கலர் மட்டும்தான் வேற! 9 கோடி ரூபா கார 2வது தடவையா வாங்கனது அவரா! எல்லாம் நீங்க கஷ்டப்பட்டு சம்பாரிச்ச காசுதான்

இந்தியாவில் மிகவும் விலை உயர்ந்த கார்களை வாங்குபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. குறிப்பாக ஒரு சிலர் வாங்கிய காரையே மீண்டும் மீண்டும் வாங்கி வருகின்றனர். இதற்கு முகேஷ் அம்பானி (Mukesh Ambani) குடும்பம் ஒரு உதாரணம். அவர்களிடம் 10 ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் (Rolls Royce Cullinan) கார்கள் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த வரிசையில் இந்தியாவின் மற்றொரு பிரபலமான தொழில் அதிபர் ஒருவர், வாங்கிய காரையே தற்போது மீண்டும் ஒரு முறை வாங்கியுள்ளார்.

அது மிகவும் விலை உயர்ந்த பென்ட்லீ கான்டினென்டல் ஜிடி டபிள்யூ12 முல்லினர் (Bentley Continental GT W12 Mulliner) ஆகும். இதன் ஆன்-ரோடு விலை (On-Road Price) 9 கோடி ரூபாய்க்கும் மேல் வரும். இவ்வளவு விலை உயர்ந்த காரை மீண்டும் மீண்டும் வாங்கி கொண்டுள்ள தொழில் அதிபரிடம் மேலும் பல விலை உயர்ந்த கார்கள் எல்லாம் இருக்கின்றன.

Zomato CEO Deepinder Goyal Buys 2nd Bentley Continental GT W12 Mulliner

இதில், அஸ்டன் மார்ட்டின் டிபி12 (Aston Martin DB12), ஃபெராரி ரோமா (Ferrari Roma), லம்போர்கினி உருஸ் (Lamborghini Urus), போர்ஷே 911 கரீரா எஸ் (Porsche 911 Carrera S) மற்றும் போர்ஷே 911 டர்போ எஸ் (Porsche 911 Turbo S) போன்றவை எல்லாம் மிகவும் குறிப்பிடத்தக்கவை ஆகும்.

நீங்கள் மிகவும் தீவிரமான கார் ஆர்வலர் என்றால், இந்த கார் கலெக்ஸன் (Car Collection) யாருடையது? என இந்நேரம் கண்டுபிடித்திருப்பீர்கள். ஆம், தீபிந்தர் கோயல் (Deepinder Goyal) பற்றிதான் நாங்கள் பேசி கொண்டுள்ளோம். இவர் ஜொமேட்டோ (Zomato) நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி (CEO) ஆவார்.

Bentley Continental GT W12 Mulliner

ஜொமேட்டோ நிறுவனத்தின் வளர்ச்சியில் தீபிந்தர் கோயலின் பங்களிப்பு மிகவும் பெரியது. இவர் சமீபத்தில் உணவு டெலிவரி ஏஜெண்ட் ஆக மாறி, சாப்பாடுகளை டெலிவரி செய்தார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. இதன் மூலமாக உணவு டெலிவரி ஏஜெண்ட்கள் சந்திக்கும் பிரச்னைகளை அவர் கண்டறிந்தார்.

அந்த பிரச்னைகளுக்கு எல்லாம் தீர்வு காண முயற்சி செய்வதாகவும் அவர் தெரிவித்தார். தன்னுடைய தொழிலை எந்த அளவிற்கு நேசிக்கிறாரோ, அதே அளவிற்கு மிகவும் விலை உயர்ந்த கார்களின் மீது காதல் கொண்டவராகவும் தீபிந்தர் கோயல் அறியப்படுகிறார். இதற்கு அவரது கார் கலெக்ஸனே சாட்சி.

ஏற்கனவே பல்வேறு விலை உயர்ந்த கார்கள் இருக்கும் நிலையில், தற்போது இரண்டாவதாக ஒரு பென்ட்லீ கான்டினென்டல் ஜிடி டபிள்யூ12 முல்லினர் காரை அவர் வாங்கியுள்ளார். அவரது முதல் பென்ட்லீ கான்டினென்டல் ஜிடி டபிள்யூ12 முல்லினர் கார், மொனாக்கோ யெல்லோ கலரில் பெயிண்ட் செய்யப்பட்டுள்ளது.

ஆனால் இரண்டாவது பென்ட்லீ கான்டினென்டல் ஜிடி டபிள்யூ12 முல்லினர் கார், சாட்டீன் ரெட் கலரில் பெயிண்ட் செய்யப்பட்டுள்ளது. ஆனால் இந்த 2வது காரின் உண்மையான கலர் ப்ளூ என கூறப்படுகிறது. ஆனால் அதை சாட்டீன் ரெட் கலருக்கு மாற்றியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த காரில், 6.0 லிட்டர் ட்வின் டர்போ டபிள்யூ12 இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 650 பிஹெச்பி பவர் மற்றும் 900 என்எம் டார்க் திறனை உருவாக்கி, சாலைகளில் சீறி பாய்ந்து செல்லக்கூடிய திறனை பென்ட்லீ கான்டினென்டல் ஜிடி டபிள்யூ12 முல்லினர் கார் பெற்றுள்ளது.

இந்த காரின் இன்ஜின் உடன், 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக இன்ஜின் உருவாக்கும் சக்தியானது, காரின் 4 சக்கரங்களுக்கும் அனுப்பப்படுகிறது. இந்த காரில் ஆல் வீல் டிரைவ் சிஸ்டமும் இருக்கிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: ஜொமேட்டோ தலைமை செயல் அதிகாரியின் கார் கலெக்ஸன் நாளுக்கு நாள் பெரிதாகி கொண்டே செல்கிறது. இந்தியாவில் ஒரு சில தொழில் அதிபர்கள் மட்டுமே கார்கள் மீது பேரார்வம் கொண்டவர்களாக உள்ளனர். அதில், தீபிந்தர் கோயலும் ஒருவராக இருக்கிறார்.

More from DriveSpark

Article Published On: Monday, November 25, 2024, 19:29 [IST]
English summary
Zomato ceo deepinder goyal buys 2nd bentley continental gt w12 mulliner all details here
மேலும்... #celebrity cars #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+