அவர்கள் தவிர்த்து விடுவது நல்லது. அதே சமயம் மிதுன ராசிக்காரர்கள் வாகனம் ஓட்டவில்லை என்றால், டிரைவரை விழிப்புடன் வைத்திருப்பார்களாம். பேசுவதில் அவர்களுக்கு இருக்கும் ஆர்வம்தான் இதற்கு காரணம். இதன் மூலம் மிதுன ராசிக்காரர்கள் அதிக நண்பர்களை உருவாக்குவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
கடகம் (Cancer)
நேரத்தை ஈடுகட்டுவதற்காக, கடக ராசிக்காரர்கள் ஆபத்தான முறையில் வாகனம் ஓட்ட மாட்டார்களாம். அத்துடன் கடக ராசிக்காரர்கள் பொறுப்பானவர்களாகவும், நம்பிக்கைக்கு உரியவர்களாகவும் இருப்பார்களாம். எனவே சீட் பெல்ட் அணிவது உள்பட போக்குவரத்து விதிமுறைகளை அவர்கள் முறையாக பின்பற்றுவார்களாம். ஆனால் அதிக பொறுப்புணர்வுடன் இருப்பதால், அவர்கள் மிகவும் 'சென்சிடிவ்' என கூறப்படுகிறது. சிறு விமர்சனத்தை கூட கடக ராசிக்காரர்கள் தாங்கி கொள்ள மாட்டார்களாம்.
சிம்மம் (Leo)
சிம்ம ராசிக்காரர்கள், துணிச்சல் மிக்கவர்கள் மற்றும் தன்னம்பிக்கை உடையவர்கள் கூறப்படுகிறது. தமிழக முன்னாள் முதல்வர் மறைந்த ஜெயலலிதா கூட சிம்ம ராசியில் பிறந்தவர்தான். இதனால்தான் பெண்ணாக இருந்தாலும், அவரால் தைரியமாக செயல்பட முடிந்தது என்பார்கள். சரி, விஷயத்திற்கு வருவோம். சிம்ம ராசிக்காரர்களுக்கு தலைமை பண்பு அதிகமாக இருக்கும். எல்லாவற்றிலும் தாங்களே முதலிடத்தில் இருக்க வேண்டும் என சிம்ம ராசிக்காரர்கள் விரும்புவார்களாம்.
எனவே வாகனம் ஓட்டும்போது, மற்றவர்களை முந்தி செல்வதில் அவர்கள் அதிக ஆர்வம் காட்டுவார்களாம். இதனாலும் சாலை விபத்துக்கள் நிகழலாம். அதேபோல் சிம்ம ராசிக்காரர்களுக்கு தங்களை அழகாக வைத்து கொள்வதிலும் ஆர்வம் அதிகமாம். அவர்கள் வாகனம் ஓட்டும்போது அடிக்கடி கண்ணாடியை பார்த்து கொண்டிருப்பார்கள் என ஜோதிடர்கள் கூறுகின்றனர். இதுவும் விபத்துக்களை ஏற்படுத்தலாம். எனவே சிம்ம ராசிக்காரர்களுடன் வாகனத்தில் பயணிக்கும்போதும் கவனமாக இருக்க வேண்டும் என்பது ஜோதிடர்களின் அறிவுரை.
கன்னி ராசி (Virgo)
கன்னி ராசிக்காரர்கள், மிகவும் கவனமான டிரைவர்களாக இருப்பார்களாம். வாகனம் ஓட்டும்போது, ஏதாவது ஆபத்து வருகிறதா? என உற்று நோக்கி கொண்டே இருப்பார்கள் எனவும் ஜோதிடர்கள் கூறுகின்றனர். எனவே கன்னி ராசிக்காரர்களுடன் வாகனத்தில் நம்பி செல்லலாம் என்பது ஜோதிடர்களின் கருத்து. இந்த முதல் பகுதியில் 6 ராசிகளை பார்த்து விட்டோம். எஞ்சிய 6 ராசிக்காரர்களின் டிரைவிங் சுபாவம் எப்படி இருக்கும்? என்பதை இரண்டாவது பகுதியில் பார்க்கலாம். இரண்டாவது பகுதி நாளை வெளியாகும்.


Click it and Unblock the Notifications








