ஷாக்! குதிரையில் போய் சாப்பாட்டை குடுத்த ஜொமோட்டோ ஊழியர்! உண்மையான காரணம் தெரிஞ்சதும் ஆடிப்போன மக்கள்!

ஸ்விக்கி (Swiggy) மற்றும் ஜொமோட்டோ (Zomato) ஆகிய செயலிகள் மூலம் உணவு ஆர்டர் செய்து சாப்பிடும் கலாச்சாரம் அதிகரித்து வருகிறது. சற்று அதிக செலவு ஆனாலும் கூட, இது சௌகரியமாக இருப்பதாக பயனர்கள் தெரிவிக்கின்றனர். எனவே சாலைகள் முழுக்க ஸ்விக்கி, ஜொமோட்டோ டீ-ஷர்ட் அணிந்த ஊழியர்களை நம்மால் அதிகளவு காண முடிகிறது.

ஸ்விக்கி, ஜொமோட்டோ ஊழியர்கள் பெரும்பாலும் டூவீலர்களை (Two Wheelers) பயன்படுத்திதான் உணவு டெலிவரி செய்கின்றனர். ஒரு சிலர் சாதாரண டூவீலர்களை பயன்படுத்தும் நிலையில், ஒரு சிலர் மிகவும் விலை உயர்ந்த பைக்குகளை பயன்படுத்துகின்றனர். விலை உயர்ந்த பைக்குகளில் ஸ்விக்கி, ஜொமோட்டோ ஊழியர்கள் உணவு டெலிவரி செய்யும் வீடியோக்கள் கடந்த காலங்களில் வெளியாகியுள்ளன.

Zomato Agent Rides Horse To Deliver Order In Hyderabad

ஆனால் தற்போது வெளியாகியுள்ள ஒரு வைரல் வீடியோ (Viral Video), அனைவரது புருவங்களையும் உயர்த்தியுள்ளது. இந்த வீடியோவில், ஜொமோட்டோ ஊழியர் ஒருவர் குதிரையில் (Horse) உணவு டெலிவரி செய்ய செல்வதை நம்மால் பார்க்க முடிகிறது. இந்த அரிய நிகழ்வு, ஐதராபாத் (Hyderabad) நகரில் நடைபெற்றுள்ளது.

இது நாள் வரை சாதாரண பெட்ரோல் டூவீலர்கள் மற்றும் விலை உயர்ந்த டூவீலர்களில் உணவு டெலிவரி செய்யப்படுவதை மட்டுமே பார்த்து கொண்டிருந்த மக்களுக்கு, இந்த வீடியோ ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. உண்மையில் சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும் என்பதற்காகவும், செலவை குறைக்க வேண்டும் என்பதற்காகவும், எலெக்ட்ரிக் டூவீலர்களில் (Electric Two Wheelers) கூட பலர் உணவு டெலிவரி செய்கின்றனர்.

Petrol Pump

எனவே இந்த நபரும், சுற்றுச்சூழலை பாதுகாப்பது மற்றும் பெட்ரோல் செலவை குறைப்பது ஆகிய நோக்கங்களுக்காக குதிரையில் உணவு டெலிவரி செய்திருக்கலாம் என்றுதான் பலரும் நினைத்து கொண்டிருந்தனர். ஆனால் இந்த சம்பவம் நடந்ததற்கான உண்மையான காரணமே வேறு. பெட்ரோல் (Petrol), டீசலுக்கான (Diesel) தட்டுப்பாடுதான் இதற்கு காரணம்.

அதாவது சாலை விபத்துக்களை (Road Accidents) ஏற்படுத்துவோருக்கு, மிகவும் கடுமையான தண்டனைகள் வழங்கும் வகையில், குற்றவியல் சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. இதை கண்டித்து லாரி டிரைவர்கள் தற்போது வேலை நிறுத்த போராட்டத்தில் (Truckers Strike) ஈடுபட்டு வருகின்றனர். லாரி டிரைவர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டால், பொருட்களின் இடமாற்றம் முடங்கி விடும்.

இதன்படி நாட்டின் பல்வேறு இடங்களில் தற்போது பெட்ரோல் மற்றும் டீசலுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. வாகன உரிமையாளர்கள் பலர் எரிபொருள் கிடைக்குமோ? கிடைக்காதோ? என்ற அச்சத்தில், பெட்ரோல் பங்க்குகளுக்கு (Petrol Pumps) படையெடுத்து வருவதை நாம் பார்த்து வருகிறோம். இதன் எதிரொலியாக பெட்ரோல் பங்க்குகளில் எரிபொருள் நிரப்ப நீண்ட நேரம் எடுக்கிறது.

ஐதராபாத் நகரிலும் இந்த பிரச்னை தற்போது நிலவி வருகிறது. இதன் காரணமாகவே இந்த ஜொமோட்டோ ஊழியர் குதிரையில் சென்று உணவு டெலிவரி செய்துள்ளார். இவரது இந்த முயற்சி வித்தியாசமானதாக இருந்தாலும் கூட, சுற்றுச்சூழலை பாதுகாக்கும் என்பதால், சமூக வலை தளங்களில் பலரும் அவருக்கு பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: குதிரை போன்ற விலங்குகளை பார்ப்பது தற்போதெல்லாம் அரிதான ஒரு விஷயமாக மாறி விட்டது. இப்படிப்பட்ட ஒரு சூழலில் இந்த ஜொமோட்டோ ஊழியர் குதிரையில் சென்று உணவு டெலிவரி செய்திருப்பது, வழக்கத்திற்கு மாறான ஒரு விஷயம் என்பதால், எங்களுக்கும் ஆச்சரியத்தைதான் ஏற்படுத்துகிறது.

ஆனால் இது அவசர யுகம் என்பதாலும், சாலைகளில் போக்குவரத்து சூழல்கள் வேகமாக மாறி வருகிறது என்பதாலும், குதிரை போன்ற விலங்குகளை பயன்படுத்தி உணவு டெலிவரி செய்வது என்பதையெல்லாம் தொடர்ச்சியாக பின்பற்ற முடியுமா? என்பது மிகப்பெரிய சந்தேகம்தான். ஏனெனில் இதில் நிறைய நடைமுறை சிக்கல்கள் இருக்கின்றன.

More from DriveSpark

Article Published On: Wednesday, January 3, 2024, 13:08 [IST]
English summary
Zomato agent rides horse to deliver order in hyderabad viral video
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+