இவரு நெனச்சா 10 ரோல்ஸ் ராய்ஸ் காரை ஒரே நேரத்துல இறக்க முடியும்! ஆட்டோவை ஓட்டிட்டு வந்தது அவ்ளோ பெரிய மனுசனா!!
பெரிய பெரிய மனுஷங்க சின்னதா எத செஞ்சாலும் ரொம்ப சுலபமாக டிரெண்டாகிட்றாங்க. அந்தவகையிலேயே பிரபல நிறுவனத்தின் சிஇஓ ஒருவர் ஆட்டோவை ஓட்டியதன் வாயிலாக தற்போது இணையத்தில் டிரெண்டாகி இருக்கின்றார். அவர் யார்? அவர் ஓட்டி வந்தது என்ன ஆட்டோ? என்பது போன்ற சுவாரஷ்ய விபரங்களையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாங்க விரிவான பதிவிற்குள் போகலாம்.
இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனங்களில் ஜோஹோ (Zoho)-வும் ஒன்றாகும். இந்த நிறுவனத்தின் சிஇஓ (CEO)-வும், உலக பணக்காரர்களில் ஒருவருமான ஸ்ரீதர் வேம்பு, இவரே அந்த ஆட்டோவை ஓட்டி வந்தவர். ஆட்டோவை ஓட்டி தற்போது ஒட்டுமொத்த இணைய உலகின் ஹாட் டாபிக்காக மாறிவிட்டார். வித்தியாசமான வாகன கலெக்கசனுக்கு பெயர் போனவராக ஸ்ரீதர் வேம்பு அறியப்படுகின்றார்.

இவரிடத்தில் சைக்கிள்கூட உள்ளது. பல கோடி மதிப்புள்ள சொத்துக்களுக்கு அதிபதியான இவர் சில நேரங்களில் அந்த சைக்கிளிலும் வலம் வருவதுண்டு. அவருடைய சொந்த ஊரிலேயே இந்த அரிய சம்பவத்தை எல்லாம் பார்க்க முடியும். இந்தநிலையிலேயே தான் ஓர் வித்தியாசமான செல்வந்தர் என்பதை அவர் மீண்டும் உறுதிப்படுத்தி இருக்கின்றார்.
அவருடைய சமீபத்திய எக்ஸ் பதிவின்படி, மோந்த்ரா எலெக்ட்ரிக் ஆட்டோ (Montra Electric Auto)-வை ஸ்ரீதர் வேம்பு வாங்கி இருப்பது தெரிய வந்திருக்கின்றது. பொதுவாக பெரும் பணக்காரர்கள் என்றாலே ரோல்ஸ் ராய்ஸ், ஆடி, பிஎம்டபிள்யூ கார்களைதான் வாங்குவார்கள் என்று நம்மில் பலர் நினைத்துக் கொண்டிருக்கின்றோம்.

செல்வந்தர்களும் லக்சூரி வாகனங்களை பயன்படுத்தி வருகின்றனர். மேலும், வாங்கிக் கொண்டும் இருக்கின்றனர். இந்த மாதிரியான சூழ்நிலையிலேயே, ஸ்ரீதர் வேம்பு ஆட்டோவை வாங்கி இருக்கின்றார். இந்த தகவலே இணையத்தில் மிகப் பெரிய பேசு பொருளாக மாறி இருக்கின்றது. அவர் வாங்கி இருப்பது தமிழகத்தைச் சேர்ந்த டிஐ க்ளீன் மொபிலிட்டி (Ti Clean Mobility) நிறுவனத்துடைய தயாரிப்பாகும்.
இந்த நிறுவனம் முருகப்பா குழுமத்தின் (Murugappa Group) ஓர் அங்கம் என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த நிறுவனமே கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் மோந்த்ரா எலெக்ட்ரிக் ஆட்டோவை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. இந்திய சந்தையில் இந்த எலெக்ட்ரிக் ஆட்டோ ரூ. 3.02 லட்சத்திற்கும் குறைவான விலையிலேயே விற்பனைக்குக் கிடைக்கின்றது.
இது ஆரம்ப நிலை தேர்வின் விலை மட்டுமே ஆகும். இதன் அதிகபட்ச விலை ரூ. 3.50 லட்சம் என்பது குறிப்பிடத்தகுந்தது. அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் விலைகள் மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது. இத்தகைய மலிவு விலை ஆட்டோவையே ஸ்ரீதர் வேம்பு தற்போது வாங்கி இருக்கின்றார்.
இந்த எலெக்ட்ரிக் ஆட்டோவில் ஓர் முழு சார்ஜில் 203 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். இந்த சூப்பரான ரேஞ்ஜ் திறனுக்காக 10 kW லித்தியம் அயன் பேட்டரி பேக் வழங்கப்பட்டு இருக்கின்றது. இதுபோன்று இன்னும் பல சிறப்புகளை மோந்த்ரா எலெக்ட்ரிக் ஆட்டோ தனக்குள் தாங்கி இருக்கின்றது.
அத்துடன், தனித்துவமான லுக், அட்டகாசமான தொழில்நுட்ப அம்சங்களையும் இந்த எலெக்ட்ரிக் ஆட்டோ கொண்டிருக்கின்றது. இதனால்தான் தனி நபர் பயன்பாட்டாளர்களையும் இந்த ஆட்டோ தன் வசம் கவர்ந்துக் கொண்டிருக்கின்றது. இதற்கு சான்றாகவே ஸ்ரீதர் வேம்பு இந்த எலெக்ட்ரிக் ஆட்டோவை வாங்கி இருப்பது அமைந்திருக்கின்றது.
இந்த எலெக்ட்ரிக் ஆட்டோவின் டாப் ஸ்பீடு மணிக்கு 55 கிமீ ஆகும். இந்த எலெக்ட்ரிக் ஆட்டோவில் கம்ஃபோர்ட்டான ரைடு அனுபவத்திற்காக டபுள்-ஃபோர்க் சஸ்பென்ஷன் முன் பக்கத்திலும், கார்களில் வழங்கப்படுவதைப் போன்ற மிகவும் மிருதுவான குஷன் இருக்கைகளும் வழங்கப்பட்டிருக்கின்றன. இதுதவிர, பார்க் அசிஸ்ட் மோட், பெரிய பூட் ஸ்பேஸ், டெலிமேட்டிக்ஸ் மற்றும் செயலி வசதி ஆகியவையும் மோந்த்ரா எலெக்ட்ரிக் ஆட்டோவில் வழங்கப்பட்டு இருக்கின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஸ்ரீதர் வேம்பு இன்னும் எளிமையான வாகனங்களை தன் வசம் வைத்திருக்கின்றார். அந்தவகையல் சமீபத்தில் டாடாவின் அதிகம் விற்பனையாகும் எலெக்ட்ரிக் கார் மாடலான டாடா நெக்ஸான் இவி-யை அவர் பயன்படுத்தி வருகின்றார். இது இந்தியாவில் 14.49 லட்சம் ரூபாய் என்கிற ஆரம்ப விலையில் இருந்து விற்பனைக்குக் கிடைக்கிறது. இதில் ஓர் முழு சார்ஜில் 300க்கும் அதிகமான கிமீ தூரம் பயணிக்க முடியும்.


Click it and Unblock the Notifications








