வெளியே ஒரு வேஷம், உள்ளே லக்சரியான வாழ்க்கை! இந்தியாவில் யாரிடமும் இந்த கார் இல்லை!!
சொகுசு கார்களை நம் நாட்டிலும் நிறைய கஸ்டமர்கள் தொடர்ந்து வாங்குகின்றனர். அதாவது, விலையுயர்ந்த கார்களை வாங்குவதற்கும் நம் நாட்டில் நிறைய பேர் இருக்கின்றனர். ஆனால், அவர்கள் வாங்கும் பெரும்பாலான கார்கள் எல்லாம் மெர்சிடிஸ்-பென்ஸ், பிஎம்டபிள்யூ, ஆடி கார்களாகவே இருக்கும். அல்லது, லேண்ட் ரோவர் டிஃபெண்டர், ரேஞ்ச் ரோவர் கார்களில் தான் நம் இந்திய பணக்காரர்களின் ஆர்வம் உள்ளது. மிகவும் சிலர் மட்டுமே ஃபெராரி, அஸ்டன் மார்டீன் (Aston Martin) போன்ற கார்களை வாங்குகின்றனர். அத்தகையவர்களுள் ஒருவர்தான் சொமாடோ சிஇஓ தீபிந்தர் கோயல் ஆவார்.
இந்தியாவில் குறுகிய காலத்தில் மிக அசூர வளர்ச்சி அடைந்த செல்வந்தவர்களுள் ஒருவராக தீபிந்தர் கோயலை சொல்லலாம். மொபைல் போன் மற்றும் இணையத்தின் வளர்ச்சியை நன்கு பயன்படுத்திக் கொண்டவர்களில் தீபிந்தர் கோயலும் ஒருவராவார். 2008ஆம் ஆண்டில் ஃபுடிபே என்கிற பெயரில் ஆரம்பிக்கப்பட்ட இவரது ஆன்லைன் உணவு டெலிவிரி நிறுவனம் 2010க்கு பிறகு சொமாடோ என மாற்றப்பட்டது.

தற்போது 4,440 பணியாளர்களுடன் பிளிங்கிட், ஹைப்பர் ப்யூர் போன்ற துணை நிறுவனங்களை கொண்டதாக சொமாடோ விளங்குகிறது. இந்தியாவின் அனைத்து கிராமங்கள் வரையில் டெலிவிரி நெட்வொர்க்கை கொண்டுள்ள சொமாடோவை தீபிந்தர் கோயல் மட்டும் தனியாக துவங்கவில்லை. அவருடன் சேர்த்து மொத்தம் 4 பேரால் இந்த நிறுவனம் துவங்கப்பட்டது. இத்தனை வருடங்களில் தீபிந்தர் கோயல் சொமாடோ நிறுவனத்திற்காக கடினமாக உழைத்துள்ளார்.
டெலிவிரி ஆட்கள் எதிர்கொள்ளும் சவால்களை நேரடியாக தெரிந்துக் கொள்ள, சிலமுறை டெலிவிரி பாய் வேலையை கூட தீபிந்தர் கோயல் பார்த்துள்ளார். அவ்வாறு கடின உழைப்பை போட்டு முன்னுக்கு வந்துள்ள தீபிந்தர் கோயல் ஓர் கார் பிரியர் ஆவார். இவர் வாங்கும் கார்களை எல்லாம் பார்த்தால், வேறு யாரிடமும் இல்லாத அரிதான கார்களாக இருக்கும். அந்த வகையில் தற்போது புதியதாக ஒரு அஸ்டன் மார்டீன் காரை தீபிந்தர் கோயல் வாங்கியுள்ளார்.

டெல்லிக்கு அருகே குர்கானில் உள்ள தீபிந்தர் கோயலின் வீடு அருகே முற்றிலும் கருப்பு நிறத்திலான அவரது புதிய அஸ்டன் மார்டீன் கார் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் போட்டோக்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன. சொமாடோ சிஇஓ வாங்கியிருப்பது அஸ்டன் மார்டீனின் வாண்டேஜ் (Vantage) கார் ஆகும். இது தீபிந்தர் கோயல் வாங்கியுள்ள 2வது அஸ்டன் மார்டீன் கார் ஆகும்.
முன்னதாக, கடந்த மார்ச் மாதத்தில்தான் அஸ்டன் மார்டீன் டிபி12 காரை இவர் வாங்கி இருந்தார். இந்தியாவிலேயே புதிய அஸ்டன் மார்டீன் வாண்டேஜ் காரை வாங்கியுள்ள முதல் கஸ்டமர் சொமாடோ சிஇஓ என கூறப்படுகிறது. ஏனெனில், அஸ்டன் மார்டீன் நிறுவனம் மேம்படுத்தப்பட்ட புதிய வாண்டேஜ் காரை கடந்த ஆகஸ்ட் மாதத்தில் தான் இந்தியாவில் அறிமுகம் செய்தது.
ஆனால், இந்த காரை இந்தியாவில் புக் செய்தவர்களுக்கு டெலிவிரி கொடுக்கும் பணிகள் அக்டோபரில் இருந்துதான் துவங்கப்பட்டன. இந்த காரின் ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலையாக ரூ.3.99 கோடி உள்ளது. வாண்டேஜ் ஆனது அஸ்டன் மார்டீன் நிறுவனத்தின் 2-டோர் கூபே கார் ஆகும். புதிய அப்டேட் செய்யப்பட்ட வாண்டேஜ் காரின் வெளிப்பக்க தோற்றம் முழுவதுமாக மேம்படுத்தப்பட்டுள்ளது.
காரின் முன்பக்கத்தில் நன்கு பெரிய அளவில் க்ரில், ஹை-பெர்ஃபார்மன்ஸ் எல்இடி ஹெட்லேம்ப்கள், 21-இன்ச்சில் அலாய் சக்கரங்கள், பின்பக்கத்தில் டிஃப்யூஸர் உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன. அதேபோல், காருக்குள் கேபினின் தோற்றத்தையும் மேம்படுத்தியது மட்டுமில்லாமல், மெர்சிடிஸ் நிறுவனத்தின் என்ஜினை வழங்கியுள்ளனர். இந்த காரில் 4.0 லிட்டர் ட்வின்-டர்போ வி8 என்ஜின் பொருத்தப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இவ்வாறான ஒரு அஸ்டன் மார்டீன் காரை முழுவதும் கருப்பு நிறத்தில் வாங்க வேண்டும் என்பது நம்மில் நிறைய பேருக்கு கனவு ஆகும். ஆனால், தீபிந்தர் கோயல் அதனை அசால்ட்டாக நிஜமாக்கி வருகிறார். இன்ஸ்டாகிராமில் தெரிவிக்கப்பட்டுள்ள விபரங்களை வைத்தே இது தீபிந்தர் கோயலின் அஸ்டன் மார்டீன் கார் என்கிறோம். மற்றப்படி, இது அவரது கார் தானா என்பது உறுதியாக தெரியவில்லை.
Image Source: Automobiliardent


Click it and Unblock the Notifications








